லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

வினு விமல் வித்யா: பெண்களுக்கு மொபைல் போன் கொடுக்கக்கூடாதா?!

வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
News
வினு விமல் வித்யா

சஹானா

வீடியோ காலில் வித்யாவையும் வினுவையும் அழைத்தாள் விமல். ``என்ன விமல், கொரோனா பாதிப்பு குறைஞ்சிருக்குபோல...” என்று பேச்சை ஆரம்பித்தார் வித்யா.

“ஆமாம் வித்யாக்கா. லாக்டௌன்ல குறைஞ்சிருக்கிறது நல்ல விஷயம்தான். ஆனாலும், இன்னும் குறையணும். அதுக்குள்ள மூணாவது அலை பத்தி எல்லோரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. மருத்துவமனைகளையும் தயார்படுத்திட்டு வர்றாங்க.’’

“சட்டுனு கொரோனாவைக் கண்டுபிடிக்கிற மாதிரி எந்த எக்யூப்மென்ட்டும் இன்னும் வரலையா வினு?”

“வந்துருச்சு வித்யாக்கா. சிங்கப்பூர்ல ப்ரீத்தோனிக்ஸ் நிறுவனம், கொரோனா பரிசோதனை ஆராய்ச்சியை ஆரம்பிச்சது. சுவாசப் பரிசோதனையிலேயே கொரோனா பாதிப்பைக் கண்டுபிடிக்கிறதுல இந்த ஆராய்ச்சிக் குழு வெற்றி அடைஞ்சிருச்சு. இந்தப் பரிசோதனை மூலம் 60 நொடிகள்ல கொரோனா தொற்றைக் கண்டுபிடிச்சிடலாம்.”

வினு விமல் வித்யா: பெண்களுக்கு மொபைல் போன் கொடுக்கக்கூடாதா?!

“வாவ்! சூப்பர் வினு.”

“இந்த ஆராய்ச்சியைத் தலைமை தாங்கி நடத்தினவங்க பெண் விஞ்ஞானி டாக்டர் ஜியா ஜுனான். நோயாளிகள் பரிசோதனை முடிவுக்காக ரொம்ப நேரம் காத்திருக்காம உடனே சிகிச்சையை எடுத்துக்கலாம். ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா, இந்தப் பரிசோதனையை டாக்டர்கள்தான் செய்யணும்கிறது இல்ல. யார் வேணாலும் செய்ய லாம். 5 முதல் 20 அமெரிக்க டாலர் வரை செலவாகும். இது பயன்பாட்டுக்கு வந் துச்சுன்னா பல நாடு களுக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும். விலையும் பி.சி.ஆர் சோதனையை விட கம்மிதான் வித்யாக்கா.”

“இந்த கொரோனாவால் எத் தனையோ பிரச்னைகள். ஜிம்னாஸ்ட் சிமோன் பைல்ஸுக்கு அது வேற விதத்துல பிரச்னை கொடுத்துட்டிருக்கு. 23 வயசாகுற சிமோன், இந்த ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வுபெற நினைச் சிருந்தாங்க. ஆனா, கொரோனாவால ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிப் போயிட்டே இருக்கு. இதனால இவங்க வருஷக் கணக்குல பயிற்சியில் இருக்க வேண்டியதாயிருக்கு. பயிற்சியை விடவும் முடியாது. தொடர்ந்து பயிற்சி செய்யவும் முடியாது”என்ற விமலிடம்,

“23 வயசுலேயே ஓய்வா?” எனக் கேட்டார் வித்யா.

“வித்யாக்கா, ஜிம்னாஸ்ட் எல்லாம் சின்ன வயசுல இருந்து பயிற்சி எடுத்துட்டு, இருபது வயசுக்குள்ள ரிட்டையர் ஆயிடுவாங்க. ஜிம்னாஸ் டிக்ஸைப் பொறுத்தவரை சிமோனுக்கு வயசாயிருச்சு!”

“ஓ, அதான் என் மகளை ஒரு ஜிம்னாஸ்ட்டா ஆக்கும் மனநிலை இல்லைனு சொல்லிருக்காங்க போல! இந்த வருஷ புலிட்சர் பிரைஸ் வாங் கினவங்கள்ல ரெண்டு பொண்ணுங்க முக்கியமானவங்க. `பஸ்ஃபீட் நியூஸ்’ பத்திரிகையின் லண்டன் பிரிவு சர்வதேச நிருபர் மேகா ராஜகோபால னுக்குப் புலிட்சர் பிரைஸ் கிடைச் சிருக்கு. இவங்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க. சீன அரசு, உய்குர் முஸ்லிம் மக்களை தடுப்பு முகாம்கள்ல அடைச்சு வெச்சிருக்கிறதைப் புலனாய்வு செஞ்சு, விஷயத்தை வெளி யுலகுக்குக் கொண்டு வந்தவங்க. ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலையை வீடியோ எடுத்து, வெளியிட்ட டார் னெல்லா ஃப்ரைஸருக்கும் புலிட்சர் பிரைஸ் கிடைச்சிருக்கு.”

“அடடா... மேகாவுக்கும் டார் னெல்லாவுக்கும் ஆளுக்கொரு பொக்கே! மலாலா சுடப்பட்டு பத்து வருஷங்களானதையொட்டி, பிரிட் டிஷ் `வோக்' இதழ் மலாலா சிறப்பிதழை வெளியிட்டுச்சு. அதுல `தலையில் துணி போடறதால எங்களை ஒடுக்கப் பட்டவங்களா ஏன் நினைக்கறாங் கன்னு தெரியல. நாங்க எங்க கலாசார அடையாளமாதான் துணி போட்டுக் கறோம்னு சொல்லியிருக்காங்க மலாலா” என்று நிறுத்தினாள் விமல்.

“டிகிரி முடிச்சிட்டாங்களே, கல் யாணம் பத்தி ஏதாவது சொல்லி யிருக்காங்களா?” என்று ஆர்வத்தோடு கேட்டார் வித்யா.

“ஆமா, வித்யாக்கா. `ரெண்டு பேர் சேர்ந்து வாழறதுக்குக் கல்யாணம் அவசியமா? வாழ்க்கையில் நீங்க விரும்புற நபரோடு இணைஞ்சு வாழ்ந்தா போதாதா’னு கேட்டிருக் காங்க மலாலா. இதுக்காக பாகிஸ்தான் சோஷியல் மீடியாக்கள்ல பலத்த எதிர்ப்பு கிளம்புச்சு” என்றாள் விமல்.

“பாகிஸ்தான்ல எதிர்ப்பு கிளம் பலைனா தான் ஆச்சர்யம்! இந்தியா மட்டும் என்ன சாதாரணமா? உத்தரப் பிரதேச மகளிர் ஆணையத்தைச் சேர்ந்த மீனா குமாரி, பெண்களுக்கு மொபைல் போன் கொடுக்காதீங்கனு சொல்றாங்க. போன் மூலம் ஆண் களோட ஃபிரெண்ட்ஷிப் உருவாகி, காதலாகி, வீட்டை விட்டு ஓடிடுறாங்க. பாலியல் வன்முறையில சிக்கிக்கிறாங்க. அதனால பெண் களுக்கு மொபைல் வேண்டாம்னு சொல்றாங்க. இதுக்குப் பலரும் கண்டனம் தெரிவிச்சாங்க. மகளிர் ஆணையத்துலயே இப்படிப் பட்டவங்க உறுப்பினரா இருந்தா என்ன செய்யறது? ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. சரி... வினு, விமல் நீங்க ரெண்டு பேரும் மார்கெரிட்டா ஹாக்குக்கு கூகுள் டூடில் வெளியிட்டதைப் பார்த்தீங்களா?” என்று கேட்டார் வித்யா.

“என்னது வித்யாக்கா. நான் சரியா கவனிக்கல, எதுக்காக வெளியிட்டிருந்தாங்க?”

“இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானி மார்கெரிட்டா. இவங்க வானியற்பியலாளர். 1964-ம் வருஷம் ட்ரையஸ்ட் வானியல் ஆய்வகத்தோட முதல் பெண் இயக்குநரா பொறுப்பு வகிச்சவங்க. இவங்களோட கண்டுபிடிப்புகளை நாசாவும் ஐரோப்பிய விண்வெளி கழகமும் அங்கீகரிச்சு, பாராட்டியிருக்கு. ஒரு குறுங்கோளுக்குக்கூட `8558 ஹாக்’னு இவங்களோட பெயரை வெச்சிருக்காங்க. இருபதாம் நூற்றாண்டோட முக்கியமான விஞ்ஞானிகளில் இவங்களும் ஒருத்தங்க. அறிவியல் ஆய்வு மட்டுமல்ல, மக்களோட உரிமைகள், சமத்துவத்துக்காகவும் குரல் கொடுத்தவங்க. தவறான மத நம்பிக்கைகளையும் கேள்வி கேட்டிருக்காங்க. இவங்களோட நூற்றாண்டுக்காகத்தான் கூகுள் டூடில் வெளியிட்டு, கெளரவிச்சிருக்கு!”

வினு விமல் வித்யா: பெண்களுக்கு மொபைல் போன் கொடுக்கக்கூடாதா?!

“சூப்பர் வித்யாக்கா... குழந்தைகள்மீது நடத்தப்படுற தாக்குதல்களைக் கண்டிச்சும் உயிரிழந்த குழந்தைகளை நினைவுகூரும் விதமாவும் பாலஸ்தீனக் குழந்தைகள் காற்றாடிகளைப் பறக்க விட்டாங்க. கடந்த மே மாசம் இஸ்ரேல் 11 நாள்கள் நடத்தின தாக்குதல்கள்ல 66 பாலஸ் தீனக் குழந்தைகள் கொல்லப்பட்டாங்க. உயிரிழந்த குழந்தைகளுடைய போட்டோ, பெயர் எல்லாம் காற்றாடிகள்ல எழுதி, பறக்கவிட்டாங்க. ‘நாங்க குழந்தைங்க. இந்தக் காற்றாடி மாதிரி எந்தவிதக் கட்டுப் பாடும் போரும் இல்லாம சுதந்திரமா வாழ நினைக்கிறோம்’னு சின்னச் சின்ன குழந்தைகள் சொன்னபோது கண்ணீரே வந்துருச்சு வித்யாக்கா. குழந்தைகளோட குரலுக்காவது போரை நிறுத்தக் கூடாதா?” என்று கேட்டாள் விமல்.

“ரொம்ப வருத்தமா இருக்கு விமல். பெண் போலீஸ் சாலைகள்ல பாதுகாப்புப் பணி செய்ய வேணாம்னு தமிழ்நாடு அரசு சொன்னதைப் பத்தி என்ன நினைக்கறே வினு?”

“பலரும் இதைக் கொண்டாடறாங்க வித்யாக்கா. ஆண்களுக்கு இணையா பெண்களும் எல்லாத் துறைகள்லயும் படிப்படியா முன்னேறிட்டு வர்றாங்க. பெண்களுக்கு இருக்கும் டாய்லெட், பீரியட்ஸ் பிரச்னை களுக்காக ஒரு விஷயத்தைச் செய்ய முடியாது, செய்ய வேணாம்னு சொல்றதை நான் ஏத்துக்க மாட்டேன். இதுக்குப் பதிலா பெண்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுற வகையில டாய்லெட் வசதிகளைச் செஞ்சு கொடுக்கறதுதான் சரி” என்றாள் வினு.

“கரெக்ட் வினு. ஜெண்டர் கேப் குறையறதுக்காகத்தான் போராடிட்டு இருக்கோம். இப்போ ஜெண்டரைக் காரணம் காட்டி, அந்த வேலையைச் செய்ய வேணாம்னு சொல்றது மேலும் இடைவெளியை அதிகரிக்கத்தானே செய்யும்?” என்றாள் விமல்.

“நான் மேலோட்டமா நல்ல திட்டம்னு நினைச்சேன். நீங்க சொல்றதும் சரிதான்” என்றார் வித்யா.

``ரொம்ப நேரமா பேசிட்டிருக்கோம். முடிச்சுக்கலாமா? எனக்கு ஒரு ஜூம் மீட் இருக்கு” என்றாள் வினு.

“ஓ, டேக் கேர். பை” என்று வித்யாவும் வினுவும் இணைப்பைத் துண்டித்தனர்.

அரட்டை அடிப்போம்...