Published:Updated:

சென்னையை அச்சுறுத்தும் பேனர்கள்! - அசம்பாவிதத்துக்கு முன்பாக அப்புறப்படுத்துமா அரசு?

பேனர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பேனர்கள்

. மதுரவாயலில் ஒற்றை இரும்புக்கம்பியில் இரண்டு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மிகப்பெரிய பேனர்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

சென்னையை அச்சுறுத்தும் பேனர்கள்! - அசம்பாவிதத்துக்கு முன்பாக அப்புறப்படுத்துமா அரசு?

. மதுரவாயலில் ஒற்றை இரும்புக்கம்பியில் இரண்டு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மிகப்பெரிய பேனர்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

Published:Updated:
பேனர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பேனர்கள்

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் விளம்பர பேனர்கள் வைக்க 2019-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஆனாலும், சமீபகாலமாகத் தடையை மீறி சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விளம்பர பேனர்கள் புற்றீசல்போல முளைத்துவருகின்றன. இதையடுத்து, `பேனர்களால் மீண்டும் உயிரிழப்பு போன்ற அபாயங்கள் ஏற்படும் முன்பாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்’ என்கிற குரல்கள் எழுந்துள்ளன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை முழுவதுமே சாலைகளின் இருபுறங்களிலும் அரசியல் கட்சிகள், வர்த்தக நிறுவனங்களின் பேனர்கள் நீக்கமற ஆக்கிரமித்திருக்கும். இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் பேனர்களை வைக்க 2018, டிசம்பர் மாதம் இடைக்காலத்தடை விதித்தது. ஆனாலும், பேனர் கலாசாரத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை. குறிப்பாக, ஆளுங்கட்சியினரே நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஏராளமான பேனர்களை வைத்தார்கள்.

சென்னையை அச்சுறுத்தும் பேனர்கள்! - அசம்பாவிதத்துக்கு முன்பாக அப்புறப்படுத்துமா அரசு?
சென்னையை அச்சுறுத்தும் பேனர்கள்! - அசம்பாவிதத்துக்கு முன்பாக அப்புறப்படுத்துமா அரசு?

அப்படித்தான் 2019-ல் பள்ளிக்கரணையில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் வைத்த பேனர் திடீரென்று சாலையில் சரிந்து விழுந்ததில் டூ வீலரில் சென்றுகொண்டிருந்த சுப என்ற பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்த சென்னை உயர் நீதிமன்றம், பேனர்களை வைக்க மீண்டும் தடை விதித்ததுடன், வர்த்தகரீதியான பேனர்களை வைப்பதற்கு விதிமுறைகளையும் வகுக்க உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை மாநகரில் விளம்பர பேனர்களை வைக்க விதிமுறைகள் வெளியிடப்பட்டன.

அதன்படி, விளம்பர பேனர்கள் மற்றும் தட்டிகளை அமைக்க மாநகராட்சியிடம் 48 மணி நேரத்துக்கு முன்பாகவே அனுமதி பெற வேண்டும். சென்டர் மீடியனில் பேனர்களை வைக்கக் கூடாது. இரு விளம்பரத் தட்டிகளுக்கு இடையே குறைந்தது 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பேனரின் கீழேயே அதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நாள், அனுமதி எண் இடம்பெற வேண்டும். கால அவகாசம் முடிந்ததும் பேனர்களை அகற்றிவிட வேண்டும். விதிகளை மீறினால் ஓராண்டுச் சிறை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றெல்லாம் விதிமுறைகளை உருவாக்கினார்கள். 2019-ல் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த ஒரு வழக்கிலும், தமிழகத்தில் பேனர்கள் அமைப்பதற்குத் தடைவிதித்தது உச்ச நீதிமன்றம். இப்படிப் பல்வேறு தடை உத்தரவுகள், விதிமுறைகள் இருந்தபோதும் சென்னையில் சமீபகாலமாக பேனர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளன.

சென்னையை அச்சுறுத்தும் பேனர்கள்! - அசம்பாவிதத்துக்கு முன்பாக அப்புறப்படுத்துமா அரசு?
சென்னையை அச்சுறுத்தும் பேனர்கள்! - அசம்பாவிதத்துக்கு முன்பாக அப்புறப்படுத்துமா அரசு?

