Election bannerElection banner
Published:Updated:

ஆவின் பால் பாக்கெட்டில் தவளை! - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி!

ஆவின் பால் பாக்கெட்டில் தவளை
ஆவின் பால் பாக்கெட்டில் தவளை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீட்டு உபயோகத்துக்காக வாங்கிய பால் பாக்கெட்டில் இறந்தநிலையில் தவளை ஒன்று இருந்த சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி, அருகே வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய ஆவின் பால் பாக்கெட்டில் தவளை ஒன்று இறந்தநிலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆவின் பால் பாக்கெட்டில் தவளை
ஆவின் பால் பாக்கெட்டில் தவளை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வானமாமலை பகுதியைச் சேந்தவர் சிவநேசன். இவர் அருகிலுள்ள ஆவின் பால் நிலையத்தில் ஒரு பால் பாக்கெட் வாங்கிச் சென்றிருக்கிறார். பாலைக் காய்ச்சுவதற்கு பாக்கெட்டை பிரித்து ஊற்றியபோது அதில் இறந்தநிலையில் தவளை ஒன்று கிடந்ததைக் கண்டு, அவர் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சிவநேசன், ஆவின் பாலக முகவர் பாஸ்கர் என்பவரிடம் முறையிட்டிருக்கிறார். பிறகு, விழுப்புரம் மண்டல ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் ஐங்கரன் என்பவருக்கு புகார் சென்றிருக்கிறது. இதையடுத்து, சிவநேசனின் வீட்டுக்குச் சென்று ஆவின் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு