Published:Updated:

`டோல்கேட் வசூல் அராஜகம்`, `ஸ்டாலின்தான் தரணும்' - வேல்முருகன் Vs நாராயணன்

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

சுங்கச்சாவடி: காங்கிரஸ் கூட்டணி அரசில், டி.ஆர்.பாலு நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது போடப்பட்ட சாலைகளில்தான் 80 சதவிகிதம் தனியாரிடம் ஒப்பந்தம் போடப்பட்டது.

ஊரடங்குக்கு இடையிலேயே ஏப்ரல் 16-ம் தேதி, தமிழகத்திலுள்ள 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டண உயர்வு அமுலுக்கு வந்தது.

இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பாத நிலையில், இந்தக் கட்டண உயர்வால் காய்கறி உட்பட பல அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் என மக்கள் அச்சப்படுகிறார்கள். என்ன சொல்கிறார்கள் இவர்கள்...

பண்ருட்டி வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி:

"ஏப்ரல் 19-ம் தேதி நள்ளிரவு முதல் மீண்டும் ஊரடங்கைத் தளர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடெங்கும் சுங்கச் சாவடிகள் திறக்கப்பட்டன. மாற்றியமைக்கப்பட்ட 10% கூடுதல் கட்டணத்தைத் தாண்டி 30% வரை மேலும் கூட்டி வசூலித்துக் கொண்டிருக்கின்றன சுங்கச்சாவடிகள்.

மத்தியிலும் மாநிலத்திலும் சாலைப்போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகங்கள், மக்கள் வரிப்பணத்தில்தான் இயங்குகின்றன. அப்படியிருக்க, வழிப்பறிக் கொள்ளையை நடத்தும் சுங்கச்சாவடிகள், அவற்றின் காலக்கெடு முடிந்தும் இன்னும் ஏன் வசூலித்துக்கொண்டிருக்கின்றன... இதில் கட்டண உயர்வு வேறா... நடப்பது அரசாங்கமா இல்லை அராஜகமா?''

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

நாராயணன் திருப்பதி, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்:

காங்கிரஸ் கூட்டணி அரசில், டி.ஆர்.பாலு நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது போடப்பட்ட சாலைகளில்தான் 80 சதவிகிதம் தனியாரிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. அவர்கள் வங்கிகளில் 20-25 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டு, கடன் பெற்றுத்தான் சாலைகள் போட்டார்கள். அந்த ஒப்பந்தம் போடும்போதே, 'ஒவ்வொரு வருடமும் ஐந்து சதவிகிதம் கட்டணத்தை அதிகரித்துக்கொள்ளலாம் அல்லது மொத்தவிலைக் குறியீட்டின் அடிப்படையில் கட்டணத்தை மாறுதலுக்கு உட்படுத்தலாம்' என்று அனுமதித்துவிட்டார்கள்.

அதனால், ஒவ்வொரு வருடமும் கட்டணவு உயர்வு இருந்துகொண்டேதான் இருக்கும். ஒப்பந்தங்களை மீறிச் செயல்பட முடியாது என்பது தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கும் தெரியும். ஆனால், அவர் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று மலிவான அரசியல் செய்துவருகிறார். அப்படி ரத்துசெய்ய வேண்டுமென்றால், ஒப்பந்ததாரர்களுக்கு தி.மு.க-விலிருந்து ஸ்டாலின்தான் பணம் கொடுக்க வேண்டும்.''

- இதுகுறித்த பார்வையை இன்னும் விரிவாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3jX5lpa > வரியா... வழிப்பறியா? https://bit.ly/3jX5lpa

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு