Published:Updated:

மிரட்டும் கொரோனா வைரஸ் பயோ ஆயுதமா?

கசிந்ததன் பின்னணி என்ன?

பிரீமியம் ஸ்டோரி

1-ம் ஆண்டில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் ‘கன்டேஜியன்’ (contagion). இது, வைரஸ் தாக்குதலால் உலகமே சின்னாபின்னமாவதையும் அதன் கடும் பாதிப்புகளையும் விவரித்தது. கொரோனா வைரஸ் தாக்குதலால் கிட்டத்தட்ட அதே நிலைமைதான் இப்போது சீனாவுக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவில் இதன் தாக்குதல் தொடங்கியிருந்தாலும் இந்தியா உள்ளிட்ட ஆசிய உலக நாடுகள் பலவும் கொரோனாவைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றன. இதற்கிடையே, `கொரோனா வைரஸ் தாக்குதல் இயல்பாக ஏற்பட்டதல்ல. `உயிரியல் போர்’ என்னும் பயோ ஆயுத தயாரிப்புப் பணியின்போது விபத்தாக வெளியே கசிந்திருக்கலாம்’ என்ற தகவல்களால் மிரண்டு கிடக்கின்றன உலக நாடுகள்!

கொரோனா வைரஸ் 
பயோ ஆயுதமா?
கொரோனா வைரஸ் பயோ ஆயுதமா?

2020, ஜனவரி 28-ம் தேதி நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 106-ஐத் தொட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 4,500 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 17 நாடுகளில் இதன் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் தாக்குதல் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரம் முழுவதுமாக முடக்கிவைக்கப்பட்டுள்ளது.

2019, டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே இந்த நகரத்தில் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப் பட்டனர். இதுகுறித்து எச்சரித்த உலக சுகாதார மையம், சீன அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டது. இதன் பிறகுதான் டிசம்பர் 31-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்குதலை சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால், அடுத்தடுத்த நாள்களில் ஹுபி மாகாணத்தின் 15 நகரங்களுக்குப் பரவிவிட்டது கொரோனா.

வைரஸ் குறித்து பேசும் மருத்துவ வல்லுநர்கள், “கொரோனா வைரஸ் தாக்கியவுடனேயே, அது ரத்த வெள்ளை அணுக்களைச் செயலிழக்க வைத்துவிடும். தொடர்ந்து நுரையீரலைப் பாதித்து வீக்கம் ஏற்படுத்தி நிமோனியா காய்ச்சலை உண்டாக்கும். மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறுதியில் மரணம் நிகழும். இந்த வைரஸின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை” என்றார்கள்.

கொரோனா வைரஸ் 
பயோ ஆயுதமா?
கொரோனா வைரஸ் பயோ ஆயுதமா?

இதற்கிடையே, `கொரோனா வைரஸ் பயோ ஆயுதமா?’ என்ற கேள்வி, உயிரியியல் விஞ்ஞானிகள் மத்தியில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகிறது. இதன் பின்னணியில் சில பகீர் சம்பவங்களையும் விஞ்ஞானிகள் அலசுகிறார்கள். இதுபற்றி நம்மிடம் பேசிய மருத்துவ நிபுணர்கள் சிலர், “2012, ஜூன் மாதம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரத்தின் தனியார் மருத்துவமனை ஒன்றில் 61 வயது முதியவர் திடீர் காய்ச்சலால் அனுமதிக்கப்படுகிறார். அவரது நுரையீரலில் இறுக்கம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்த நுரையீரல் மருத்துவர் முகமது ஜாகி, வித்தியாசமான புதிய வைரஸ் ஒன்று நுரையீரலில் இருப்பதைக் கண்டுபிடித்தார். இதுகுறித்து தன் நண்பரான நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் உள்ள ‘இராஸ்மஸ் மெடிக்கல் சென்டரின்’ மருத்துவர் ரோன் பவுச்சரைத் தொடர்புகொண்டு சொல்கிறார். இதற்கிடையே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அந்த முதியவர் இறந்துவிட்டார். பிறகு நெதர்லாந்து நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த வைரஸ் தொடர்பான ஆராய்ச்சி வேகமெடுக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2013, மே மாதம் அந்த வைரஸின் மாதிரிகள் கனடாவின் வின்னிபெக் நகரத்தில் உள்ள தேசிய நுண்ணுரியியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இங்கிருந்துதான் அந்த வைரஸ் சீனாவுக்குக் கடத்தப்பட்டு, பயோ ஆயுதமாக `கொரோனா வைரஸ்’ என்ற பெயரில் உருமாறி, தற்போது உலகையே அச்சுறுத்துவதாக நுண்ணுயிரியியல் விஞ்ஞானிகள் சந்தேகிக்கிறார்கள்.

சியாங்குவோ கியு, கெடிங் செங்
சியாங்குவோ கியு, கெடிங் செங்

கனடாவின் தேசிய நுண்ணுயிரியியல் ஆய்வகம், மிகவும் ஆபத்தான வைரஸ்களை ஆய்வுசெய்யும் ‘பயோ சேஃப்டி லெவல் 4’ வகையைச் சேர்ந்தது. இந்தியாவிலும் போபால், ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் ‘லெவல் 4’ ஆய்வகங்கள் உள்ளன. சியாங்குவோ கியு என்கிற சீனப் பெண்மணியும் அவரின் கணவர் கெடிங் செங்கும் கனடா ஆய்வகத்தில் பணிபுரிந்தனர். இருவரும் கடந்த 15 ஆண்டுகளில் ஏராளமான சீன மாணவர்களை ஆராய்ச்சி உதவிக்காக அந்த ஆய்வகத்துக்கு அழைத்துவந்துள்ளனர். 2019, மார்ச் மாதம் இந்த ஆய்வகத்திலிருந்து மர்ம பார்சல் ஒன்று சீனாவின் வூஹான் நகரத்தில் உள்ள தேசிய உயிர் பாதுகாப்பு ஆய்வகத்துக்குச் சென்றிருப்பதை கனடாவின் உளவுத்துறை கண்டுபிடித்தது.

இதுகுறித்து அவர்கள் விசாரித்தபோதுதான், நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரிலிருந்து கனடாவுக்கு ஆய்வுக்குக் கொண்டுவரப்பட்ட வைரஸை ரகசியமாக சீனாவுக்கு அந்தத் தம்பதியர் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 2019, ஜூன் மாதம் இந்தத் தம்பதியர் மற்றும் அவர்களுடன் பணிபுரிந்த சீன மாணவர்கள் அனைவரும் கனடாவிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.

சீனாவின் வூஹான் நகரத்தின் தேசிய உயிர் பாதுகாப்பு ஆய்வகத்துக்குக் கொண்டுவரப்பட்ட அந்த வைரஸ், ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு `கொரோனா வைரஸ்’ என்னும் பெயரில் பயோ ஆயுதமாக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் நான்கு மாதங்களாக ஆராய்ச்சியில் இருந்த இந்த வைரஸ், ஆய்வகத்தில் பணிபுரியும் சிலர் மூலம் நவம்பர் மாத இறுதியில் வெளியேறி நகரெங்கும் பரவ ஆரம்பித்துவிட்டதாகத் தெரியவருகிறது.

2019, டிசம்பர் 1-ம் தேதியே இந்த வைரஸ் தாக்குதலால் 60 வயது முதியவர் ஒருவர் வூஹான் அரசு மருத்துவமனையில் இறந்துபோனார். வூஹான் ‘லெவல் 4’ ஆய்வகத்தை உளவுப் பார்க்கும் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ, இந்தச் சம்பவம்குறித்து உடனடியாக உலக சுகாதார மையத்தை எச்சரித்தது. அதன் பிறகே, 2019, டிசம்பர் 31-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்குதல் பரவுவதை சீன அரசு ஒப்புக்கொண்டது” என்றார்.கள்.

``அடுத்த 20 நாள்களுக்குள் இந்த வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லையெனில், உலக மக்கள்தொகையில் பத்து சதவிகிதத்தை ஒரு வருடத்துக்குள் கொரோனா காவு வாங்கிவிடும்’’ என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சியூட்டுகிறார்கள். இந்தியாவில் இதன் தாக்கம் இதுவரை உணரப் படவில்லை. இருப்பினும் சீனாவிலிருந்து நாடு திரும்புபவர்களை ஏழு நாள்கள் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. 2020-ம் ஆண்டின் தொடக்கமே அதிர்ச்சியும் ஆபத்தும் கலந்த வருடமாகத்தான் தொடங்கியிருக்கிறது.

``பயப்படத் தேவையில்லை!’’

மிரட்டும் கொரோனா வைரஸ் 
பயோ ஆயுதமா?

“கொரோனா வைரஸ் தாக்குதலின் பின்னணியில் பயோ ஆயுதம் விவகாரம் இருக்க வாய்ப்பு இருக்கிறதா?’’ என்று, ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம்.

‘‘சர்வதேச அளவில் பீதியைக் கிளப்பிவருகிறார்கள். நாம் பெரிதாக அச்சப்படத் தேவை யில்லை. இந்த வைரஸ், முதலில் சவுதி அரேபியாவில்தான் பரவத் தொடங்கியது. பிறகு ஆப்பிரிக்கா விலும் தற்போது சீனாவிலும் பரவிவருகிறது. இது குளிர்காலத்தில் பரவும் சாதாரண வைரஸ்தான். ‘பயோ ஆயுதம்’ என்று சொல்ல முடியாது. சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலே பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இந்திய மருத்துவத் துறையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு