Published:Updated:

ஆர்யன் கானுக்கு போதைப்பொருள் வாங்கிக் கொடுத்தாரா நடிகை? போலீஸ் தீவிர விசாரணை!

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேயிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஷாருக் கான் மகனுடன் வாட்ஸ்அப்பில் போதைப்பொருள் தொடர்பாக உரையாடியது குறித்து இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்.

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் கைதுசெய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தற்போது உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆர்யனின் ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்க இருந்த நாளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஓர் அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் ஆர்யன் கானுக்கும், பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவுக்கும் இடையே போதைப்பொருள் தொடர்பாக வாட்ஸ்அப் உரையாடல் இருந்தது எனவும், அதில் போதைப்பொருளின் பெயர்கள் சங்கேத மொழியில் குறிப்பிடப்பட்டிருந்தன எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

``மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை..." வீட்டு வேலையாட்களுக்கு கௌரி கானின் புது உத்தரவு?!
அனன்யா பாண்டே, ஆர்யன் கான்
அனன்யா பாண்டே, ஆர்யன் கான்

இதனால் அவற்றைப் புரிந்துகொள்வதில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை பாலிவுட் நடிகை அனன்யாவின் வீட்டில் ரெய்டு நடத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை தங்களது அலுவலகத்துக்கு வரவழைத்தும் விசாரித்தனர். ஆனால் அவர் சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு அழைத்திருந்தனர். முதல் நாளில் தான் ஆர்யனுடன் சிகரெட் தொடர்பாகவே வாட்ஸ்அப்பில் சாட் செய்ததாகவும், அதுவும் எப்போது அந்த சாட்டிங் நடந்தது என்றே தனக்கு ஞாபகம் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார். தான் போதைப்பொருள் தொடர்பாக எதுவும் சாட்டிங் செய்யவில்லை என்றும், போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும், போதைப்பொருள் வியாபாரிகள் யாரையும் தனக்குத் தெரியாது எனவும் கூறியிருக்கிறார்.

விசாரணைக்கு வரும் அனன்யா
விசாரணைக்கு வரும் அனன்யா

ஆனால், வாட்ஸ்அப் சாட்டிங்கில் ஆர்யன், அனன்யாவிடம் தனக்கு கஞ்சா ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டிருக்கிறார். அதற்குத் தன்னால் ஏற்பாடு செய்து கொடுக்க முடியும் என்று அனன்யா தெரிவித்திருக்கிறார். இரண்டாவது நாளில் இந்த உரையாடல் குறித்து அனன்யாவிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர். அதற்கு, தான் ஜோக்குக்காக அப்படிச் சொன்னதாக அனன்யா தெரிவித்தார். ஆனால், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் போதைப்பொருள் தொடர்பாக உரையாடியிருப்பதை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு