சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ்... நோய் பரவல், ஆரோக்கியம், பயணக் கட்டுப்பாடுகள், பொருளாதாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் உலகெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது. அவற்றின் தொகுப்பு இங்கே...

l கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கிய முதல் சில தினங்களில், அதை எப்படிக் குறிப்பிடுவது என்று அறியாத உலக சுகாதார நிறுவன அதிகாரிகள், ‘நாவல் (புதிய) கொரோனா’ எனக் குறிப்பிட்டுவந்தனர். கொரோனா தீவிரமடைந்ததால் Corona Virus Disease என்பதைச் சுருக்கி `கோவிட்- 19’ (COVID - 19) என்று தற்போது பெயரிட்டுள்ளனர். 19 என்ற எண் கொரோனா வைரஸின் இந்த வகை கண்டறியப்பட்ட வருடத்தைக் குறிக்கிறது.

l இந்தியாவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது. தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு, முதன்முதலாக பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நபருக்கு நடந்த இரண்டுகட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு, அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார் என்பது தெரியவந்தது. இப்போதைய நிலவரப்படி, இந்தியாவில் இருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

l ‘டைமண்ட் பிரின்சஸ் க்ரூஸ் (Diamond Princess cruise)’ என்ற பிரிட்டிஷ் கப்பலில் பயணித்த 3,000-க்கும் மேற்பட்ட பயணிகளில் 175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருந்தது. அந்தக் கப்பலில் இருக்கும் 138 இந்தியர்களில் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் மதுரையைச் சேர்ந்த அன்பழகன் பணியாற்றுகிறார். அவரின் மனைவி மல்லிகா, தன் கணவர் அன்பழகன் உட்பட இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுத் தரக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதற்கிடையே டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம், கப்பலில் உள்ள இந்தியர்களை தொடர்புகொண்டு உதவ முன்வந்துள்ளதாக வீடியோவில் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

l கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டதை யடுத்து, பிரச்னை உச்சத்திலிருக்கும் ஹூபெய் மாகாணத்தில் பொறுப்பிலிருந்த மூத்த மருத்துவ அதிகாரிகள் இருவர், பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல மருத்துவ அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

l சீனாவின் தனித்துவமே அதன் தொழில் வளர்ச்சிகள்தாம். உலகின் இரண்டாவது பொருளாதார வளமிக்க நாடு சீனா. சீனாவின் அனைத்து தொழில்களையும் கொரோனா முடக்கிவிட்டதைத் தொடர்ந்து, சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியிருக்கிறது. இந்த வீழ்ச்சி, தற்போது உலகப் பொருளாதாரத்தையே அசைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பொருளாதார இழப்பைக் காட்டிலும், இப்படியான தொற்று வியாதிகளால் ஏற்படும் இழப்புகள் பல மடங்கு அதிகம் என்று குறிப்பிடுகிறது உலக வங்கி. உலக வங்கியின் ஓர் ஆய்வில், இந்தப் பொருளாதார சிக்கலால் உலகப் பொருளாதாரத்தில் மூன்று லட்சம் கோடி டாலர் (இந்திய மதிப்பில் 213.9 லட்சம் கோடி ரூபாய்) வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

l சீனாவில் கொரோனா பாதிப்பு தொடங்கியது டிசம்பர் மாதத்தில். ஆனால், ஜனவரி 20-ம் தேதிதான் சீன அரசு அதை உறுதிசெய்தது. அதன் பிறகுதான், சீனாவின் வூஹான் நகரம் முடக்கப்பட்டது. ஆனால், இடைப்பட்ட நாளில் வூஹானிலிருந்து ஏறத்தாழ 50 லட்சம் பேர் வெளியேறிவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது. இவர்களில் கொரோனா பாதித்தவர்களும் இருக்கலாம் என்பதால், அவர்கள் வழியாக கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இதுவரையில் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர். ஆகையால், இந்தக் கணிப்பு உண்மையாகவும் இருக்கலாம்.

l ‘வெஸ்டர்டாம் க்ரூஸ் (Westerdam cruise)’ என்ற கப்பல் வழியாக சீனாவிலிருந்து தாய்லாந்துக்கு வந்த 2,200 பயணிகள் தரையிறங்க, தாய்லாந்து அரசு தடைவிதித்துவிட்டது. ஹாங்காங், சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணப்படுபவர்களுக்கு தைவான் அரசு கொரோனா எச்சரிக்கைவிடுத்துள்ளது. சீனாவிலிருந்து பயணிப்பவர்களுக்கும் சீனாவுக்குப் பயணப்படுபவர்களுக்கும் பயணக் கட்டுப்பாடுகளில் கெடுபிடி காட்டிவருகின்றன உலக நாடுகள்.

l கொரோனா தொற்று உதிரும் தலைமுடி வழியாகக்கூடப் பரவும் வாய்ப்புள்ளதால், சீனாவில் மருத்துவப் பணியில் உள்ள செவிலியர்கள் பலர் தாங்களே முன்வந்து மொட்டை போட்டுள்ளனர். ‘நோய் பரவலைத் தடுக்க, சீன மக்களும் இதை முயற்சி செய்யலாம்’ என்ற விழிப்புணர்வுப் பிரசாரத்துடன், சமூக வலைதளங்களில் மொட்டைத்தலையுடன் வீடியோப் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து, சீன மருத்துவப் பணியாளர்கள் பலரும் தலைமுடியை ஒட்ட வெட்டிவிட்டனர். சில ஆர்வலர்கள் நோய் பாதிப்பு அச்சத்தையும் மீறி, தாங்களே முன்வந்து மருத்துவர்களுக்கு முடிவெட்டிவிடுகின்றனர்.

l கெரோனா வேகமாகப் பரவியதால், ஜனவரி 30-ம் தேதி ‘சர்வதேச மருத்துவ அவசர நிலை’ என்று அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். பிப்ரவரி 3-ம் தேதி, உலகளாவிய அளவில் அச்சம்கொள்ளும் அளவுக்கு இது தீவிரமான பாதிப்பு இல்லை என்றனர், உலக சுகாதார நிறுவன அதிகாரிகள். ஆனால், கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வராமல் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டெட்ராஸ், ‘உலக நாடுகள், கொரோனாவை நம்பர் ஒன் எதிரியாக நினைத்துச் செயல்பட வேண்டும்’ என்று அலர்ட் செய்துள்ளார்.

l சீனாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் குயோ வெங்கொய் (guo wengui) சமீபத்தில் அளித்த பேட்டியில், “சீனாவில் 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்புள்ளது. சீனாவில் உள்ள தகன அறைகள் அனைத்தும் 24X7 இயங்குகிறது. மறைக்கப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 50,000 இருக்கலாம்’’ என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சீன அரசோ, `அவர் சொல்வது அத்தனையும் பொய். அவர் ஓர் உளவாளி; ஏகப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்’ என்று அவர்மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது.