Published:Updated:

எட்டு மணிக்குள்ள கிச்சனை மூடணும்... ஏன்?

டின்னர் டைம்
பிரீமியம் ஸ்டோரி
டின்னர் டைம்

டின்னர் டைம்

எட்டு மணிக்குள்ள கிச்சனை மூடணும்... ஏன்?

டின்னர் டைம்

Published:Updated:
டின்னர் டைம்
பிரீமியம் ஸ்டோரி
டின்னர் டைம்
மாலை 6 மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள்' என்கின்றன நம் பாரம்பர்ய மருத்துவ முறைகள். நம் பெற்றோரைப் பெற்றவர்கள் எல்லாம் சூரிய அஸ்தமனத்துக்குள் இரவு உணவை முடித்தவர்கள்தாம். இன்றோ, நாம் பார்க்கும் வேலையின் காரணமாக, லேட் நைட் சாப்பாடு, கழுவிய கைகளின் ஈரம் உலரும் முன்பே தூக்கம் என்று வாழ்கிறோம். இந்த நிலையில், சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று இரவு 7 மணிக்கு மேல் ஹெவியாகச் சாப்பிடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இரவு 7 மணிக்குள் டின்னர் முடித்து இரவு 8 மணிக்குள் கிச்சனை மூடுவது ஏன் அவசியம் என்பது குறித்து ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன் சொல்வதைக் கேளுங்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 • செரிமானம் முழுமையாக நடைபெற வேண்டுமென்றால், உடலில் வெப்பம் இருக்க வேண்டும். அந்த வெப்பத்துக்கு சூரியன் வேண்டும். சிறிதளவாவது சூரிய வெப்பம் இருக்கும்போதே சாப்பிட்டால்தான், நாம் படுக்கைக்குப் போவதற்கு முன்னால், உணவு சிறுகுடலைச் சென்று சேர்ந்திருக்கும். அப்படிச் சேர்ந்தால்தான், நாம் உறங்கிய பிறகு உடலின் மற்ற உறுப்புகள் தத்தம் கழிவுநீக்க வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கும்.

 தாரிணி கிருஷ்ணன்
தாரிணி கிருஷ்ணன்
 • அந்தக் காலத்தில் இரவு உணவைச் சீக்கிரம் சாப்பிட்டுவிடுவார்கள் என்பதால், ஒரு மணி நேரம் கழித்து ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். இது அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொண்டது. இப்போது டின்னர் நேரம்

 • 9 அல்லது 10 மணியாகிவிட்டதால் அதன் பிறகு பழம் சாப்பிட முடிவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அதன் பலன்கள் நமக்குக் கிடைப்பதில்லை.

 • தாமதமாக இரவு உணவை எடுத்துக்கொள்வதென்பது, அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதைவிட இதயத்துக்குக் கேடான விஷயம்.

 • `ஆஃப்டர் ஃபுட் எ கிலோமீட்டர் வாக்' என்றோர் ஆங்கிலப் பழமொழி இருக்கிறது. அதாவது, சாப்பிட்ட பின்னர் சற்று நடக்க வேண்டும். இப்படி நடந்தால், உடலின் ரத்த ஓட்டம் சீராகும். இதயம் உள்ளிட்ட உடலுறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். இப்படிக் காலாற நடக்க வேண்டுமென்றால், 8 மணிக்குள் உங்கள் கிச்சனை மூடினால்தான் முடியும்.

 • இரவு உணவைத் தாமதமாக எடுத்துக்கொண்டால், நம் உடலானது செரிமான வேலையைச் செய்ய தன் மொத்த எனர்ஜியையும் செலவழிக்க வேண்டி வரும்.

எட்டு மணிக்குள்ள கிச்சனை மூடணும்... ஏன்?
 • செரிமானத்தைத் தாமதமாக்கும் அசைவ உணவுகளைச் சாப்பிடுபவர்கள் தூங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு முன்னரே சாப்பிட்டுவிட வேண்டும்.

 • ஹோட்டல் உணவுகளில் ருசிக்காக உப்பும் காரமும் கூடுதலாகவே சேர்ப்பார்கள். அதைச் சமன் செய்ய பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம் சாப்பிடலாம். அதனால் இதயம் அதீத உப்பால் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். இரவு உணவையே தாமதமாகச் சாப்பிடுபவர்கள், அடுத்த பிழையாக உடனே தூங்கச் சென்றுவிடுகிறார்கள். இது ஆரோக்கியமான பழக்கமில்லை.

 • இரவு உணவைச் சீக்கிரம் சாப்பிட்டால் இதயத்தமனிகளில் கெட்ட கொழுப்பு படிகிற பிரச்னை ஏற்படாது.

 • இரவு தாமதமாகச் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றைச் சுற்றிக் கொழுப்பு படியும். இது, பருமன் முதல் நீரிழிவு, இதயநோய் வரை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

 • இன்று பொதுவாகவே எல்லோருக்கும் உடலுழைப்பு குறைந்துவிட்டது. அதோடு, இரவு தாமதமாக பிரியாணி, பரோட்டா போன்ற உணவுகளைச் சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், வாய்வுப் பிரச்னை போன்றவை ஏற்படும். எனவே, குறிப்பிட்ட ஆராய்ச்சி முடிவு வலியுறுத்துவதைப்போல முடிந்தவரை 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு 8 மணிக்குள் கிச்சன் கதவை மூடிவிடுவது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism