தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

2K kids: முக்கனிகள் தித்திக்கும் சிறுமலை... ஒரு பசுமைப் பயணம்!

சிறுமலை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுமலை

ரா.ராய்ஸ் ஆண்டனி பிரசாத்

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிறுமலை. தரைமட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலைப்பிரதேசத்துக்கு, ராஜா இசையில், எஸ்.பி.பி குரலில் ‘போகும் பாதை தூரமே, வாழும் காலம் கொஞ்சமே’ பாடலைக் கேட்டுக்கொண்டே 18 கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி, மூலிகைத் தென்றலை சுவாசித்தபடி போனால்... சில்லென வரவேற்கிறது சிறுமலை. இப்போது இது டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிவரும் இந்த இடத்துக்கு நாம் சென்றதன் நோக்கம்... வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், திராட்சை, எலுமிச்சை என ஸ்பெஷல் ருசி கொண்ட இந்த மண்ணின் விளைச்சல் பொருள்களைப் பற்றி அறிய, அந்த விவசாயி களிடம் பேச...

சாலமன் ராஜா டேனியல்
சாலமன் ராஜா டேனியல்

உலகப் புகழ்பெற்றது சிறுமலை வாழைப்பழம்!

சிறுமலை பழையூரைச் சேர்ந்த விவசாயி ஜேசு புண்ணியகோடி, ``வெளிமாவட்டம், வெளிமாநிலம் மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது உலகப் புகழ்பெற்ற சிறுமலை வாழைப்பழம்’’ என்றவர், ‘`பொதுவா வாழைப்பழம் ரெண்டு, மூணு நாள்ல அழு கிடும். ஆனா, சிறுமலை வாழைப்பழம் பல நாள்கள் தாங்கும். தோள் மட்டும் கறுத்திருக் குமே தவிர, பழம் ரொம்ப சுவையா இருக்கும். சிறுமலையில வாழைப்பழம், வறட்சியிலும் வளரும் தன்மை கொண்டது. மலைப் பகுதியில விளையுற பழத் தைக் கொண்டு வர மலைப் பாதைக் குண்டும் குழியுமா இருக்கும் என்பதால, வண்டிகள் போக முடியாத இடத்துக்கு குதிரை, கழுதை மேல பொதி ஏத்தி ரோட்டுக் குக் கொண்டு வருவோம். திண்டுக்கல் ரயில் நிலையம் பக்கத்துல இருக்குற வாழைப் பழக்கிடங்குல பழங்களை விற்போம். சிறுமலையில ஊடு வேளாண்மையா எலுமிச்சை விளை விக்கப்படுது’’ என்று கூடுதல் தகவல் பகிர்ந்தார்.

ஆரோ ஸ்டாலின் ஆபிரகாம்
ஆரோ ஸ்டாலின் ஆபிரகாம்

மயக்கும் மாம்பழம்!

சிறுமலை அடிவாரத்தைச் சேர்ந்த விவசாயி சாலமன் ராஜா டேனியல் கையில் இருந்த மாம்பழத்தின் வாசம் காற்றெல்லாம் மிதந்து கொண்டிருந்தது. ‘`சிறுமலை மாம்பழம் மருந்து அடிக்கிறது, ரசாயனங்களக் கலக்குறதுனு இந்த நஞ்செல்லாம் தீண்டாதது. இயற்கையான உரத்துல விளையுறது. அதிக விளைச்சல் கொடுக்கும்போது, நிறைய இடங்களுக்கு விநி யோகம் செய்றோம்’’ என்றார் பெருமையாக.

சூசை மாணிக்கம்
சூசை மாணிக்கம்

தலைமுறையா பலாப்பழம் விவசாயம் பண்றோம்!

சிறுமலை அடிவாரத்தைச் சேர்ந்த விவசாயி மற்றும் ஆசிரியர் ஆரோ ஸ்டாலின் ஆபிரகாம், ``சிறுமலை மா, பலா, வாழை என முக்கனி களுக்கும் பெயர்பெற்றது. தலைமுறை தலை முறையா நாங்க சிறுமலை பலாப்பழம் விவசாயம் செய்துட்டு வர்றோம். இந்தப் பலாப்பழ ருசி தனித்துவமா, தித்திப்பா இருக்கும். அதனாலேயே இதுக்கு மவுசு அதிகம். இங்க விளையுற பழங்கள் எல்லாமே அதிக தித்திப்பாதான் இருக்கும். அதுக்கு காரணம், ஊத்து தண்ணிதான்.

ஜேசு புண்ணியகோடி
ஜேசு புண்ணியகோடி

ஆசிரியர் வேலை பார்த்தாலும், விவசாயி என்பதுதான் என் முதல் அடையாளம். இதை மென்மேலும் வளர்க்கணும். மா, பலா, வாழை மட்டுமல்ல... எலுமிச்சை, மாதுளை, ஏலக்காய், காபி, சுரைக்காய்னு எல்லா விளைச்சலும் இங்க சிறப்புதான். பலா காய்க்க ஆரம்பிக்க 22 மாசம் ஆகும். ஆனா, காய்க்க ஆரம்பிச் சுட்டா, அப்புறம் அந்தப் பலா மரம் ரெண்டு, மூணு தலைமுறைகளை நின்னு பார்த்துடும். சிறுமலை பலாப்பழம் 50 ரூபாயில இருந்து 500 ரூபாய் வரை விலை போகுது’’ என்று பட்டியலிட்டார்.

2K kids: முக்கனிகள் தித்திக்கும் சிறுமலை... ஒரு பசுமைப் பயணம்!

புள்ள மாதிரி திராட்சைக்கொடி!

சிறுமலை அடிவாரம், ஏ.வெள்ளோடு பகுதி யில் 50 வருடங்களாகத் திராட்சை சாகுபடி செய்துவரும் விவசாயி ராசாக்கரை சூசை மாணிக்கம், ‘`சிறுமலை திராட்சை திண்டுக்கல்ல மட்டுமல்லாம தமிழகம் முழுக்க, வெளி மாநிலங்கள் வரை விற்பனைக்குப் போகுது. திராட்சை சாகுபடிக்கு, 3-க்கு 2 குழி அமைத்து, பசுந்தளை உரத்தை நிரப்பணும். அதுல திராட்சைக் குச்சிகளை நடவு செய்து, தளிர் விட்டு வந்ததும் பந்தல் அமைக்கணும். அறுவடை செய்ய ஆரம்பிச்சதுக்கு அப்புறம், பந்தலை நல்லா பராமரிப்பு செஞ்சா, 20, 30 வருஷம் வரை பலன் அளிக்கும். புள்ள மாதிரி திராட்சை தோட்டத்தைப் பார்த்துக்குவோம்’’ என்றார் இயற்கையான நேசத்துடன்.