Election bannerElection banner
Published:Updated:

`காய்ச்சல், தொண்டை எரிச்சல்; ஹோம் க்வாரன்டீன்!' -அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை?

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிலேயே, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முன்னேறிக்கொண்டே வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்தியத் தலைநகரான டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காய்ச்சல், தொண்டை எரிச்சல் இருப்பதால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ள நிலையில், டெல்லி முதல்வர் வீட்டிலேயே, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் பி.டி.ஐ செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, அவர் பங்கு பெற இருந்த அனைத்துக் கூட்டங்களும் நாளை காலை வரை தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இணையவழி பத்திரிகையாளர் கூட்டத்தில், `டெல்லி அரசாங்கத்துக்கு உட்பட்ட மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் உள்ள பத்தாயிரம் படுக்கைகள் டெல்லிவாசிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மத்திய மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை அனைவரும் பயன்படுத்தலாம்' என்று கூறியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

`டெல்லிவாசிகள் அவர்களின் அடையாள அட்டை மூலம் கண்டறியப்பட வேண்டும்' என்று டெல்லி அரசு கூறியிருந்தது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

டெல்லியில் 40 அரசு மருத்துவமனைகள் உள்ளன. ஆர்.எம்.எல், சப்தர்ஜர், எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநில அரசு மருத்துவமனைகளில் பத்தாயிரம் படுக்கைகளும், மத்திய அரசு மருத்துவமனைகளில் பத்தாயிரம் படுக்கைகளும் டெல்லியில் உள்ள நிலையில், மாநில அரசு மருத்துவமனைகள் படுக்கைகளும் தனியார் மருத்துவமனை படுக்கைகளும் டெல்லி வாசிகளுக்கு என்றும், மத்திய அரசு மருத்துவமனை படுக்கைகள் அனைவருக்கும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு