Published:Updated:

`போனை எடுத்து, `அப்பா சீக்கிரம் வா' என்கிறாள் மகள்!'- டெல்லிக் கலவரத்தால் கலங்கும் கர்ப்பிணி

Representation image
Representation image

சுனிதாவுக்குத் தற்போது 25 வயதாகிறது. மூன்று குழந்தைகளுக்குத் தாய். 7 மாதக் கருவை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கிறார். கணவனின் இழப்பால் ஓர் அறைக்குள் முடங்கியுள்ளார்.

ஹோலிப் பண்டிகை ஒரு வண்ணமயமான திருவிழா. வட இந்தியாவில் சகோதரத்துவத்தைப் போற்றும் விதமாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணியான சுனிதா ஹோலிப் பண்டிகை கொண்டாடும் மனநிலையில் இல்லை. கேள்விகளால் துளைக்கும் அவரது மகள்களுக்குப் பதில் கூற முடியாமல் மூலையில் முடங்கிக் கிடக்கிறார். டெல்லிக் கலவரம் சுனிதாவை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. கடந்த மாதம் டெல்லியில் நடந்த கலவரத்தில் சுனிதாவின் கணவர் பலியாகியுள்ளார்.

டெல்லிக் கலவரம்
டெல்லிக் கலவரம்

சுனிதாவுக்குத் தற்போது 25 வயதாகிறது. மூன்று குழந்தைகளுக்குத் தாய். 7 மாதக் கருவை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கிறார். கணவனின் இழப்பால் ஒரு அறைக்குள் முடங்கியுள்ளார். கலவரக்காரர்கள் வைத்த தீயில் சுனிதா போன்று பலரின் வாழ்க்கை இருளில் மூழ்கியுள்ளது. கலவரத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் சுனிதா வசித்து வருகிறார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஷிவ் விஷார், காஜூரி காஸ் மற்றும் வடகிழக்குப் பகுதிகள் ஹோலிப் பண்டிகையின் களையிழந்து காணப்படுகிறது.

தலையில் 40 தையல்கள்; கண் முன்னே இறந்த தந்தை!- பிப்ரவரி 24-ம் தேதி இரவை விவரிக்கும் மகன்

சுனிதா பேசுகையில், ``ஹோலிப் பண்டிகையின் போது ஒவ்வொரு வருடமும் நாங்கள் எங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிடுவோம். இந்த முறை அங்கு தனியாகச் செல்ல எனக்கு மனமில்லை. அதனால் நான் ஹோலிப் பண்டிகையைத் தனிமையில் செலவிட முடிவு செய்துவிட்டேன். என் குழந்தைகள் அவர்களது தந்தைக்கு என்ன நடந்தது என்று இன்னும் தெரியாமல் இருக்கின்றன. அவர்களுக்கு என்னால் எந்தப் பதிலும் கூற முடியவில்லை. எனது பெரிய மகள் என் தந்தை காணாமல் போயிட்டார் என்கிறார். சிறுயவளோ போனைக் கையில் எடுத்துக்கொண்டு அப்பாவிடம் பேசுவதாக நினைத்துக்கொண்டு ‘அப்பா சீக்கிரம் வா’ என்கிறாள்” என்றார் கண்ணீரோடு.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

காஜூரி காஸ் பகுதியில் கலவரத்தின் போது 20-க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் கொளுத்தப்பட்டன. அந்த மக்கள் இன்னும் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். அந்தப்பகுதியைப் பெண் ஒருவர் பேசுகையில், ``இங்கு யாராவது ஹோலிப் பண்டிகைக்குத் தயாராவது உங்களுக்குத் தெரிகிறதா?. இந்த மாதத்திற்கான எந்தப் பரபரப்பும் இங்கு இல்லை. நாங்கள் இங்கு அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். இரவில் நிம்மதியான உறக்கம் இல்லை. இவ்வளவு மோசமான ஒரு ஹோலியை நாங்கள் இதுவரை உணர்ந்ததில்லை. குழந்தைகள் வெளியில் செல்ல பயப்படுகிறார்கள். குழந்தைகள் இன்னும் அந்த அச்சத்திலிருந்து வெளியே வரவில்லை” என்றார் வருத்தத்துடன்.

Credits: News18English

அடுத்த கட்டுரைக்கு