இது பற்றி ஏராளமான அழைப்புகள் நமது அலுவலகத்துக்கு வரவே... சென்னை மாநகர் தொடங்கி புறநகர் வரை ஒரு ரவுண்ட் அடித்தோம். கோயம்பேட்டில் வண்டியை எடுத்த சிறிது தூரத்திலேயே கோயம்பேடு மெட்ரோ மேம்பாலத்தில் மிகப்பெரிய ஹோர்டிங் ஒன்று நம்மை அச்சுறுத்தியது. அடுத்து, நெற்குன்றத்தில் வலதுபுறம் ஃபர்னிச்சர் கடை பேனர் ஒன்று தென்பட்டது. மதுரவாயலில் ஒற்றை இரும்புக்கம்பியில் இரண்டு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மிகப்பெரிய பேனர்கள் தொங்கிக்கொண்டிருந்தன. மாநகராட்சியின் எல்லையைத் தாண்டி வானகரம், வேலப்பன்சாவடி, திருவேற்காடு, பூந்தமல்லி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பேனர்கள் கிட்டத்தட்ட தென்னை மரம் உயரத்துக்கு வைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து சமூக ஆர்வலர் தேவராஜன் நம்மிடம் பேசுகையில், “நீங்கள் பார்த்த பேனர்களில் பெரும்பாலான பேனர்கள் அனுமதி பெறாமலும், கால அவகாசம் முடிந்த நிலையிலும் வைக்கப்பட்டிருக்கின்றன. பேனர்களை வைக்க உள்ளாட்சி அமைப்பிடம் மட்டுமின்றி, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றிலும் அனுமதி பெற வேண்டும். அதேபோல ஒவ்வோர் உள்ளாட்சி அமைப்பிலும் குறிப்பிட்ட உயரத்துக்குத்தான் பேனர் வைக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இவற்றையெல்லாம் யாரும் மதிப்பதேயில்லை. சில இடங்களில் மேம்பாலங்கள் 10 அடி உயரம் இருக்கிறதென்றால், அதற்கு மேல் 15 அடி உயரத்தில் பேனர்களை வைக்கிறார்கள். இப்படிக் குறிப்பிட்ட உயரத்தைத் தாண்டும்போது ஏர்போர்ட் அத்தாரிட்டியிடமும் அனுமதி வாங்குவது அவசியம். அப்படியான பேனர்களின் உச்சியில் சிவப்பு விளக்கை ஒளிரும்படி வைக்க வேண்டும். இதையும் யாரும் பின்பற்றுவதில்லை.

தேவராஜன்
தேவராஜன்

அரசியல் கட்சிகள் மூங்கில் கம்புகளையும் மரக்கட்டைகளையும் கொண்டு கயிறு கட்டி பேனர்களை நிற்கவைக்கிறார்கள். இதனால், வேகமாகக் காற்றடிக்கும்போது பேனர் சரிந்துவிடுகிறது, பறந்தும் செல்கிறது. இது போன்ற விபத்தில்தான் கோவையில் ரகு என்ற இளைஞரும், சென்னையில் சுப என்ற பெண்ணும் உயிரிழந்தனர். நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பேனர்களை வாகன ஓட்டிகள் பார்த்துக்கொண்டே செல்வதால் சில சமயம் விபத்துகளும் ஏற்படுகின்றன. அனுமதியில்லாத பேனர்களை சென்னை மாநகராட்சி விதி 471, 472-ன்படி அதிகாரிகள் எந்நேரமும் அகற்றலாம். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மரணங்கள் ஏற்பட்டால் மட்டுமே அரசும் நீதிமன்றமும் உத்தரவிடுகின்றன” என்றார் ஆதங்கத்துடன்.

ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டோம்... “அரசியல் கட்சிகள் மற்றும் விளம்பர பேனர்களுக்கான தடை தொடர்கிறது. அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வுசெய்து பேனர்களை அகற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபத்தில்கூட தி.நகர், ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர் பகுதிகளில் ஏராளமான பேனர்கள் அகற்றப்பட்டன. தினந்தோறும் போஸ்டர்களைக்கூடக் கிழித்துக்கொண்டுதான் இருக்கிறோம். கண்டிப்பாக அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியாக.

விபத்து நடந்தால்தான் விழித்துக்கொள்வோம் என்றில்லாமல், வருமுன் காப்பதே நல்லது!