Published:Updated:

வினு விமல் வித்யா: 70 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த திருமண உடை!

பியர்ஸ் பிராஸ்னன் 
தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
பியர்ஸ் பிராஸ்னன் தம்பதி

சஹானா - #Lifestyle

வினு விமல் வித்யா: 70 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த திருமண உடை!

சஹானா - #Lifestyle

Published:Updated:
பியர்ஸ் பிராஸ்னன் 
தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
பியர்ஸ் பிராஸ்னன் தம்பதி

வித்யாவையும் விமலையும் பனீர் பகோடா, காபியுடன் வரவேற்றாள் வினு.

“எனக்கு பகோடா வேண்டாம், வினு. நான் டயட்ல இருக்கேன்” என்ற வித்யாவைப் பார்த்து வினுவும் விமலும் ஆச்சர்யப் பட்டார்கள்.

“என்ன வித்யாக்கா, எதுக்கு இப்போ டயட்?”

“எல்லோரும் வெயிட் போட்டுட்டேன்னு சொல்றாங்க. அதைப் பண்ணு, இதைப் பண்ணுன்னு ஏகப்பட்ட அட்வைஸ் வேற. அதான் டயட் மூலமா வெயிட்டைக் குறைக்குற முயற்சியில குதிச்சிட்டேன்!”

“உங்களை வெயிட்னு சொல்றவங்களை என்ன செய்யலாம்? கொஞ்சம் வாக், ஹெல்த்தி ஃபுட் சாப்பிட்டா போதும். அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்கனு வெயிட்டை குறைக்காதீங்க வித்யாக்கா!”

“ஆமாம், வினு சொல்றது சரிதான். உங்களுக்குப் பிடிச்ச ஜேம்ஸ் பாண்டு நடிகர் பியர்ஸ் பிராஸ்னனோட மனைவி வெயிட் போட்டிருக்காங்க. பிராஸ்னன்கிட்ட எல்லோரும், உங்க வொயிஃப் சர்ஜரி செஞ்சு வெயிட்டைக் குறைக்கலாமேன்னு சொல்லியிருக்காங்க. அதுக்கு அவர், ‘என் மனைவி எப்படி இருக்காங்களோ அப்படியே அவங்களை நேசிக்கிறேன். அவங்க உடல் மெலிஞ்சு இருந்தப்பவும் அவங்க அழகுக்காக நேசிச்சதைவிட, அவங்களுக்காக நேசிச்சதே அதிகம். என் அஞ்சு குழந்தைகளோட அம்மாங்கிறதால, அவங்களோட அன்புக்கு என்னைத் தகுதியானவனா வச்சுக்கவே விரும்பறேன்’னு சொல்லியிருக்கார். எப்படி!”

 கிரெட்டா துன்பெர்க்
கிரெட்டா துன்பெர்க்

“வாவ்! இப்போ பிராஸ்னன் இன்னும் அழகா தெரியறார். மறுபடியும் கொரோனா அதிகமாகுது போல...” என்றார் வித்யா.

``ஆமா, வித்யாக்கா. கேஸ் எண்ணிக்கை குறைஞ்சவுடனே நம்ம மக்கள் கொரோனாவே இல்லைனு நினைச்சுக்கிறாங்க. எங்க ஏரியால பெரும்பாலும் மாஸ்க் போடாமதான் சுத்திட்டிருக்காங்க. அப்போ பரவல் அதிகமாகத்தானே செய்யும்? அமெரிக்கா, ரஷ்யாவிலும் அதிகமாயிட்டு வருது. கலிஃபோர்னியாவுல மாஸ்க் இல்லாம கடைகளுக்குள்ளே நுழையக் கூடாதுனு போர்டே வச்சிருக்காங்களாம். ஒரு கடையில் மாஸ்க் இல்லாம ஒருத்தர் அத்துமீறி நுழைஞ் சிட்டார். அதைப் பார்த்தவுடனே சில பெண்கள், மாஸ்க் போடச் சொன்னாங்க. அந்த ஆள் போட முடியாதுனு சொல்லவும் பெண்கள் கோபத்துல கத்தறாங்க. உடனே அந்த ஆள் அவங்ககிட்ட போய் கத்தறார்... அவங்க பயந்து ஓடிட்டாங்க... மனுஷங்க எப்படியெல்லாம் இருக்காங்க பாருங்க” என்றாள் விமல்.

“கிரீஸ் நாட்டுல உள்ள இவியா தீவுல திடீர்னு தீப்பிடிச்சிருச்சு. 2,000 பேரை பத்திரமா பக்கத்து தீவுல சேர்த்துட்டாங்க. 20 பேர் காயங்களோட ஹாஸ்பிடல்ல ட்ரீட் மென்ட் எடுத்துட்டு இருக்காங்க.

அஞ்சு நாளா தீ தொடர்ந்து எரிஞ்சதுல எதுவுமே மிஞ்சல. மனித உயிர்களைத் தவிர, எதையும் காப்பாத்திக்க முடியல. எப்படி வாழப்போறோம்னு மக்கள் எதிர்காலத்தை நினைச்சு பயத்தோட இருக்காங்க. இந்தத் தீ விபத்துக்கு பருவநிலை மாற்றம்தான் காரணம்னு சொல்றாங்க” - வருத்தம் பொங்கச் சொன்னாள் விமல்.

“ஐயோ... கொடுமையே... சில நாடுகள்ல நெருப்பு, சில நாடுகள்ல அளவுக்கு அதிகமான மழை. `பருவநிலை மாற்றத்தைச் சரிசெய்யறதுக் கான திட்டங்களைச் செயல்படுத்தணும்னு சொல்லிட்டேயிருக்கேன். எந்த நாட்டு அரசாங்கமும் காது கொடுக்க மாட்டேங்குது. இதுக்கு அப்புறமும் நாம எதுவும் செய்ய லைன்னா, பின்விளைவுகள் மோசமா இருக்கும்’னு கிரெட்டா துன்பெர்க் மறுபடியும் உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விட்டிருக்காங்க. இனியும் நடவடிக்கை எடுக்கலைன்னா கஷ்டப்படப் போறது நாமதான். ஆமாம், எதுக்கு ஜெஸிண்டா ஆடர்ன் மன்னிப்பு கேட்டிருக்காங்க?”- கேட்டார் வித்யா.

“50 வருஷங்களுக்கு முன்னால நியூசிலாந் துக்குப் பக்கத்திலிருக்கிற பசிபிக் தீவுகள்ல இருக்கும் மக்கள்கிட்ட அப்போதைய நியூசிலாந்து அரசாங்கம் இனப் பாகுபாடு காட்டுச்சாம். அதுக்குதான் ஜெஸிண்டா இப்போ மன்னிப்பு கேட்டிருக்காங்க வித்யாக்கா.”

``ஓ... அப்படியா! டெல்லியில ஒன்பது வயதுச் சிறுமி கொல்லப்பட்டதை நினைக்கும் போது உடம்பெல்லாம் நடுங்குது... என்ன அநியாயம்?”

“ஐஸ் வாட்டர் பிடிச்சிட்டு வர்றதுக்காகச் சுடுகாட்டுக்குப் போயிருக்கு அந்தப் பொண்ணு. வழக்கமா போற இடம்தான். கொஞ்சம் நேரம் கழிச்சு அந்தச் சுடுகாட்டுப் பூசாரி, அந்தப் பொண்ணோட அம்மாவை அந்த இடத்துக்கு அழைச்சிட்டுப் போயிருக்கார். அங்கே குழந்தை காயங்களுடன் இறந்த நிலையில் இருந்திருக்கு. தண்ணி பிடிக்கப்போன குழந்தை இறந்து கிடந்தா எப்படியிருக்கும்? ஷாக் அடிச்சு இறந்துட்டதா சொன்ன பூசாரி, உடனே எரிக்கணும்னு சொல்லியிருக்கார். போஸ்ட்மார்ட்டம் செஞ்சா உடல் உறுப்புகளை எடுத்துக் குவாங்கனு வேற சொல்லியிருக்கார். அந்த அம்மா அதிர்ச்சியிலிருக்கும்போதே உடலை எரிக்க ஆரம்பிச்சிருக்கார். உடனே அவங்க கணவருக்குத் தகவல் தெரிஞ்சு, அவர் 200 பேரோட வந்துட்டார். தீயை அணைச்சாலும் பெரிசா எதுவும் மிஞ்சல. பூசாரி உட்பட நாலு பேர் கைது செய்யப்பட்டிருக்காங்க. பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம்னு நினைக்கிறாங்க. இல்லைனா எதுக்கு இப்படி அவசர அவசரமா எரிச்சிருக்கணும்?” - வேதனையாகச் சொன்னாள் விமல்.

``கொடுமை... கொடுமை... இப்பல்லாம் தப்பு செய்யறவங்க, கொலையும் பண்ணி, தடயத் தையும் அழிச்சிடறாங்க... விமல், வித்யாக்கா இன்னொரு காபி?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பியர்ஸ் பிராஸ்னன் 
தம்பதி -  ஜெஸிண்டா ஆடர்ன் -  மார்தா டக்கர்
பியர்ஸ் பிராஸ்னன் தம்பதி - ஜெஸிண்டா ஆடர்ன் - மார்தா டக்கர்

“இல்ல வினு, வேண்டாம்.”

``சரி, இந்த விஷயத்தை மட்டும் சொல்லிட்டுக் கிளம்பறேன். அமெரிக்காவுல வசிக்குற 94 வயசு மார்தா டக்கருக்கு ‘வொயிட் வெடிங் கவுன்’ போடணும்னு ஆசை. ஆனா, மார்த்தாவுக்கு கல்யாணம் நடந்த அந்தக் காலத்துல வொயிட் வெடிங் கவுன் விக்கிற கடைப்பக்கமே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் போகக் கூடாதுனு கட்டுப்பாடு இருந்திருக்கு. டிரஸ் வாங்கப் போனவங்களை கடைக்குள்ளேயே விடலங் கற வருத்தம் மார்தாவுக்கு 70 வருஷமா மனசுல இருந்திருக்கு. இதை மார்தாவோட பேத்தி தெரிஞ்சுக்கிட்டு, இப்போ வொயிட் வெடிங் கவுன் போடவச்சு, போட்டோஸ் எடுத்திருக்காங்க. ரொம்ப ஹேப்பியா இருக்கிறதா மார்தா சொல்றாங்க.”

“இனவெறி எப்படியெல்லாம் இருந்திருக்கு!”

“ம்... சரி, வினு. நான் கிளம்பறேன்... ஒரு வேலை இருக்கு.”

“நானும் கிளம்பறேன், பனீர் பகோடா சூப்பர்” என்று விமல் வண்டியை எடுத்தாள்.

அரட்டை அடிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism