Published:Updated:

தமிழிலும் பரவும் சமையலறைப் புழக்கம்!

தி கிரேட் இண்டியன் கிச்சன்
பிரீமியம் ஸ்டோரி
தி கிரேட் இண்டியன் கிச்சன்

`இண்டியன் கிச்சன்’ படம் பார்த்ததும் வீட்டிற்குப் போய் உட்கார்ந்தேன். ‘ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வா’ன்னு வீட்ல மனைவியைக் கேட்க முடியலை.

தமிழிலும் பரவும் சமையலறைப் புழக்கம்!

`இண்டியன் கிச்சன்’ படம் பார்த்ததும் வீட்டிற்குப் போய் உட்கார்ந்தேன். ‘ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வா’ன்னு வீட்ல மனைவியைக் கேட்க முடியலை.

Published:Updated:
தி கிரேட் இண்டியன் கிச்சன்
பிரீமியம் ஸ்டோரி
தி கிரேட் இண்டியன் கிச்சன்

எல்லோர் வீட்டிலும் இருக்கிற சமையலறை. அதில் அன்றாடம் உழன்று கொண்டே இருக்கிற பெண்கள். ஆண்டாண்டு காலமாக ஆண்களுக்கு சமைத்துப் போட்டு அவர்களும் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக வாழ்ந்துகொண்டு இருப்பதாக நம்பிக்கொண்டிருந்தோம். ‘அப்படி இல்லவே இல்லை’ என்று முகத்தில் அறைந்து சொன்னது ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ மலையாளப்படம். அதைத் தமிழில் ரீமேக் செய்கிறார், இயக்குநர் ஆர்.கண்ணன்.

தமிழிலும் பரவும் சமையலறைப் புழக்கம்!
தமிழிலும் பரவும் சமையலறைப் புழக்கம்!
தமிழிலும் பரவும் சமையலறைப் புழக்கம்!

சென்னையின் புறநகர் தாண்டிப் போனால் ஷூட்டிங் ஸ்பாட் பரபரக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் முகம் வெட்கத்தில் மிளிர, அருகே உட்கார்ந்திருந்தார் ராகுல் ரவீந்திரன். திருமணமாகி வருகிற பெண், புகுந்த வீட்டில் சந்திக்கும் நுட்பமான பிரச்னைகளை முன்வைக்கிறது படம். ஷூட்டிங் பிரேக்கில் நிதானித்துப் பேசுகிறார் கண்ணன்.

“ `இண்டியன் கிச்சன்’ படம் பார்த்ததும் வீட்டிற்குப் போய் உட்கார்ந்தேன். ‘ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வா’ன்னு வீட்ல மனைவியைக் கேட்க முடியலை. ஆணாக இருக்கிறபோது பெண்களோட கஷ்டத்தை உணர்வதே இல்லை. அவர்கள் ஆண்களுக்காகப் படைக்கப் பட்டவர்கள்னு நினைக்கிறதெல்லாம் காலம் காலமாக நம்ம தலைக்குள்ளே திணிக்கப்பட்ட மிகப்பெரிய அரசியல். அதையெல்லாம் அற்புதமாக மலையாளத்துல டைரக்டர் ஜியோ பேபி சொன்னதும், இதைத் தமிழில் செய்யணும்னு தோணிடுச்சு.

தமிழிலும் பரவும் சமையலறைப் புழக்கம்!
தமிழிலும் பரவும் சமையலறைப் புழக்கம்!
தமிழிலும் பரவும் சமையலறைப் புழக்கம்!
தமிழிலும் பரவும் சமையலறைப் புழக்கம்!
தமிழிலும் பரவும் சமையலறைப் புழக்கம்!

படத்தின் முதல் 20 நிமிடக்காட்சிகள்தான் ரொம்ப சவாலாக இருந்தது. நிறைய பேர் இந்தக் கதையைப் படமாக்க நினைத்தார்கள். அனுபவம் இருந்த காரணத்தால் படம் என் கைக்கு வந்தது. அசல் கதையின் தன்மை கெடாமல் தமிழில் கொண்டு வந்துவிட உழைக்கிறேன்...” பெருமையாகப் பேசுகிற கண்ணன், “இந்த நடிப்பு ராட்சசியிடம் பேசுங்க” என ஐஸ்வர்யாவிடம் கைகாட்டுகிறார்.

“எனக்கு இந்தப் படத்தில் ஆர்வம் இருந்தது. ‘தமிழில் எடுப்பாங்க... அதுவும் என் கைக்கு வரும்’னு நினைச்சதில்லை. நிமிஷா சஜயன் அங்கே பின்னியெடுத்திருப்பாங்க. ஒத்தை ஆளா தோளில் தூக்கிச்சுமந்த நடிப்பும் இயல்பும் நமக்கு வருமான்னு தெரியலை. ஆனால் விட்டுடக் கூடாதுன்னு முயற்சி பண்றேன்.” மலர்ந்து சிரித்துப் பேசுகிறார் ஐஸ்வர்யா. கணவர் பாத்திரத்தில் நடிகர் ராகுல் ரவீந்திரன். ‘மாஸ்கோவின் காவேரி’யில் அறிமுகமாகி இப்போது ஆந்திராவின் இளம் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார்.

ஆர்.கண்ணன்
ஆர்.கண்ணன்
தமிழிலும் பரவும் சமையலறைப் புழக்கம்!
தமிழிலும் பரவும் சமையலறைப் புழக்கம்!

“நான் இப்போ அடுத்த படம் இயக்க வேண்டியது. கண்ணன் சார் கூப்பிட்டதும் மறு வார்த்தையில்லாமல் வந்து சேர்ந்துட்டேன். ஐஸ்வர்யா மாதிரியான அருமையான ஆர்ட்டிஸ்ட்கூட நடிக்கும்போது நாமும் அந்த லெவலுக்கு நடிப்பைக் காட்ட வேண்டியிருக்கும். சொந்தக்கதைகள் போக, ரீமேக்கிலும் கண்ணன் சார் ரொம்பத் திறமையானவர். அவருடைய ‘கண்டேன் காதலை’ எல்லாம் மறக்க முடியாது” என்றார் ராகுல்.

‘ஷாட்’ முடித்துவிட்டு வந்திருக்கிற இயக்குநர் கண்ணன், “இன்னும் 15 நாள்களுக்குள் படத்தை முடித்து விடுவோம். ஐஸ்வர்யாகிட்டே பிடிச்சது, குறைவான காலத்தில் நிறைவான படங்களில் நடிச்சது. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா, விளையாட்டு வீராங்கனையா, நீதிக்குப் போராடுற பெண்ணா பலவேடங்களில் நடிச்ச ஐஸ்வர்யாவுக்கு இந்தப் படமும் சிறப்பு சேர்க்கும்” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism