Published:Updated:

வினு விமல் வித்யா: காணாமல் போன 999 இளம் பெண்கள்!

வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
வினு விமல் வித்யா

- சஹானா

வினு விமல் வித்யா: காணாமல் போன 999 இளம் பெண்கள்!

- சஹானா

Published:Updated:
வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
வினு விமல் வித்யா

விமல் இன்னும் வரவில்லை என்பதால், வித்யாவும் வினுவும் பூங்காவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். அரை மணி நேரத்துக்குப் பிறகு `ஸாரி’ சொல்லிக்கொண்டே வந்தாள் விமல்.

“ஏதாவது ஆபிஸ் வேலையா?”

“இல்ல வித்யாக்கா. ஒரு ஜூம் லெக்சர்ல உட்கார்ந்திருந்தேன். முக்கிய மானதா இருந்ததால கட் பண்ணிட்டு வர முடியலை” என்றாள் விமல்.

“முக்கியம்னா எங்களுக்கும் கொஞ்சம் சொல்றது!”

“ஹிட்லரின் ஆஸ்விட்ச் வதை முகாம்லயிருந்து மக்கள் வெளிவந்து 76 வருஷமாச்சு. அது பத்தின ஒரு லெக்சர்தான் கேட்டேன். ஆஸ்விட்ச் முகாமுக்கு முதல் தடவை அனுப்பப்பட்ட குழுவைப் பத்தின விவரம், தேதி எல்லாம் இருக்கு. ஆனா, அதுல அடைக்கப்பட்ட 999 இளம்பெண்கள்... என்னவானாங்க, ஏதானாங்கனு எந்தக் குறிப்பும் அன்றைய அரசாங்க ஆவணங்கள்ல இல்லையாம். இந்தக் கொடுமையை என்னன்னு சொல்றது வித்யா அக்கா?”

“வரலாறுல பெண்கள் எப்பவும் மறைக்கப்படுறாங் கன்னு சொல்றது சரியாதான் இருக்கு விமல்.”

 தாயும் மகளும்...  -ஜானட் யெலன் -  அமண்டா
தாயும் மகளும்... -ஜானட் யெலன் - அமண்டா

“படிச்சிட்டிருந்த இந்தப் பெண்களை ஷூ கம்பெனியில் வேலை செய்றதுக்காக அழைச்சிட்டுப் போறதா சொன்னாங்க. ஆனா, அவங்கள போலந்துல உள்ள ஆஸ்விட்ச் வதை முகாமுக்குத்தான் கொண்டு போனாங்க. அங்க வெறும் கையால சுவர்களை இடிக்கச் சொன்னாங்க. உறைஞ்ச ஏரியை கையால வெட்டச் சொன்னாங்க. ஒரு வருஷத்துக்குள்ளேயே இந்தப் பெண்கள்ல பெரும்பாலானவங்க பசியாலும் நோயாலும் இறந்துட் டாங்க. பிழைச்ச ஒரு சிலர் போர் முடிஞ்ச பிறகு, வெளியில வந்தாங்க. அவங்க மூலமாதான் இந்த விஷயம் உலகத்துக்குத் தெரிஞ்சிருக்கு. அவங்களைப் பேட்டி எடுத்து, ஒரு புத்தகமா எழுதியிருக்காங்க ஹெதர் டியூன் மகாடம்...”

“ஓ... எவ்வளவு காலமானாலும் ஹிட்லர் செய்த கொடுமைகள் மறையாது. மறக்கவும் கூடாது.”

“ஆமாம், வினு. ஜோ பைடன் பதவியேற்பைப் பாத்தீங்களா? அதுல 22 வயசு அமண்டா கோர்மன் கவிதை வாசிச்சு உலகத்தையே திரும்பிப் பாக்க வச்சிட்டாங்க. `நான் வலிமையான பேனாவும் மிகப் பெரிய இதயமும் கொண்ட கறுப்பினப் பெண். என்னுடைய பெருமையில் அது எதிரொலிக்கும்’னு ரொம்ப அழகா பேசினாங்க. ஒரே வாரத்துல மறுபடியும் அமண்டா பத்தின பேச்சு அடிபடுது. சர்வதேச நிறுவனமான ஐ.எம்.ஜி தன்னுடைய மாடலா  அமண்டாகிட்ட அக்ரிமென்ட் போட்டிருக்கு!”

``வாவ்! இந்த வயசுலேயே அமண்டா எவ்வளவு பெரிய உச்சத்துக்குப் போயிட்டாங்க! 16 வயசுலேயே கவிதைத் தொகுப்பை வெளியிட்டுட்டாங்க. இப்போ இன்டர் நேஷனல் மாடல். ஒடுக்குமுறை, பெண்ணியம், இன ஒதுக்கல், ஆப்பிரிக்க அமெரிக்கர் களின் பிரச்னைனு ஏராளமான விஷயங்கள்ல ஒரு போராளியாவும் இருக்காங்க. உண்மையிலேயே நல்ல மனசு... நிறைய திறமை!” என்று மனமாரப் பாராட்டினார் வித்யா.

“ஜோ பைடன் பதவி ஏற்ற மறுநாள் உலகத்தைப் பேச வச்சிட்டாங்க ஜானட் யெலன் இவங்க பொருளாதார வல்லுநர். அமெரிக்க வரலாற்றிலேயே `செகரட்டரி ஆஃப் தி டிரஷரி’ (நிதி அமைச்சர்) பதவியை வகிக்கும் முதல் பெண் இவங்கதான். இவங்களுக்கு முன்னால 77 ஆண்கள் இந்தப் பதவில இருந்திருக்காங்க. பைடன் அமைச்சரவையில் இப்படிப் பல புதுமையான விஷயங்கள் இருக்கு!’’

வினு விமல் வித்யா: காணாமல் போன 999 இளம் பெண்கள்!

“ஓ... சூப்பர்! எகானமிஸ்ட்னு சொன்னவுடனே நம்ம ஜெயதி கோஷ் நினைவுக்கு வந்துட்டாங்க. 35 வருஷம் டெல்லி ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டியில் புரொஃபஸரா இருந்திருக்காங்க. துணிச்சலா அரசாங்கத்துக்கு எதிரா கருத்தெல்லாம் சொல் வாங்க. கோவிட்19-க்குப் பிறகான உலகப் பொருளாதாரம், எதிர் காலப் பொருளாதாரம் பத்தி ஐ.நாவின் பொதுச் செயலருக்கு ஆலோசனைகள் சொல்ல, 20 பேர் கொண்ட உயர்மட்ட கமிட்டி உருவாக்கியிருக்காங்க. இந்த கமிட்டியில் ஜெயதி கோஷும் இருக்காங்க. பெருமையான விஷயம்!”

“ஆமாம், வினு. சுண்டல் கொண்டு வந்ததை மறந்துட்டேன். எடுத்துக்கோங்க ரெண்டு பேரும்.’’ 

“ஃபிரான்சிஸ்கா ஜோன்ஸ்ங்கிற இங்கிலாந்து பெண், ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டிகள்ல விளையாட செலக்ட் ஆயிருக்காங்க. இவங்க பிறந்ததுலயிருந்தே விநோத நோயால் (Ectrodactyly Ectodermal Dysplasia) பாதிக்கப்பட்டிருக்காங்க. இவங்க கால்கள்ல 7 விரல்களும் கைகள்ல 8 விரல்களும்தான் இருக்கு. இதனால ஃபிரான்சிஸ்கா டென்னிஸ் விளையாட முடியாதுன்னு டாக் டர்ஸ் சொல்லிட்டாங்க. ஆனா, மனம் தளராம பிராக்டிஸ் செஞ்சு, 20 வயசுல ஆஸ்திரேலிய ஓப்பனில் விளையாட செலக்ட் ஆயிட்டாங்க!”

“ஃபிரான்சிஸ்காவின் தன்னம் பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் ராயல் சல்யூட். என்ன விமல், ரொம்ப ஹெல்த்தியா சாப்பிட ஆரம்பிச்சிட்டியா? சுண்டல் கொண்டு வந்திருக்கே?”

“என்னை விடுங்க... என் மக இப்பவே ஹெல்தி டயட் வேணும்ங்கிறா. அதான் பண்ணேன்!”

“ஒரே டேஸ்ட் இருக்கிற அம்மா - மகள் நீங்கதான். அமெரிக்க அம்மா-மகள் பத்திச் சொல்றேன். சூஸி கேர்ரட் ஸ்கை வெஸ்ட் ஏர்லைன்ஸ்ல 30 வருஷமா பைலட்டா இருக்காங்க. அந்த ஏர்லைன்ஸ் ஆரம்பிச்சப்ப 12 பெண்களை வேலைக்குச் சேர்த்தாங்க. அவங்கள்ல சூஸியும் ஒருவர். அம்மா வோட அடிக்கடி ஃப்ளைட்ல பறந்து பறந்து பொண்ணு டோன்னாவுக்கும் பைலட் ஆகணும்னு ஆசை வந்திருச்சு. பைலட்டாவும் ஆயிட்டாங்க. அதே ஏர்லைன்ஸ்ல அம்மாவும் பெண்ணுமா விமானத்தை ஓட்டுனாங்க. ஒரு கமர்ஷியல் ஃப்ளைட்டை அம்மா, மகள் இயக்கினது இதுதான் முதல் முறைங்கிறதால ஹிஸ்ட்ரில இடம்பிடிச்சிட்டாங்க!”

“சூப்பர் மாம் அன்ட் டாட்டர்! ஆமாம், இந்த கிரெட்டா துன்பெர்க் பத்தி ஒரு நியூஸையும் காணோமே?”

 கிரெட்டாவுக்காக ஒரு ஸ்டாம்ப்
கிரெட்டாவுக்காக ஒரு ஸ்டாம்ப்

“இது கொரோனா உலகம். அப்படியிருந்தும் அந்தப் பொண்ணு பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடிட்டுதான் இருக்காங்க. இப்பகூட அவங்க நாடான ஸ்வீடன், கிரெட்டாவுக்காக ஒரு ஸ்டாம்ப் வெளி யிட்டிருக்கு வித்யாக்கா!”

“ஓ... சரி... சரி. வினு, எங்கிட்ட வாங்கிட்டுப் போன `பார்த்திபன் கனவு’ படிச்சிட்டியா?”

``இல்ல வித்யாக்கா. உங்களுக்கு வேணுமா?”

``இல்ல வினு. நரபலி அதிகமா இருந்த காலகட்டத்துல அந்தக் கதை நடக்கும். ஆயிரம் வருஷத்துக்குப் பின்னால, நாகரிகம் எவ்வளவோ வளர்ந்த பிறகும் நரபலின்னு கேள்விப்படும்போது அதிர்ச்சியா இருக்கு. படிக்காதவங்க மூடநம்பிக்கையில் செய்யறாங்கன்னும் சொல்ல முடியல. ஆந்திராவுல டாக்டர் புருஷோத்தமன் புரொஃபஸரா இருக்கறார். அவர் மனைவி பத்மஜா ஸ்கூல் பிரின்சிபல். பொண்ணுங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சிருக்காங்க. படிப்பு, பணம் எல்லாம் இருந்தும் அவங்க ஏன் அளவுக்கு அதிகமான நம்பிக்கைகள்ல இறங்கினாங்கன்னு தெரியல. பேரன்ட்ஸுக்கு மட்டுமல்ல; அந்தப் பொண்ணுங் களுக்கும் இந்த மாதிரி விநோத நம்பிக்கை இருந்திருக்கு.

அதோட விளைவு, பெத்த மகள் களையே அடிச்சு, கொல்ல வெச்சிருச்சு. கொடூரமான இந்தக் கொலைகளை நினைச்சா பதறுது. செத்துப் போறவங்க திரும்பவும் உயிர்த்தெழுவாங்கன்னு எப்படித்தான் நம்புறாங்களோ... புரியல. குடும்பத்துல எல்லாருக்குமே மனநிலை பாதிக்கப்பட்டிருக்கணும்னு நினைக்கிறேன்.”

‘`காலக்கொடுமை’’ என்று சொன்ன விமல், ‘`சரி சரி எனக்கு வேலை இருக்கு நான் கிளம்பணும்’’ என்று சொல்ல...

மூவரும் அவரவர் வண்டிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

(அரட்டை அடிப்போம்!) 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism