ஜூ.வி 8.9.2019 தேதியிட்ட இதழில் ‘அவர் சேலத்துக்கு மட்டும்தான் முதல்வரா? எடப்பாடிக்கு எதிராக டெல்டா மக்கள் போர்க்கொடி!’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. அதில், ‘காவிரி நீர் வழங்குவதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாரபட்சமாக நடந்து கொள்கிறார். மரபுப்படி டெல்டா மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீரை, தன் சொந்த மாவட்டமான சேலத்துக்குத் தாரைவார்க்கத் துடிக்கிறார்’ என்ற டெல்டா விவசாயிகளின் குற்றச்சாட்டைப் பதிவுசெய்திருந்தோம்.

அதற்கு, ‘‘சேலம் மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையான சேலம் - மேட்டூர் வெள்ள உபரிநீர் திட்டத்தை, டெல்டா மக்கள் கொச்சைப்படுத்தி விட்டனர்’’ என்று வெடிக்கிறார்கள் சேலம் மாவட்ட விவசாயிகள்.

இதுகுறித்துப் பேசிய காவிரி உபரிநீர் நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் தம்பையா, ‘‘50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களது வாழ்வாதாரத்தை விடுத்து, உடைமை களைத் துறந்து மேட்டூரில் அணை கட்டுவதற்காக தங்களுடைய நிலங்களைக் கொடுத்தனர். இதுமட்டுமல்லாமல், பத்தாண்டுகளாக பத்தாயிரம் பேர் உடல் உழைப்பையும் வழங்கினர். மேட்டூர் அணை, சேலம் மக்களின் ரத்தத்தால் கட்டப்பட்டது. ஆனால், அந்த அணையால் சேலம் மக்களுக்குக் கடுகளவும் பயனில்லை. சேலம், வானம் பார்த்த வறண்ட பூமியாகக் கிடக்கிறது. தென்னை காய்ந்துவிட்டது; பனையும் பட்டுப்போய்விட்டது. கால்நடைகள் குடிக்கக்கூட நீர் இல்லை.

விவசாயத்துக்கு நீீர் இல்லாமல் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால், சேலம் மாவட்ட விவசாயிகள் ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் கல் உடைக்கப் போகிறார்கள். இந்த வலி டெல்டா விவசாயிகளுக்குப் புரியாதா? அணை கட்டியதிலிருந்து 45 முறை நிரம்பி பல்லாயிரம் டி.எம்.சி உபரிநீர் கடலில் கலந்திருக்கிறது. கடந்த ஆண்டு மட்டுமே 190 டி.எம்.சி நீர் கடலில் கலந்தது. அந்த உபரிநீரில் வெறும் ஒன்றரை டி.எம்.சி நீரை காவிரி - சரபங்கா இணைப்புத் திட்டத்தில் செலுத்தினாலே போதும்... சேலம் செழிப்படையும், உயிர்ச்சூழல் பெருகும். வீணாகும் நீரை, சேலம் மக்கள் பயன்படுத்துவதில் டெல்டா விவசாயிகளுக்கு என்ன பிரச்னை? மேட்டூர் அணைக்காக நினைத்துப்பார்க்க முடியாத தியாகங்களைச் செய்த சேலம் மக்களுக்கு, டெல்டா விவசாயிகள் செய்யும் கைம்மாறு, எங்களுக்கு தண்ணீர் கிடைக்கவிடாமல் தடுப்பதுதானா?’’ என்றார் வருத்ததோடு.

அடுத்து பேசிய ஓமலூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரான தமிழரசு, ‘‘மேட்டூர் அணை 120 அடி நிறைந்து, 16 கண்பாலம் வழியாக உபரிநீர் வெளியேறும்போதுதான் அதில் ஒன்றரை டி.எம்.சி உபரிநீரை சேலத்தில் உள்ள சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதியில் இணைக்கச் சொல்கிறோம்.

2007-ம் ஆண்டில் சட்டசபையிலேயே கேள்வி நேரத்தின்போது இந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசினேன். அன்றைய முதல்வர் கலைஞர், 2010 இறுதியில் காவிரி - சரபங்கா இணைப்புத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். அதன் பிறகு, ஜெயலலிதா முதல்வர் ஆனதும் 2013-ல் காவிரி - சரபங்கா இணைப்புத் திட்டத்துக்காக 1,134 கோடி ரூபாய் அறிவித்து, 2015-ம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என, ஆய்வுக்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கினார். ஆனால் இவர்கள், அதை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றப் போவதாகச் சொல்வது, ஜெயலலிதா அறிவித்த காவிரி - சரபங்கா இணைப்புத் திட்டமே கிடையாது. உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்புவதாகச் சொல்லி எடப்பாடி கண்துடைப்பு நாடகம் ஆடுகிறார். அதற்கே டெல்டா விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பது கவலையளிக்கிறது. காவிரி உபரிநீர் திட்டம் என்பது, 1962-ல் தமிழகத்தில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தபோதே அறிவிக்கப் பட்ட திட்டம். ஆகவே, இதனால் எங்களுக்கு பாதிப்பு என்றெல்லாம் டெல்டா மாவட்ட விவசாயிகள் சொல்லக் கூடாது’’ என்றார்.

டெல்டா காவிரி விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர் கோ.ஜெயபாலன், ‘‘சேலம் காவிரி வெள்ள உபரிநீர் திட்டம், இன்று... நேற்று வைத்த கோரிக்கையல்ல. மேட்டூர் அணை கட்டத் தொடங்குவதற்கு முன்பே, 25.2.1925-ல் ஓமலூர் தாலுகா விவசாயிகள் மாநாடு போட்டு, ‘அணை கட்டினால் வாய்க்கால் மூலம் சேலத்துக்கு ஜலம் கொண்டுவர வேண்டும்’ எனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். இந்த உபரிநீர் திட்டத்தால், டெல்டா மாவட்டத்துக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது.மேட்டூர் அணை கட்டுவதற்கு இடத்தைக் கொடுத்துப் பாடுபட்டவர்கள் சேலம் மக்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது’’’ என்றார் ஆற்றாமையுடன்.

இதுபற்றி மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலையிடம் கேட்டதற்கு, ‘‘டெல்டா விவசாயத்துக்காக வெளியேற்றப்படும் நீரிலிருந்து இந்தத் திட்டத்துக்குத் திருப்பிவிடப்போவதில்லை. வெள்ள உபரிநீரைத்தான் இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்போகிறோம். இதனால் டெல்டா விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. வளமான பகுதியை மேலும் வளமாக்குவதும், வறண்ட பகுதியை வளமாக்க நினைப்பதும்தான் முதல்வர் பணி. அதை தமிழக முதல்வர் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறார். டெல்டா விவசாயிகள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

படங்கள்: கே.தனசேகரன்