Published:Updated:

“முதல்வராலதான் இது சாத்தியமாச்சு!”

ஸ்டாலின் - விக்னேஷ் சிவன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - விக்னேஷ் சிவன்

தரையையே ஸ்க்ரீன் ஆக்கி, கூரையில இருந்து கேமராக்கள் மூலமா காட்சிகளை ஒளிபரப்பணும். 3டி புரொஜெக்டர் கேமராக்கள் 36 பயன்படுத்தினோம்

“முதல்வராலதான் இது சாத்தியமாச்சு!”

தரையையே ஸ்க்ரீன் ஆக்கி, கூரையில இருந்து கேமராக்கள் மூலமா காட்சிகளை ஒளிபரப்பணும். 3டி புரொஜெக்டர் கேமராக்கள் 36 பயன்படுத்தினோம்

Published:Updated:
ஸ்டாலின் - விக்னேஷ் சிவன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - விக்னேஷ் சிவன்

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சென்டர் அட்ராக்‌ஷன், அதன் தொடக்க விழா. 3டி தொழில்நுட்பத்தில், கமல்ஹாசன் குரலில் தமிழர் வரலாறு சொன்ன கலை நிகழ்ச்சி... அட்டகாச மணல் ஓவியம்... அத்தனை நாடுகளின் கொடிகளையும் இணைத்த அற்புத நடனம் என பிரதமர் மோடியே வியந்து தமிழக முதல்வர் ஸ்டாலினைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டிய விழா. சர்வதேசத் தரத்துடன் நடந்த அந்த விழா, உலக நாடுகளிலிருந்து வந்திருந்த செஸ் வீரர்களை வியக்க வைத்தது. இந்த விழாவை இயக்கியவர் விக்னேஷ் சிவன். அவரிடம் பேசினேன்.

‘‘உதயநிதி ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தைப் பார்த்துட்டு போன் பண்ணி விஷ் பண்ணினார். அப்போ, இந்த செஸ் ஒலிம்பியாட் பற்றிச் சொன்னார். இதுக்கு சில ஐடியாக்கள் கேட்டார். நேப்பியர் பாலத்தையும் கத்திபாரா மேம்பாலத்தையும் செஸ் போர்டு மாதிரி பிளாக் அண்ட் ஒயிட் பண்ணலாம்னு சொன்னேன். இந்த பாயின்ட்ல இருந்து தான் பேசினோம். நிறைய ஈவன்ட் பார்த்த அனுபவம் இருந்ததால், நிறைய வித்தியாசமான ஐடியாக்கள் பேசினோம். உமேஷ் மற்றும் ராகினி எங்ககூட இணைஞ்சாங்க. முக்கியமான அமைச்சர்கள் எல்லார் கூடவும் மீட்டிங் நடந்துச்சு. தொடக்க விழா சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க வேண்டியது. மழை வர வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க. அதனால், நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்தினோம்.’’

“முதல்வராலதான் இது சாத்தியமாச்சு!”

``3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் மேடை அமைப்பு உங்க ஐடியாவா?’’

‘‘ஆமா. துபாய் எக்ஸ்போவுல 3டி மேப்பிங் பார்த்தேன். வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என் படத்தில் பாடல் காட்சிக்குப் பயன்படுத்திக்கலாம்னு நினைச்சேன். 186 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துக்குற நிகழ்ச்சி. அதுல இங்கிலீஷே தெரியாதவங்களும் இருப்பாங்க. எல்லாருக்கும் புரியுற பாஷைல நிகழ்வு நடந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. காட்சிகளும் இசையும்தான் எல்லோருக்கும் புரியற மொழி. அதுல சொல்றப்போ எல்லாருக்கும் போய்ச் சேர்ந்திரும்னு நினைச்சேன். இதுக்காக, துபாய்ல நான் பார்த்த கிரியேட்டிவ் பேக்டரி டீமைக் கூப்பிட்டு வந்தோம். தமிழக அரசு சர்வதேசத் தரத்துல நிகழ்ச்சி இருக்கணும்னு நினைச்சாங்க. ஒரு படம் பண்றதுக்கு புரொடியூசர் சரியா இருக்கணும். அப்படித்தான் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பட்ஜெட்டும் சுதந்திரமும் கொடுத்தாங்க.

“முதல்வராலதான் இது சாத்தியமாச்சு!”

நேரமே இல்லாத சூழல். 3டி மேப்பிங் காட்சிகள், கலைஞர்கள், வண்ணங்கள் எல்லாமே சரியா வரணும். எல்லாத்துக்கும் பெஸ்ட்டா இருந்தவங்களைக் கொண்டு வந்திருந்தோம். கிட்டத்தட்ட பத்தாயிரம் பேரோட உழைப்பு. மொத்தமே மூணு நாள்தான் ரிகர்சல் பண்ண முடிந்தது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியா ரிகர்சல் பண்ணினோம். விஷுவல் தனியா, லைட்ஸ் தனியா, கலைஞர்கள் தனியான்னு ரிகர்சல் பண்ணுனதை எல்லோரும் பார்த்தாங்க. நிகழ்ச்சி முழுமையா எப்படி இருக்கும்னு யாருக்கும் தெரியாது. எல்லோரும் பார்த்த நேரத்துலதான் நானும் பார்த்து ரசிச்சேன்.’’

“முதல்வராலதான் இது சாத்தியமாச்சு!”

``முதலமைச்சர் ஸ்டாலினை இயக்கிய அனுபவம்?’’

‘‘நேப்பியர் பாலத்தில் ஷூட்டிங் ரெண்டு மணி நேரத்தில் நடத்தி முடிச்சிட்டோம். ஆறு மணிக்கு ஆரம்பிச்சோம். ஏழு மணிக்கு ரஹ்மான் சார் வந்தார். எட்டரை மணி வரைக்கும் ரஹ்மான் சார் போர்ஷன். அடுத்த அரைமணி நேரத்துல ஸ்டாலின் சார் போர்ஷன் எடுத்துட்டேன். ஏன்னா, எங்களுக்கு ஒன்பது மணி வரைக்கும்தான் அனுமதி கொடுத்திருந்தாங்க. டிராஃபிக் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி எல்லாமே வேகமா நடந்தது. அஜித் சார், ‘சூழலை மகிழ்ச்சியா வச்சிக்கிட்டு நம்ம வேலையை என்ஜாய் பண்ணிப் பண்ணுனா, வேலை சக்சஸ்புல்லா இருக்கும்’னு சொல்வார். அப்படித்தான் இந்த ஷூட்டிங் நடந்தது.

ஒரு முதல்வரை இயக்கறோம்ங்கறது ஆரம்பத்துல பதற்றமா இருந்தது. ஆனா, அஞ்சாவது நிமிஷத்துலயே கம்பர்ட் ஜோன்ல வெச்சிக்கிட்டார். அவருடைய செக்யூரிட்டி ஆபீஸர் உட்பட எல்லாரும் அப்படித்தான். நம்மில் இருந்து ஒருத்தர் முதலமைச்சர் இடத்துல இருக்கார்னு தோண வெச்சிட்டார். என்னை ஒரு இயக்குநரா மதிச்சு, என் வேலைக்கு மரியாதை கொடுத்தார். ஒளிப்பதிவாளர் ரத்னவேல் சார் மற்றும் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா சொன்ன விஷயங்களையும் கேட்டு நல்லபடியா ஒத்துழைப்பு கொடுத்தார். அவராலதான் இது சாத்தியமாச்சு. தமிழ்நாட்டுக்கு நல்ல முதலமைச்சர் கிடைச்சிருக்கார்னு சந்தோஷமா இருந்தது. இந்த நிகழ்ச்சி முடிச்ச அடுத்த நாள் போன் பண்ணி, ‘ரொம்ப நல்லா பண்ணியிருந்தீங்க விக்னேஷ்’ன்னு பேர் சொல்லிக் கூப்பிட்டு வாழ்த்தினது பெருமையா இருந்தது. அது வாழ்நாளுக்கும் நிறைவு தர்ற பாராட்டு.’’

“முதல்வராலதான் இது சாத்தியமாச்சு!”

``உங்க அம்மா காவல்துறையில இருந்தவங்க, எப்படி பீல் பண்ணினாங்க?’’

‘‘அம்மாவை இந்த விழாவை நேர்ல பார்க்கக் கூப்பிட்டுப் போயிட்டேன். அம்மாவுடைய பிறந்தநாள் அன்னைக்கு ரிகர்சல் போயிட்டு இருந்தது. இதுதான் அம்மாவுக்கு நான் கொடுத்த பர்த்டே கிப்ட்னு சொல்லலாம். அம்மாகூட வேலை பார்த்த போலீஸ் ஆபீஸர்ஸ் அம்மாகிட்ட பேசினாங்க. நிறைய நிகழ்ச்சிகள்ல அம்மா இப்படித்தான் பாதுகாப்புக்குப் போறேன்னு சின்ன வயசுல என்கிட்ட சொல்லிட்டுப் போவாங்க. இதெல்லாம் எனக்கு அங்கேயிருக்கிற ஒவ்வொரு போலீஸ் ஆபீஸரைப் பார்க்கும்போதும் தோணிக்கிட்டே இருக்கும். ப்ளஸ் ஒன் படிச்சிட்டு இருந்தப்போ சென்னைல ஏஆர்.ரஹ்மான் கான்செர்ட் நடந்தது. அப்போ அம்மா டியூட்டில இருந்தாங்க. டிக்கெட் கிடைக்கல. ஈவன்ட் நடக்குற இடத்துக்குப் போய் ஓரமா நின்னுக்கிட்டிருந்தேன். அம்மா என்னைப் பார்த்துட்டு முன்னாடி கூப்பிட்டுப் போய் உட்கார வெச்சாங்க. ரஹ்மான் சார் பாடுனப்போ எனக்குள்ள இருந்த உணர்வுக்கு வார்த்தைகளே இல்ல. அங்கேயிருந்துதான் சினிமாக் கனவு அதிகமாகிருச்சு. இப்போ அதே ரஹ்மான் சார் மேடையை நான் இயக்க, அம்மா பார்க்க வந்திருக்காங்கன்னு நினைச்சப்போ சந்தோஷமா இருந்தது. ஈவன்ட் முடிஞ்சதும் எல்லா ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கிட்டாங்க. அப்போ என்னையும் கூப்பிட்டு நிக்க வெச்சாங்க. நான் ஐ.ஏ.எஸ் ஆகணும்னு அப்பாவுக்கு ஆசை. அப்போ அப்பா மேல இருந்து என்னை ஆசீர்வதிக்குற மாதிரியான உணர்வு. ஏன்னா, இந்த ஈவன்ட் நடந்தப்போ எங்க அப்பாவுடைய நினைவுநாள்.’’

“முதல்வராலதான் இது சாத்தியமாச்சு!”
“முதல்வராலதான் இது சாத்தியமாச்சு!”

``உங்க நண்பர் டைரக்டர் நெல்சன் நிறைய நிகழ்ச்சிகளுக்கு வேலை பார்த்திருக்கார். அவர் ஏதாவது ஆலோசனைகள் சொன்னாரா?’’

‘‘என்கூடச் சேர்ந்து நெல்சனும் வொர்க் பார்க்கிற மாதிரி இருந்தது. ஆனா, நெல்சனுக்கு ஆகஸ்ட்ல ஷூட்டிங் ஆரம்பிக்கறதால, அது முடியல. ஆனா, நெல்சன் நிறைய ஆலோசனைகள் சொன்னார். எங்க டீம் ரொம்ப ஸ்ட்ராங்க இருந்ததனால எல்லாமே சரியா நடந்திருச்சு. உமேஷ், ராகினிதான் மூளையா இருந்தாங்க. ஆர்ட் டைரக்டர் கிரண் உழைப்பும் அதிகம்.

தரையையே ஸ்க்ரீன் ஆக்கி, கூரையில இருந்து கேமராக்கள் மூலமா காட்சிகளை ஒளிபரப்பணும். 3டி புரொஜெக்டர் கேமராக்கள் 36 பயன்படுத்தினோம். கூரையில் பொருத்தின அந்த 36 கேமராக்களையும் ஒருங்கிணைச்சு ஒரே காட்சியைக் கொண்டு வரணும். அதுக்குப் பொருத்தமான ஒலிகள் வரணும், கலைஞர்கள் சரியான இடங்கள்ல நின்னு நிகழ்ச்சி நடத்தணும். வண்ண விளக்குகள் சரியான ஒளியைக் கொடுக்கணும். சவாலான வேலை, சரியாக நடந்துச்சு. பிரதமர் அலுவலகத்துல இருந்தும் பாராட்டினாங்க. எனக்கு இது முதல் நிகழ்ச்சி. பிரதமர், முதல்வர், ரஜினி சார், எங்க அம்மா எல்லோரும் பார்க்க, அப்பா மேலே இருந்து ஆசீர்வதிக்க, தமிழர் வரலாற்றைச் சொல்ற ஒரு நிகழ்ச்சியை எல்லோரும் ரசிக்கும்படியா கொடுத்த நிறைவு ஆயுளுக்கும் இருக்கும்.’’

“முதல்வராலதான் இது சாத்தியமாச்சு!”

``கமல் வாய்ஸ் பயன்படுத்தலாம்னு எப்போ தோணுச்சு?’’

‘‘கமல் சார் குரல்ல இது இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். உதயநிதி சார்கிட்ட இதைச் சொன்னேன். அவர்தான் கமல் சார்கிட்ட பேசினார். அமெரிக்கா கிளம்பற அவசரத்தில் இருந்தாலும், கமல் சார் வந்து பேசிக்கொடுத்தார். அவர் குரல்ல தமிழர் வரலாற்றுப் பெருமையைப் பக்கத்துல இருந்து ரெக்கார்டிங்ல கேக்கறப்பவே சிலிர்ப்பா இருந்துச்சு. ஒரு வேனுக்குள்ளதான் ரெக்கார்டிங் போச்சு. அரை மணி நேரம் இருந்தேன். கமல் சார்கூட போட்டோ எடுக்கலன்னு ரொம்ப பீல் பண்ணினேன். ஊர்ல இருந்திருந்தா நிகழ்ச்சிக்கு கமல் சார் வந்திருப்பார்.’’

“முதல்வராலதான் இது சாத்தியமாச்சு!”
“முதல்வராலதான் இது சாத்தியமாச்சு!”

``நயன்தாரா என்ன சொன்னாங்க?’’

‘‘இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடக்கறப்போ, எங்க திருமணத்துக்கான ஏற்பாடுகளும் நடந்துட்டிருந்தது. மும்பைல ஷாதி ஸ்குவாட் டீமோட திருமணத்துக்காக மீட்டிங் போயிட்டு இருக்கும். அப்போ தலைமைச் செயலகத்துல இருந்து அவசரமா கூப்பிடுவாங்க. ‘நீங்க, போயிட்டு வாங்க’ன்னு சொல்லிட்டு கல்யாண வேலைகளை அவங்க பார்த்துக்கிட்டாங்க. எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருந்ததால சரியா மேனேஜ் பண்ணிட்டோம். திருமணம் முடிஞ்சவுடனே இந்த வேலைகள் அதிகமாச்சு. இடையில ஊருக்கெல்லாம் போயிட்டு வந்தோம். நிகழ்ச்சிக்கு இவங்களையும் கூப்பிட்டுப் போக நினைச்சேன். ஆனா, பிரதமர் நிகழ்ச்சி என்பதால் புரொட்டோகால் பிரச்னைகள் இருந்தது. நேர்ல வர்றதைவிட சிறப்பா அவங்க டி.வி-ல பார்த்தாங்க. நிகழ்ச்சி முழுக்க டி.வி-ல பார்த்துட்டு ‘செம பா... சூப்பர்’னு மெசேஜ் பண்ணினாங்க.’’