Published:Updated:

`நானே வி.ஏ.ஓ... நானே மந்திரி!' - அன்று ரூ.10-க்கு மனு எழுதும் வேலை; இன்று ரூ.10 கோடி சொத்து!

ஊழல்
ஊழல்

வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இப்போதெல்லாம் நேரடியாகப் பணம் வாங்குவதில்லை. டிரைவிங் ஸ்கூலை அணுகச் சொல்லிவிடுகிறார்கள்...

சென்னை அம்பத்தூர் அருகே வி.ஏ.ஓ அலுவலகம் ஒன்று செயல்பட்டது. இந்த அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருபவர்களுக்கு, பத்து ரூபாய்க்கு மனு எழுதிக் கொடுக்கும் வேலையை 'காமெடி நடிகரின்' பெயர்கொண்ட ஒருவர் செய்துவந்தார். வி.ஏ.ஓ அலுவலகம் வேறோர் இடத்துக்கு மாறுதலாகிச் சென்றவுடன், அந்த அலுவலகம் இருந்த இடத்தை வாடகைக்கு எடுத்த அந்த நபர், தனியார் சேவை மையம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.

சாதிச் சான்றிதழ், பட்டா, வருமானச் சான்றிதழ், பென்ஷன் எனச் சகலத்தையும் முடித்துத் தருவதாக கல்லா கட்டுகிறார் அவர். தாலுகா அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகளும், 'அவர்கிட்ட போய் கொடுங்க, சீக்கிரம் முடிச்சுத் தந்துடுவாரு' என சொல்லும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக மாறியிருக்கிறார். அந்த பிரமுகரின் இன்றைய சொத்து மதிப்பு பத்து கோடி ரூபாய்க்கு மேல் இருக்குமாம். இவர்மீது கோட்டைக்குப் போடப்படும் பெட்டிஷன்கள் இவரிடமே திரும்பி வருவதுதான் மர்மம். 'நானே வி.ஏ.ஓ... நானே மந்திரி... என்னையை மீறி எங்கய்யா போகப் போறீங்க?' என பத்து பவுன் தங்கச் சங்கிலி மினுமினுக்கக் கொக்கரிக்கிறாராம் அந்த பிரமுகர்!

`நானே வி.ஏ.ஓ... நானே மந்திரி!' - அன்று ரூ.10-க்கு மனு எழுதும் வேலை; இன்று ரூ.10 கோடி சொத்து!

சென்னையையொட்டி ஓரகடம் ஏரியாவில் சர்வே துறையில் பணிபுரிந்த 'பாஸ்' பிரமுகர் போலி டாக்குமென்ட் தயாரித்துக் கொடுப்பதில் கில்லாடி. இந்த ஏரியாவைச் சேர்ந்த பலர் டபுள் டாக்குமென்ட் விவகாரத்தால் பாதிக்கப்பட்டு, நீதிமன்றப் படியேறியிருப்பதில் 'பாஸ்' பிரமுகரின் சித்து விளையாட்டுதான் பிரதான காரணம் என்கிறார்கள். பத்திரப் பதிவுத்துறையிலும் வருவாய்த்துறையிலும் தனக்கிருக்கும் செல்வாக்கால் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார் அந்த பிரமுகர். இவர்களெல்லாம் கொசுறுதான். சமீபத்தில் அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர், நீதிமன்றம் வாயிலாக டபுள் டாக்குமென்ட்டுக்கு அங்கீகாரம் பெற்றது எப்படி எனப் பேசும் வீடியோ ஒன்று வைரலானது. நீதித்துறையையே கலங்கடிக்கும் வார்த்தைகளை அந்த வீடியோவில் அள்ளி வீசியிருந்தார் அந்த வழக்கறிஞர்.

வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இப்போதெல்லாம் நேரடியாகப் பணம் வாங்குவதில்லை. டிரைவிங் ஸ்கூலை அணுகச் சொல்லிவிடுகிறார்கள். அரசு ஊழியர் பணம் வைத்திருந்தால் மட்டுமே ஊழல் தடுப்புத்துறையால் பிடிக்க முடியும்; தனியாரைப் பிடிக்க முடியாது என்பதால் இந்த ஏற்பாடு. அதேபோல பத்திரப் பதிவு செய்யும் தொகையில் பத்து சதவிகிதத்தை லஞ்சமாக வழங்கினால் மட்டுமே பத்திரப் பதிவு நடக்கும். ஒரு பதிவு அலுவலகம்கூட இதற்கு விதிவிலக்கல்ல... நேர்மையான அதிகாரிகளும், 'நான் லஞ்சம் வாங்க மாட்டேன்' என்று சொல்ல முடியாது. லஞ்சம் வாங்கவில்லையென்றால், அவர்கள் அந்தப் பதவியில் இருக்க முடியாது.

- இவை சாம்பிள்தான்.

ஊழல் அதிகாரிகளின் கூடாரமாக மாறிவருகிறது தமிழக அரசின் தலைமைச் செயலகம். அந்த அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 'முதல்வர் வேட்பாளர் யார், கட்சியைக் கைப்பற்றுவது யார்?' என்ற அதிகாரப் போட்டியில், லஞ்சத்தின் கொட்டத்தை அடக்க இந்த அரசுக்கு வக்கில்லை! ஏராளமான ஊழல் வழக்குகளைக் களங்கங்களாகச் சுமந்து நிற்கும் இந்த ஆட்சியாளர்களுக்கும் திராணியில்லை! > முழுமையான ஜூ.வி கவர்ஸ்டோரியை வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3mbMPKZ > உ - ஊழல் https://bit.ly/3mbMPKZ

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு