Published:Updated:

வினு விமல் வித்யா: ரெண்டே ரெண்டு பெண் அமைச்சர்கள்தானா..?

ஹார்பர் லீ -  ஜெஸிண்டா ஆடர்ன்
பிரீமியம் ஸ்டோரி
ஹார்பர் லீ - ஜெஸிண்டா ஆடர்ன்

- சஹானா

வினு விமல் வித்யா: ரெண்டே ரெண்டு பெண் அமைச்சர்கள்தானா..?

- சஹானா

Published:Updated:
ஹார்பர் லீ -  ஜெஸிண்டா ஆடர்ன்
பிரீமியம் ஸ்டோரி
ஹார்பர் லீ - ஜெஸிண்டா ஆடர்ன்

வித்யாவின் அப்பார்ட்மென்ட் பூங்கா வில் காத்திருந்தார்கள் வினுவும் விமலும். ஐந்தே நிமிடங்களில் ஜில்லென்ற மேங்கோ பன்னாவுடன் வந்து சேர்ந்தார் வித்யா.

“மறுபடி வீடியோ கால்லதான் பேசிக்கணும் போல” என்று வருத்தத்துடன் கூறினாள் வினு.

“ஆமா, நாம நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு கொரோனா ஆட்டம் போடுது. எங்க பார்த்தாலும் காய்ச்சல், இறப்புன்னு காதுல விழுந்துட்டே இருக்கு. என்ன ஆகுமோ?” என்று சொல்லிக்கொண்டே மேங்கோ பன்னாவை ஊற்றிக் கொடுத்தார் வித்யா.

“வித்யாக்கா, கொரோனாவைக் கொஞ்சம் மறக்கணும்னுதான் இங்கே வந்தேன். வேற ஏதாவது பேசுவோம்” என்றாள் வினு.

“நானும் அதைத்தான் நினைச்சேன். பில்கேட்ஸும் மெலிண்டாவும் விவாகரத்து செய்யப் போறாங்க. உலகமே அதைப் பத்தி தான் பேசிட்டிருக்கு. உலகப் பணக்காரர்கள்ல முதல் அஞ்சு இடத்துக்குள்ள இருக்கிற பில்கேட்ஸும் மெலிண்டாவும் 27 வருஷமா காதல் வாழ்க்கை வாழ்ந்தவங்க. மூணு குழந்தைகளைப் பெத்து, வளர்த்திருக்காங்க. ரெண்டு பேருமே சேர்ந்து அறக்கட்டளை ஆரம்பிச்சு, சமூகப் பணிகளையும் செஞ்சிட்டு வர்றாங்க. அவங்களுக்குள்ளே பெரிசா கருத்து வேறுபாடு எல்லாம் இருக்கிறதா சொல்லல. `குழந்தைகளை நல்லா வளர்த்துட்டோம். இனி சேர்ந்து இருக்குறதைவிட, தனித்தனியா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்'னு இந்த முடிவுக்கு வந்திருக்கிறதா சொல்லியிருக்காங்க.”

“மெலிண்டாவுக்கு 56 வயசு, பில்கேட்ஸுக்கு 65 வயசு. ரெண்டு பேருமே மகிழ்ச்சியா வாழ்ந் தோம். இனிமேலும் அறக்கட்டளையில இணைஞ்சு தான் வேலை செய்வோம். அதே நேரத்துல தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பிரிவு தேவைப்படுதுன்னு அழகா சொல்லியி ருக்காங்க. பணமும் புகழும் மட்டும் வாழ்க்கை இல்ல. இதுவும் ஒருவிதமான அன்புதான். மீதி வாழ்க்கையை அவங்கவங்க விருப்பத்துக்கு வாழ நினைக்குறதுல தப்பில்லை” என்ற விமல், பன்னாவைக் குடித்து முடித்தாள்.

“வித்யாக்கா, நியூஸிலாந்து பிரதமர் ஜெஸிண்டா ஆடர்ன், இந்த சம்மர்ல கல்யாணம் பண்ணிக்கத் திட்டமிட்டிருக்காங்க தெரியுமா.... தேதி இன்னும் முடிவாகல...”

“என்ன சொல்றே வினு, ஜெஸிண்டாவுக்கு ரெண்டு வயசுல குழந்தை இருக்கே! நீ வேற யாரையாவது சொல்றியா?” என்று பதறினார் வித்யா.

“நீங்க சொல்றது உண்மைதான் வித்யாக்கா. குழந்தை இருக்கு. ஏற்கெனவே குழந்தை பெத்துக்கிட்டாங்க. இப்பதான் கல்யாணம் பண்ணிக்க நேரம் கிடைச்சிருக்காம். ஜெஸிண்டா, தன்னோட இணையர்கூட சேர்ந்து தான் இத்தனை நாளா வாழ்ந்திட்டிருக் காங்க. குழந்தையை வீட்லருந்து பார்த்துக்கறது கூட அந்த இணையர்தான். ‘இத்தனை நாளும் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கல. இப்ப ஆர்வம் வந்திருக்கு. பண்ணிக்கப் போறோம்'னு சொல்லியிருக்காங்க!”

“ஓ... சரி, சரி... எலெக்‌ஷன் ரிசல்ட் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

``கேரளாவில கம்யூனிஸ்ட்டும் காங்கிரஸும் தான் மாத்தி மாத்தி ஆட்சிக்கு வருவாங்க. இந்த தடவை அது மாறிருச்சு. வெள்ளம், நிபா வைரஸ், கொரோனான்னு பல விஷயங்களைச் சிறப்பா கையாண்டதால இந்த வெற்றி கிடைச்சிருக்கு வித்யாக்கா. மம்தா மூணாவது முறையா முதல்வர் ஆகி யிருக்காங்க. இந்தியா வுல இப்போ இருக்கிற ஒரே பெண் முதல்வர் அவங்கதான். ஆனா, எலெக்‌ஷன் ரிசல்ட்டுக்கு பிறகு அங்கே நடக்கிற வன்முறைகளை அவங்க சரியா ஹேண்டில் பண்ற மாதிரி தெரியல.”

வினு விமல் வித்யா: ரெண்டே ரெண்டு பெண் அமைச்சர்கள்தானா..?

‘`தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து களைச் சொல்லிடுவோம். அவர் மேல நிறைய எதிர்பார்ப்புகள் உருவாயிருக்கு. ஆனா... அவருடைய அமைச்சரவையில 34 பேர்ல ரெண்டே ரெண்டு பெண்கள்தான் இருக்காங்க. இதுல எனக்கு வருத்தம்தான்...’’

“ஆமா... அரசியலில் 33 சதவிகிதத்தை எட்டவே இன்னும் எத்தனை தலைமுறை காத்திருக்கணுமோ தெரியல. ம்ஹும்...’’

‘`சி.ஏ.ஏ. போராட்டத்துல டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஸர்கர் மேல தீவிரவாதின்னு முத்திரை குத்தி, ஜெயில்ல போட்டுச்சு அரசு. அப்போ சஃபூரா கர்ப்பிணியா இருந்தாங்க. பல தடவை பெயில் கேட்டும் கிடைக்கல. ஒருவழியா பெயில் கிடைச்சு வெளியில வந்து, குழந்தையும் பெத்திருக்காங்க. இந்தச் சூழ்நிலையில, பத்திரிகையாளர் மனிஷா மொண்டல்ங் கறவங்க, ‘பிறந்த ஒரே நாள்ல கொரோனாவால தாயை இழந்த குழந்தைக்கு, தாய்ப்பால் தேவை’னு ட்விட்டர்ல போஸ்ட் போட்டாங்க. இதைப் படிச்சுட்டு, ‘நான் தாய்ப்பால் கொடுக்கறேன்’னு சஃபூரா சொன்னாங்க. அதுக்குள்ள இன்னொருத்தர் மூலம் தாய்ப்பால் கிடைச்சிருச்சு. போராட்டத்துல கலந்துகிட்டதுக்காகவே தீவிரவாதிங் கற முத்திரையைக் குத்தி சஃபூராவை ஜெயில்ல போட்டது எவ்ளோ பெரிய கொடுமை...” என்று கேட்டாள் வினு.

``ரொம்ப அநியாயம். இந்தச் சூழ் நிலையிலயும் அவங்க மனிதாபிமானம் வெளிப்படுதே... ரொம்ப நல்ல விஷயம்! விமல்... உங்க ஆஃபீஸ்ல மே தினம் செலிபிரேட் பண்ணு வீங்களே, இந்த வருஷம் என்ன செஞ்சீங்க?” - கேட்டாள் வினு.

“பெரும்பாலும் வொர்க் ஃப்ரெம் ஹோம்கிறதால எதுவும் செய்யல வினு. ஒரு காலத்துல தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, அதுக்கு ஏத்த மாதிரி ஊதியம் எல்லாம் கேட்டுப் போராடினதாலதான் இன்னிக்கு வொர்க்கர்ஸ் ஓரளவு உரிமைகளோட இருக்காங்க. இப்ப இருக்கிறவங்க வரலாறு தெரியாம, யூனியனோட வேல்யூ தெரியாம இருக்காங்க. அதனால மறுபடியும் பல உரிமைகளை இழக்கற சூழ்நிலையில் இருக்காங்க. அமெரிக்காவுல 54-ம் வருஷம் 29 சதவிகிதமா இருந்த லேபர் யூனியன்ஸ் இன்னிக்கு 10 சதவிகிதமா குறைஞ்சு போயிருச்சு. அதனால பத்து வருஷமா அங்கே தொழிலாளர்களோட சம்பளம் அதிகமாகல. அதே நேரம் உற்பத்தி அதிகமாயிருக்கு. அமெரிக்காவைவிட ஸ்வீடன்ல லேபர் யூனியன்ஸ் அதிகம். உற்பத்தியும் அதிகம், சம்பள மும் அதிகம். வொர்க்கர்ஸை மதிக்கிற திலும் சமமா நடத்துறதிலும் ஸ்வீடன் முன்னணில இருக்கு.”

“நீ சொல்றதும் சரிதான் விமல். இன்னிக்கு 12 மணி நேரத்துக்கும் அதிகமா வேலை செய்யறவங்க அதிகமாயிட்டாங்க. 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் வாழ்க்கைன்னு இருந்தா தானே நல்லது. சரி, ஏதாவது படம் பார்த்தீங்களா ரெண்டு பேரும்?”

“இல்ல வித்யாக்கா. அதுக்கெல்லாம் மூடே இல்ல. நான் `ஹார்பர் லீ’ எழுதின ‘டு கில் எ மோகிங்பேர்டு’ புக் படிச்சேன். இந்த அமெரிக்கர் எழுதின ஒரே ஒரு நாவல் இதுதான். இதுல அமெரிக்கர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்களை எப்படி ஒடுக்கறாங் கன்னு ரொம்ப துணிச்சலோட சொல்லியிருக்காங்க. இந்த நாவல் வெளிவந்து 60 வருஷங்களாயிருச்சு. ஆனா, நாவல் பேசிய இன வெறுப்பு இன்னமும் இருக்கு. ‘கறுப்பின மக்களை அடிமையா நடத்துற வரைக்கும் அமெரிக்கர்களுக்கு சுதந்திரம் கிடையாது. கறுப்பின மக்கள் தாக்கப்படுவது நிற்கும்வரை அமெரிக்கர்களால் பாதுகாப்பா இருக்க முடியாது. நிறபேதமற்ற அமெரிக்காவே உண்மையான அமெரிக்கா'ன்னு சொல்லி யிருக்காங்க ஹார்பர் லீ. இதுவரைக் கும் இந்தப் புத்தகம் 3 கோடி பிரதிகள் விற்பனையாயிருக்கு. நாவல் வந்தவுடனே புலிட்ஸர் பிரைஸ் கிடைச்சது. 62-ம் வருஷம் ஹாலிவுட் படமா எடுக்கப்பட்டு ஆஸ்கரையும் ஜெயிச்சிருக்கு. என்னைப் பேசாதீங்க, என் புத்தகத்தைப் பேசுங்கன்னு சொல்லிட்டாங்க ஹார்பர் லீ. ரொம்ப அற்புதமான பெண்ணா இருந்திருக்காங்க ஹார்பர் லீ.”

“நானும் படிச்சுப் பார்க்கறேன். அடுத்தமுறை நாம நேரே மீட் பண்ண முடியுமான்னு தெரி யல. எல்லாரும் பத்திரமா இருங்க” என்றார் வித்யா.

“ஆமா, வித்யாக்கா. லேட் ஆச்சு. கிளம்ப றோம். ஸ்டே சேஃப். பை” என்றபடி விமலும் வினுவும் கிளம்ப, வித்யா கையசைத்தார்.

(அரட்டை அடிப்போம்!)