Published:Updated:

வினு விமல் வித்யா: வயிற்றில் குழந்தை... மோட்டார் சைக்கிளில் உலகைச் சுற்றி ஆறு மாத பயணம்!

வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
வினு விமல் வித்யா

சஹானா

வினு விமல் வித்யா: வயிற்றில் குழந்தை... மோட்டார் சைக்கிளில் உலகைச் சுற்றி ஆறு மாத பயணம்!

சஹானா

Published:Updated:
வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
வினு விமல் வித்யா

காபி ஷாப்பில் காத்திருந்தாள் விமல். பத்து நிமிடங் களுக்குப் பிறகு வித்யாவும் வினுவும் வந்து சேர்ந் தார்கள். காபியை ஆர்டர் செய்துவிட்டு, அரட் டையை ஆரம்பித்தனர்.

“உங்க ரெண்டு பேருக்கும் சாக்லேட் பொக்கே” என்று நீட்டினாள் வினு.

“ சாக்லேட் பொக்கே கொடுக்குற அளவுக்கு நாங்க என்ன செஞ்சோம்?” என்று கேட்டனர் வித்யாவும் விமலும் .

“நீங்க செய்யல. ஆனா, இந்த சாக்லேட் விளம்பரம் ஒரு மாற்றம் செஞ்சிருக்கு... அதைக் கொண்டாடத்தான் இந்த பொக்கே!”

“புரியற மாதிரி சொல்லு ” என்றார் வித்யா.

“இருபது வருஷங்களுக்கு முன்னால இந்த விளம்பரத்துல ஆண்கள் கிரிக்கெட்டுல ரன் எடுத்து ஜெயிக்கவெச்ச காதலனுக்காக கிரவுண்டுக்குள்ள ஓடி வருவாள் காதலி. ஆனா, இப்போ பெண்கள் கிரிக்கெட்டுல காதலி ரன் எடுத்து ஜெயிக்க, காதலன் ஓடி வர்றான். அதே பாட்டு, அதே இசை, அதே கான்செப்ட். ஆனா, எவ்வளவு பெரிய மாற்றம். இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குக் கிடைச்ச வெற்றி இது.”

“வாவ்! சூப்பர் வினு. மாற்றம் முன்னேற்றம். என்ன வித்யாக்கா, நரைமுடி தெரியுது. டை அடிக்கலையா?” என்று கேட்டாள் விமல்.

“சமீரா ரெட்டி சொன்னதைப் படிச்சேன். எனக்கும் டை அடிக்கத் தோணல!”

“என்னது, ஆக்ட்ரஸ் சமீராவா? என்ன சொன்னாங்க வித்யாக்கா?”

“ஆமா, நரைமுடி தெரியக் கூடாதுன்னு ரெண்டு வாரத்துக்கு ஒருதடவை டை அடிப்பேன். ஆனா, இப்ப விருப்பம் இருந்தா மட்டுமே டை போட்டுக்கறேன். நரையை பத்திக் கவலைப்படறதில்ல. பழைய நடை முறைகளை உடைக்கிறப்பதான் புதிய மாற்றங்கள் வரும். ஒவ்வொரு நாளும் சின்னச் சின்ன மாற்றங்களாலதான் நாம் நிறைய கத்துக்கறோம். சின்ன அடியா இருந்தாலும் மிகப் பெரிய உயரத்துக்கு இந்த மாற்றங்கள் கொண்டு போகும்னு சொல்லிருக்காங்க!”

“ஓ... சினி இண்டஸ்ட்ரீல இருக்கிறவங்க இதைச் சொல்றது ரொம்ப முக்கியமான விஷயம், வித்யாக்கா.”

காபி வந்தது. மூவரும் ரசித்துக் குடிக்க ஆரம்பித்தனர்.

“அஜீத் ஒரு பெண்ணை மீட் பண்ணின நியூஸ் வைரலாச்சே... பார்த்தீங்களா... அவங்க மாரல் யாசர்லூ. ஈரான்ல பிறந்து, வளர்ந்த வங்க. 16 வருஷத்துக்கு முன்னால இந்தியா வந்தாங்க. ஒரு நிறுவனத்துல வைஸ் பிரசி டெண்ட்டா இருந்தாங்க. அதோட ஃபேஷன் டிசைனிங் கத்துக்கிட்டு, உலக அளவுல ஃபேஷன் டிசைனராவும் இருந்தாங்க. திடீர்னு அவங்க செஞ்சிட்டிருக்கிற வேலைகள்ல திருப்தி இல்லைன்ற எண்ணம் வந்துருச்சு. உடனே உலகம் முழுக்க மோட்டார் சைக்கிள்ல சுத்தி வரணும்னு முடிவு செஞ் சாங்க. 2017-ம் வருஷம் தனியாளா கிளம்பி னாங்க. 18 மாசத்துல 7 கண்டங்கள்ல 67 நாடு களுக்குப் போயிருக்காங்க. இந்தப் பயணத்துல பெரு நாட்டுக்குப் போயிருந்தப்ப, அலெக்ஸாண்டர் வில்லியம் பாட்ரிக்கை மீட் பண்ணிருக்காங்க. ரெண்டு பேரும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாச்சு பிச்சுவுல கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. உடனே குழந்தையும் உண்டாயிருச்சு. வயித்துல குழந்தையைச் சுமந்துகிட்டு, அடுத்த ஆறு மாசம் உலகத்தைச் சுத்தி வந்திருக்காங்க” என்றாள் வினு.

“என்ன வினு சொல்றே? அதுவும் மோட்டார் சைக்கிள்ல எப்படி?”

“ `இந்தப் பயணத்தால கர்ப்பம் பத்தி அரை நூற்றாண்டுகளா சொல்லிட்டு வர்ற பல விஷயங்கள்ல உண்மை இல்லைன்னு புரிஞ்சிக் கிட்டேன். கர்ப்பத்தால என் பயணத்துல எந்தத் தடையும் வரல. குளிர், வெப்பம், மேடு, பள்ளம்னு பயணிச்சேன். கூடாரத்துல தங்கு னேன். கிடைச்சதைச் சாப்பிட்டேன். நீண்ட நேரம் ஓய்வெடுக்காம மோட்டார் சைக்கிள்ல போயிட்டே இருந்தேன். என் குழந்தை ரொம்ப ஹெல்த்தியாவும் ஹேப்பியாவும் இருக்கா. கர்ப்ப காலத்துல தாய் ஹேப்பியா இருந்தா மட்டும் போதும், வேற எதுவும் தேவையில்லைன்னு தெரிஞ்சுக்கிட்டேன்'னு சொல்லியிருக்காங்க மாரல் யாசர்லூ.”

‘`உண்மைதானே. நம்ம ஊரு காட்டு, மேட்டுல விறகு பொறுக்கப் போறப்ப புள்ளையைப் பெத்து ஒரு கையில சுமந்துகிட்டு, விறகை தலையில சுமந்து கிட்டு வந்தவங்கள பத்தி பாட்டி சொல்லக் கேள்விப்பட்டிருக்கோம் தானே. இடைப்பட்ட காலத்துலதான் கர்ப்பம், பிரசரவம்கிறதையெல்லாம் பூதாகரப்படுத்தி, ரொம்பவே பய முறுத்தி வெச்சிருக்காங்க. இந்த ஆங்கில மருத்துவம்கிறது பெரிய அளவுல வளர ஆரம்பிச்ச பிறகுதான் இதெல்லாமும். அதுக்கு முன்ன கர்ப்பம், பிரசவமெல்லாம் சர்வ சாதா ரண விஷயம்தானே’’ என்றார் வித்யா.

வினு விமல் வித்யா: வயிற்றில் குழந்தை... மோட்டார் சைக்கிளில் உலகைச் சுற்றி ஆறு மாத பயணம்!

“அப்படியே ஒரு வாழ்த்தை எம்மா ரடுகானுவுக்கும் சொல்லிடலாம்.பதினெட்டு வயசுலயே அமெரிக்கன் ஓப்பன் டென்னிஸ் பட்டத்தை வாங் கிட்டாங்க. 44 வருஷங்களுக்குப் பிறகு பிரிட்டனுக்கு அமெரிக்க ஓப்பன் பட்டத்தை வாங்கிக் கொடுத் திருக்காங்க. உலகத் தர வரிசைப் பட்டியல்ல 150வது இடத்துல இருந்த வங்க எம்மா. இன்னிக்கு கிராண்ட் ஸ்லாம் வென்ற சாதனையாளரா இருக்காங்க. அமெரிக்க ஓப்பன்ல ஒரு செட் ஆட்டத்துலகூடத் தோல்வியைச் சந்திக்காதவர்ங்கிற பெருமையும் கிடைச்சிருக்கு. நீச்சல், குதிரையேற்றம், கூடைப்பந்து எல்லாம் டிரை பண்ணிட்டு, அஞ்சு வயசுல டென்னிஸ் கத்துக்க ஆரம்பிச்சாங்க. பதிமூணு வருஷத்துல சாதிச்சிட்டாங்க எம்மா!” என்றாள் விமல்.

