Published:Updated:

டெல்லி நிலவரம்: உயிர் பிழைத்தாலும் இயல்பு வாழ்க்கை கிடைக்குமா?

டெல்லி நிலவரம்
பிரீமியம் ஸ்டோரி
டெல்லி நிலவரம்

ஷிவ் விகார் பகுதியில் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட ராஜ்தானி பள்ளி, கடும் தாக்குதலுக்குள்ளானது. இந்தப் பள்ளியைத் தாக்கியது முஸ்லிம்கள் தரப்பு எனச் சொல்லப்படுகிறது.

டெல்லி நிலவரம்: உயிர் பிழைத்தாலும் இயல்பு வாழ்க்கை கிடைக்குமா?

ஷிவ் விகார் பகுதியில் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட ராஜ்தானி பள்ளி, கடும் தாக்குதலுக்குள்ளானது. இந்தப் பள்ளியைத் தாக்கியது முஸ்லிம்கள் தரப்பு எனச் சொல்லப்படுகிறது.

Published:Updated:
டெல்லி நிலவரம்
பிரீமியம் ஸ்டோரி
டெல்லி நிலவரம்

உருக்குலைந்து கிடக்கிறது வடகிழக்கு டெல்லி. குழந்தைகள், எரிந்துபோன தங்கள் பள்ளிக்கூடப் பைகளை வெறித்துப் பார்க்கிறார்கள். கூடவே அவர்களின் பொம்மைகளும் கருகிக் கிடக்கின்றன. விளையாட்டுச் சாமான்கள்மீது யாருக்கு இவ்வளவு கோபம் என்கிற குழந்தைகளின் கேள்விக்கு பதில் தருவார், அங்கு யாரும் இல்லை. காய்கறிகள், பழங்களுடன் மனிதர்களும் எரிக்கப்பட்டுள்ளார்கள். உயிர்பலி 42-யைத் தொட்டிருக்கிறது. சிகிச்சையில் இருக்கும் பலரும் உயிர் பிழைத்தாலும்கூட அவர்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்!

ஷிவ் விகார் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கார் பார்க்கிங்கில் தீ வைக்கப்பட்டதில் 170 கார்கள் எரிந்துபோயின. வீடுகளும் எரிக்கப்பட்டதால், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். கலவரத்தில் இரண்டு மசூதிகள் கொளுத்தப்பட்டன. மசூதிகளுக்கு வன்முறையாளர்கள் தீயிட்டபோது அந்தப் பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், கடைசி வரை தீயணைப்பு வாகனங்கள் வரவே இல்லை. வக்கிரமான கும்பல் வன்முறை மனநிலைக்கு வந்துவிட்டால், அந்த மோசமான உளவியலுக்கு மதங்கள் பேதமில்லை. டெல்லியில் அதிகமாகத் தாக்கப்பட்டது முஸ்லிம்கள் தரப்புதான் என்றாலும், முஸ்லிம்களில் சில கும்பல்களுமே வன்முறையில் ஈடுபட்டுள்ளன.

ஷிவ் விகார் பகுதியில் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட ராஜ்தானி பள்ளி, கடும் தாக்குதலுக்குள்ளானது. இந்தப் பள்ளியைத் தாக்கியது முஸ்லிம்கள் தரப்பு எனச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த ஹரீந்தர் சிங் என்பவர் கூறுகையில், “பிப்ரவரி 24-ம் தேதி காலை 11.30 மணியளவில் இந்தப் பள்ளிக்கு வந்த முஸ்லிம் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்றுவிட்டனர். இந்து குழந்தைகள் மட்டுமே அங்கே இருந்துள்ளனர். மதியம் 2 மணியளவில் 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அங்கே வந்து வன்முறையில் ஈடுபட்டனர். பள்ளியின் பணியாளர் சங்கீதா என்கிற பெண்மணி, குழந்தைகள் அனைவரையும் புறவாசல் வழியாக அனுப்பி உயிர் தப்பவைத்துள்ளார். இந்தப் பள்ளியில் வன்முறையில் ஈடுபட்ட இந்தக் கும்பல், பிறகு அருகில் இருந்த இந்து அமைப்புக்குச் சொந்தமான டி.ஆர்.பி பள்ளியையும் தாக்கியது” என்றார்.

வடகிழக்கு டெல்லியைப் பொறுத்த வரை, உத்தரப்பிரதேச மக்கள்தான் அதிகம். 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வடகிழக்கு டெல்லியின் மக்கள்தொகை 22 லட்சம். இதில் 68 சதவிகிதம் இந்துக்கள்.

எரிந்துபோன கார்கள்
எரிந்துபோன கார்கள்

30 சதவிகித மக்கள் இஸ்லாமியர்கள். இந்து கோயில், மசூதிகளும் நிறையவே உண்டு. ஷிவ் விகார் பகுதியில் வசிக்கும் மத்திய உள்துறை அமைச்சக முன்னாள் ஊழியரான ஹெச்.கே.சர்மா, “என் வாழ்நாளில் இப்படியொரு கலவரத்தைக் கண்டதில்லை. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளூர் ஆட்கள் அல்ல; வெளியிலிருந்து வந்தவர்கள் என்பது நன்றாகவே தெரிந்தது. அவர்களுக்கு உள்ளூரில் சிலர் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துகளை அடையாளம் காட்டினர்” என்றார்.

டெல்லி போலீஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாநகரின் சட்டம் ஒழுங்கும் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. வன்முறை நடந்த நாள்களில் போலீஸாரால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், டெல்லி போலீஸ் மீது நம்பிக்கை இழந்த பிரதமர் மோடி, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை களம் இறக்கினார். அவர், கலவரப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்தார். அடுத்தடுத்த இருதரப்பினரின் முக்கியப் புள்ளிகளைச் சந்தித்துப் பேசினார். அஜித் தோவலின் திட்டமிட்ட உறுதியான நடவடிக்கைகளால்தான் தற்போது டெல்லியில் அமைதி நிலவுகிறது. வடகிழக்கு டெல்லியின் மூலைமுடுக்கெல்லாம் தற்போது சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மொத்த நகரமும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது. டெல்லி கலவரம், நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் எதிரொலித்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டெல்லியில் மட்டுமல்ல... நாட்டின் எந்த ஒரு பகுதியில் கலவரம் நடந்தாலும் அது நாட்டுக்கு ஆபத்தே. அரசியல், மதம், சாதி என்று பலவேறு காரணங்களை கற்பித்துக்கொண்டு நம்மிடையே ஊடுருவி கலவரங்களை விதைப்பவர்கள் அனைவருமே தேசவிரோதிகள்தான். ஆனால், அது அவர்களுக்கெல்லாம் வருமானத்துக்கான மற்றுமொரு வழி. அத்தகையோரின் வலைகளில் விழாமல் தப்பிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது. அவர்களால் விதைக்கப்படும் விரோதத்தை விதைக்கும் பேச்சுகளையும், விஷச் செய்திகளையும் பகிராமல் இருக்க வேண்டியதும் நம் அனைவரின் கடமையே!