Published:Updated:

அலிபாபா சாம்ராஜ்ஜியத்தின் - அடுத்த அரசர் டேனியல் ஜாங்க்!

Daniel Zhang
பிரீமியம் ஸ்டோரி
News
Daniel Zhang

பிசினஸ்

லகின் மிகப்பெரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அலிபாபாவின் தலைவரான ஜாக் மா, தற்போது ஓய்வு பெற்றிருக் கிறார். அவரின் இடத்துக்கு யார் வருவார்கள் என்ற விஷயத்தில் எந்தக் குழப்பமும் இருக்கப்போவதில்லை. காரணம், கடந்த வருடம் ஜாக் மாவின் ஓய்வு அறிவிக்கப்பட்டபோதே தனக்குப் பிறகு யார் என்பதைத் தெளிவாக அறிவித்துவிட்டார் ஜாக் மா. கிட்டத்தட்ட 460 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புகொண்ட அலிபாபா குழுமத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்று வழிநடத்தவிருக்கிறார் தற்போது தலைமை நிர்வாகியாக இருக்கும் டேனியல் ஜாங்க் (Daniel Zhang). யார் இந்த டேனியல் ஜாங்க்?

அலிபாபா சாம்ராஜ்ஜியத்தின் - அடுத்த அரசர் டேனியல் ஜாங்க்!

12 ஆண்டுகளில் தலைமைப் பதவி

47 வயதான இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே ஷாங்காயில் தான். இவரது தந்தை, கணக்காளராக இருந்தவர்தான். எனவே, அவரைப் பின்பற்றி ஷாங்காய் பல்கலைக்கழகத்தில் நிதி மற்றும் பொருளாதாரத்தைப் படிக்க முடிவெடுத்தார். அலிபாபாவில் வேலைக்குச் சேர்வதற்குமுன்னால், ஷந்தா (Shanda) என்கிற சீன கேமிங் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாகப் பணி யாற்றினார். அதுமட்டுமன்றி, ஷாங்காயில் செயல்பட்டு வரும் பிரைஸ்வாட்டர் கூப்பர் நிறுவனத்தின் தணிக்கை மற்றும் வணிக ஆலோசனைப் பிரிவின் மூத்த மேலாளராகவும் வேலை பார்த்தார்.

அலிபாபாவுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது 2007-ம் ஆண்டில்தான். முதலில் அலிபாபா குழும நிறுவனங்களில் ஒன்றான டாபூ-வில் (Taobao) தலைமை நிதி அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தார் டேனியல் ஜாங்க். சில வருடங்கள் கழித்து, கடந்த 2015-ம் ஆண்டில் அலிபாபா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியேற்றார்.

டாபூவில் இருந்தபோது அதன் வருமானத்தை அதிகரிக்கச் செய்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, அலிபாபாவுக்கு அவர் அறிமுகப்படுத்தி வைத்த ‘சிங்கிள் டே’ விற்பனையைச் சொல்லலாம். ஒவ்வொரு வருடமும் நவம்பரில் 11-ம் தேதி அலிபாபா இணைய தளத்தில் ஸ்பெஷல் சேல் நடத்தப்படுகிறது. 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேல், ஒவ்வொரு வருடமும் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.

ஜாக் மாவைவிட டேனியல் ஜாங்க் பல விதங்களில் வித்தியாசமானவர். ஜாக் மாவைப் போல, இவர் பிரபலம் கிடையாது; மிகவும் எளிமையானவர். மிகக் கடின உழைப்பாளி. வேலை செய்வது, சாப் பிடுவது, உறங்குவது என்றுதான் இவரது தினசரி நடவடிக்கைகள் இருக்கும்; பொழுதுபோக்கு விஷயங்களில் அவ்வளவாக நாட்டம் கிடையாது. அலிபாபாவின் தலைமை நிர்வாகியாக இருந்தாலும் சீனாவில் இவரை அவ்வளவாகத் தெரியாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“டேனியல் ஒரு சர்வதேச வணிகத் தலைவர் மற்றும் கண்டுபிடிப்பாளர்; சிறப்பான முடிவுகளை அளிப்பதிலும் அவரது தடத்தைப் பதிவு செய்திருக்கிறார். ‘‘அவர்மீது எங்கள் நிர்வாகக் குழு முழு நம்பிக்கையை வைத்திருக்கிறது. வளர்ச்சியின் அடுத்தகட்டத்தை நோக்கி நகரும்போது அலிபாபா குழுமத்தை வழி நடத்திச் செல்ல அவரைவிடச் சிறந்தவர் யாருமில்லை’’ - 2015-ல் டேனியலைத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்த போது ஜாக் மா சொன்ன வார்த்தைகள் இவை. டேனியல் ஜாங்க் மீது வைத்த நம்பிக்கைதான் இப்போது அலிபாபாவின் தலைவராக அவரை ஆக்கியிருக்கிறது?

Daniel Zhang
Daniel Zhang

என்ன திட்டம் வைத்திருக்கிறார் டேனியல் ஜாங்க்?

மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு இடையே அலிபாபாவின் தலைமைப்பொறுப்பை ஏற்றிருக்கிறார் டேனியல் ஜாங்க். அடுத்து என்ன செய்யலாம் என்பதைக் கடந்த சில மாதங்களாகவே திட்டமிட்டு வருகிறார். அநேகமாக, அலிபாபாவில் நடைமுறைப்படுத்தும் முதல் திட்டமாக ‘Freshippo’ இருப்பதற்கான வாய்ப்பு உண்டு. உணவகம், மளிகைப்பொருள்கள் அடங்கிய இந்த ஸ்டோரில் ஆப், ரோபோட்கள் மற்றும் முக அமைப்பை அடையாளம் கண்டறியும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டெலிவரி மற்றும் பணம் செலுத்துவது எளிமையாக்கப்படும். அலிபாபாவின் எதிர்கால வளர்ச்சியில் இது மிக முக்கியமானதாக இருக்கும் என நினைக்கிறார் டேனியல் ஜாங்க்.

சீனாவின் பொருளாதாரம் இப்போது கொஞ்சம் சிக்கலில் இருக்கிறது. அமெரிக்க - சீன வர்த்தகப்போர் முடிவுக்கு வந்த பாடில்லை. தவிர, தற்சமயம் இ-காமர்ஸ் துறையில் ஏற்பட்டிருக்கும் மந்தநிலையைச் சமாளிப்பது டன் சொந்த நாட்டு நிறுவனங்களான ‘டென்சென்ட்’ (Tencent) மற்றும் ‘பெய்டு’ (Baidu) ஆகிய நிறுவனங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். அலிபாபாவின் அடுத்த அரசர் என்ன செய்வார் என்று பார்ப்போம்!