“எகிப்துல ஆணும் பெண்ணும் ஜோடியா ஒரு சிலை கண்டு பிடிச்சிருக்காங்க. அதுல ஆணின் இடுப்புலயும் கையிலயும் பெண் கைகளை வச்சுக்கிட்டு நிக்கிறாங்க. அந்தக் காலத்துல ஆண்களைவிடவும் பெண்கள் ரொம்ப உயர்வான இடத்துல வைக்கப்பட்டு, மதிக்கப்பட்டாங்க. பெண்கள்தான் எல்லாத்தையும் கத்துக்கொடுக்கறாங்க. அதனால அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்குற ஆண்கள், பெண்களைப் போல நீளமா முடி வளர்த்துக்க அனுமதிக்கப் பட்டிருக்காங்க. இந்தச் சிலைகள்ல ஆண் மேல கைகளை வெச்சதன் மூலம் பாதுகாப்பை யும் சக்தியையும் பெண் கொடுக்கிறாங்க. வெற்றி பெற்ற ஒவ்வோர் ஆணுக்குப் பின்னாலேயும் ஒரு பெண் இருக்கிறானு இன்னிக்குச் சொல்றோமே, அது இவங்க கிட்டேயிருந்துதான் வந்திருக்கும்னு சொல் றாங்க ஆராய்ச்சியாளர்கள்” என்றாள் வினு.

“ஒரு காலத்துல இருந்த உரிமைகளை யெல்லாம் விட்டுக்கொடுத்துட்டு, இப்ப ஒவ்வொண்ணுக்கும் போராடிட்டிருக்கோம்” என்றார் வித்யா.

“மிஷல் ஒபாமா புக் படிச்சிட்டியா விமல்?”

“படிச்சிட்டேன் வினு. என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ணிட்டாங்க மிஷல். அவங்களும் சின்ன வயசுல இனப் பாகு பாட்டுக்கு உள்ளாகியிருக்காங்க. வொயிட்னு கலர் பேரைச் சொல்றதுக்கே தயங்கியிருக்காங்க. இவங்களோட அண்ணனுக்கு பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டியில படிக்க இடம் கிடைக்குது. மிஷலும் அங்கே படிக்க விரும்பறாங்க. ஆனா, வீட்டிலுள்ளவங்க இவங்களுக்கு அவ்வளவு அறிவு இல்லைனு மறுக்கறாங்க. அதுக்காகக் கடினமா உழைச்சு, நல்ல மார்க் வாங்கி, பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டியில சட்டம் படிச்சிருக்காங்க. ஒரு கம்பெனில வேலை செஞ்சிட்டிருக்கும்போது, கஸ்டமரா பராக் ஒபாமா அறிமுகமாகறார். மிஷலின் கண்டிப்பான குணத்தால ஈர்க்கப்பட்ட ஒபாமா, கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்கிறார். கல்யாணமும் நடக்குது. ஒபாமா அரசியலுக்கு வர விரும்பறார். ஆனா, மிஷலுக்கு அதுல விருப்பமில்ல. ஆனா, சமூகத்துக்குத் தன்னால முடிஞ்சதைச் செய்யணும்னு நினைச்ச ஒபாமாவின் எண்ணத்தைப் புரிஞ்சிக்கிட்டு, மிஷலும் பக்க பலமா இருக்காங்க. மகள்கள் பிறக்கறாங்க. ரொம்ப அற்புதமான அப்பாவா இருந்தார் ஒபாமானு மிஷல் ரொம்ப நெகிழ்ச்சியோட எழுதியிருக்காங்க.”

“ஓ... இன்ட்ரெஸ்ட்டிங்... ஒபாமா அமெரிக்க அதிபரா வருவார்னு மிஷல் நினைச்சாங்களா?” என்றார் வித்யா.

“ஒபாமா அதிபர் பதவிக்குப் போட்டியிடு வார்னு அறிவிச்சப்ப, இந்த நாடு ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கரை அதிபரா ஏத்துக்கத் தயாராயிருச்சாங்கிற கேள்விதான் மிஷல்கிட்ட இருந்துச்சாம். தன்னை எதிர்த்து நின்ற பெரிய அரசியல்வாதிகளை எல்லாம், தன்னோட நேர்மறையான வாதத்தால ஒபாமா வீழ்த் தினார்னு சொல்றாங்க. வொயிட் என்பதைக் கூடச் சொல்ல முடியாம இருந்த மிஷல், வொயிட் ஹவுஸுக்குக் குடிபோறாங்க. மிஷலின் குணம்தான் தன்னை நேர்மையான வழியில பயணிக்க வச்சதுன்னு ஒபாமா சொல்றார். நியாயமான எதையும் தைரியமா பேசிடறதாலே, தான் ரொம்ப கிண்டலுக்கு உள்ளானதாகவும் `கோபக்கார கறுப்பினப் பெண்’ங்கிற பேர் கிடைச்சதாவும் சொல்றாங்க மிஷல். நானும் ஒபாமாவும் ஒவ்வொரு விஷயத்துலயும் கவனமா இருப்போம். நாங்க செய்யுற சின்ன தவறுகூட ஒட்டுமொத்த ஆப்பிரிக்க அமெரிக்கர்கர்களோட தவறா பார்க்கப்படும்ங்கிறது எங்களுக்குத் தெரியும்னு சொல்றாங்க மிஷல்.”

“ரொம்ப அண்டர்ஸ்டான்டிங் ஜோடி. ரெண்டு பேருக்குமே சமூகத்துல மாற்றத்தைக் கொண்டு வர, கடினமா உழைக்கணும்ங்கிற எண்ணம் இருந்திருக்கு. ஒபாமாவால அமெரிக்காவுல மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துட முடியாது. அங்கே உள்ள அரசியல் சாசனம் அப்படி. ஆனா, தனிப்பட்ட மனிதர்களா ஒபாமாவும் மிஷலும் நல்ல மனிதர்கள். அவங்களால முடிஞ்சதைச் செஞ்சிருக்காங்க” என்றாள் வினு.

``மிஷல் கதையில நேரம் போனதே தெரியல. சரி, நான் கிளம்பறேன்” என்று வித்யா எழுந்தார்.

``நாங்களும் கிளம்பிட்டோம்” என்று விமலும் வினுவும் எழுந்தனர்.

- அரட்டை அடிப்போம்...

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

வினு, விமல், வித்யா - மூவரும் உங்களுக்காக இந்த இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப்பரிசு காத்திருக்கிறது.

மருத்துவம், பொறியியல், அறிவியல் போன்ற துறைகளில் உயர்கல்வி கற்ற பெண்களில் பலர் திருமணத்துக்குப் பின் படிப்புக்கேற்ற பணி அல்லது தொழிலைத் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக வீட்டு நிர்வாகம், குழந்தை வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். இது பற்றி உங்கள் எண்ணம் என்ன?

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 5.10.2021

சென்ற வார கேள்வி...

‘பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதியை பலர் தேவையில்லாமல் சும்மாவேனும் ஊர் சுற்றுவதற்காகப் பயன் படுத்துகிறார்கள். அதனால்தான் கோவிட் காலகட்டத்திலும்கூட பேருந்துகளில் அதிக நெரிசல் காணப்படுகிறது’ என ஆண்கள் பலர் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதுபற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

வாசகி பதில்கள்...

ரொக்கப் பரிசு ரூ.250

ஊர் சுற்றவே பல பெண்களும் கட்டணமில்லாத பேருந்தில் பயணம் செய்கிறார்கள் என்ற விமர்சனம் ஆண்கள், பெண்கள் இரு தரப்பிலும் இருக்கிறது. ஹேண்ட் பேகை மாட்டிக்கொண்டு, நன்கு டிரஸ் செய்து கொண்டு ஒரு பெண் பேருந்தில் பயணம் செய்தால் அது ஊர் சுற்றுவதற்காகத்தான் இருக்கும் என்று அனுமானிக்க நீங்கள் யார்? அவள் எந்தத் தேவைக்காக, எந்த அவசரத்துக்காக, எந்தக் கஷ்டத்துக்காக அந்தப் பேருந்தில் பயணிக்கிறாள் என்பது அவள் மட்டுமே அறிந்த உண்மை. அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

- சந்திரலேகா, சென்னை-90

குடும்பம், கணவர், குழந்தைகள், பணி என ஒவ்வொரு பெண்ணுக்கும் பல்வேறு வகையான வேலை பளு. நேரம் கிடைத்தால் சற்றே ஓய்வு எடுக்கலாமே என்கிற தவிப்புடன் உள்ள பெண்கள் பேருந்தில் கட்டணமில்லை என்பதற்காக, அதுவும் இந்த கொரோனா காலத்தில் ஊர் சுற்றுவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்வது பெண்களை கேவலப்படுத்தும் வக்கிரத்தின் வெளிப்பாடு. பல்வேறு பிரச்னை களுக்கு நடுவே பெண்கள் பேருந்து பயணம் மேற்கொள்வதென்பது தவிர்க்க முடியாத அத்தியாவசிய காரணங்களுக்காகத்தான் என்பதே உண்மை.

- பெ.கல்பனா, பாபநாசம்

வினுவின் வித்தியாசமான தகவல்!

1600-களில் ஆண்கள்தாம் முதன்முதலில் ஹை ஹீல்ஸ் அணியத் தொடங்கினர். பெண்கள் பின்னர் ஆண்களைப் போல தோற்றமளிப்பதற்காக அவற்றை அணியத் தொடங்கினர்.