கொரோனா பரவுவதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள ஆறு கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் இன்னலில் சிக்கியிருக் கின்றன.

இந்த நிறுவனங்கள்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுவந்த சுமார் 25 கோடி பேர், இன்று வேலை இல்லாததால் வருமானமின்றித் தவித்துவருகிறார்கள். இந்த நிலையில், ‘ஊரடங்கு தளர்த்தப் பட்டாலும் உடனடியாக தொழிலைத் தொடங்கி வருமானம் எடுப்பது சாதாரண விஷயமல்ல. புதிதாக தொழில் தொடங்குவதுபோல் ஆரம்பத்திலிருந்து அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அதனால், அரசாங்கம்தான் எங்கள் தொழிலைக் காப்பாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தென்னிந்திய வேலை அளிப்போர் கூட்டமைப்பினர், ‘‘கடும் நிதிச்சுமை இருந்தாலும், மத்திய-மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு மார்ச் மாதச் சம்பளத்தை வழங்கி விட்டனர். ஆனால் ஒரு ரூபாய்கூட வருமானம் இல்லாத நிலையில், ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்குவது இயலாத விஷயமாகிவிட்டது. சம்பளம் கிடைக்காத தொழிலாளர்கள், நிறுவனங்கள்மீது வழக்குகள் தொடர்ந்தால், தொழிற்சாலைகள் பல பிரச்னை களைச் சந்திக்க நேரும். அதனால், சம்பளப் பிரச்னைகளுக்கு இணக்கமான தீர்வுகாண, தமிழக அரசு உதவ வேண்டும். அப்போதுதான் ஊரடங்கு முடிந்தாலும் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க முடியும்’’ என்றனர்.

‘‘ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கு, வங்கிகள் 8 சதவிகித வட்டியில் கடன் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு செலுத்த வேண்டிய வங்கிக்கடன் தவணைகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து செலுத்த அனுமதிக்க வேண்டும். தொழில் செய்பவர்களுக்கு 3 சதவிகித வட்டியில் நகைக்கடன் தர வேண்டும். உரிமை கோராத இ.எஸ்.ஐ நிதிமூலம் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க உதவ வேண்டும். அனைத்து தொழில்களுக்கும் ஜி.எஸ்.டி வரி 5 சதவிகிதம் என அறிவிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைக்கிறார்கள், தென்னிந்திய தொழில் வர்த்தகச் சங்கத்தினர்.

‘‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் களில் ஈடுபட்டு வருபவர் களின் கோரிக்கை களுக்குச் செவி சாய்க்க வேண்டும்’’ என, தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திவரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் பேசினோம். ‘‘கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கால், நாட்டில் அனைத்து வகையான தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள இத்தகைய தொழில் நிறுவனங்களில் 15 சதவிகித அளவு நிறுவனங்கள், அதாவது 7 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் தமிழகத்தில்தான் இருக்கின்றன. இவற்றால்தான் இந்திய அளவில் ஏற்றுமதியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தின் பொருளாதாரத்துக்கு இவை முக்கியப் பங்களிப்பை அளிக்கின்றன. அதேபோல் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு அளித்துவருவதும் இந்தத் தொழில் நிறுவனங்கள்தான். அதனால், இக்கட்டான இந்த நேரத்தில் இவற்றை மாநில அரசுதான் தாங்கிப்பிடிக்க வேண்டும்.

இந்தத் தொழில் நிறுவனங்கள் மீண்டும் நல்ல முறையில் செயல்படுவதற்கான நிதி ஆதாரங்களை மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும். வங்கிகள் இந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல், தவணை செலுத்துதல் மற்றும் வட்டிவிகிதம் உள்ளிட்டவற்றில் சலுகைகள் அளிக்க வேண்டும். மின்சாரக் கட்டணம், சொத்துவரி, தொழில்வரி, உரிமக் கட்டணம் மற்றும் அனைத்து வகையான சட்டபூர்வ கட்டணங்களையும் செலுத்துவதற்கு, மீண்டும் தொழில் ஆரம்பிக்கும் நாளிலிருந்து ஒரு மாத கால அவகாசத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். வங்கிக் கடன்களுக்கு பிணை வைக்கப்படும் சொத்து குறித்த ஆவணங்களைப் பதிவுசெய்வதற்கான கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நெருக்கடியிலிருந்து மீளும் வகையில் தமிழக அரசு ‘கிரான்ட்’ வழங்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாகவே பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி மற்றும் வேறு பல பிரச்னைகளால் 50,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் மூடப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு, மேலும் மோசமான நிலையை உருவாக்கிவிட வாய்ப்புகள் அதிகம். குறு, சிறு தொழில் நிறுவனங்கள் இல்லையென்றால், வேலைவாய்ப்பு இல்லாமல் மக்களிடம் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அதனால், தமிழக அரசு உடனே இதில் தனிக்கவனம் செலுத்தி, தள்ளாடிக்கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றி வீழ்ந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.

கண்டுகொள்ளுமா தமிழக அரசு?