என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

வினு விமல் வித்யா: பூமிக்காகப் போராடும் பாட்டியும் பேரனும்!

வினு விமல் வித்யா
பிரீமியம் ஸ்டோரி
News
வினு விமல் வித்யா

- சஹானா

ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு திறக்கப் பட்டிருக்கும் சென்னை மெரினா கடற்கரையில் கூடினார்கள் வினு, விமல் மற்றும் வித்யா.

``கொரோனா ரெண்டாவது அலை பத்தி பரபரப்பா பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதான் வெளில சாப்பிட வேணாம்னு கொஞ்சம் வெங்காய பக்கோடா போட்டு எடுத்துட்டு வந்தேன்” என்று டப்பாவை நீட்டினார் வித்யா.

“இதுதான் தாயுள்ளம்கிறது’’ என்று விமல் உருகினாள்.

``நம்ம பார்வதி நடிச்ச ‘வர்தமானம்’ படத்துக்கு பி.ஜே.பி எதிர்ப்பு தெரிவிச்சிருக்கே, ஏன்?” என்றாள் வித்யா.

“டெல்லி ஜே.என்.யுல போன வருஷம் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை பின்னணியா வெச்சு அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கு. அதுக்கு இவங்க எதிர்ப்பு தெரிவிக்கலைனாதானே ஆச்சர்யம். எப்பவுமே மலையாள டைரக்டர்கள் சமகால விஷயங்களை சினிமாவா எடுத்துத் தள்ளிடுவாங்க. அவங்களோட சினிமா ஹிஸ்டரி டைம்லைன்ல சமூகப் பிரச்னைகள்தான் முதல்ல நிக்கும்!” என்றாள் வினு.

வினு விமல் வித்யா: பூமிக்காகப் போராடும் பாட்டியும் பேரனும்!

“கரெக்ட். அந்த வரிசையில சமீபத்துல ரிலீசான `சூஃபியும் சுஜாதை’யும் படத் தோட டைரக்டர் ஷாநவாஷ் நாராணி புழா, திடீர்னு இறந்துட்டாரு. பாவம், சின்ன வயசு. அந்தப் படத்தோட சாங்ஸ் எல்லாம் எத்தனை தடவை கேட்டிருக்கேன்னு எனக்கே தெரியாது” என்று பெருமூச்சு விட்டார் வித்யா.

“மலையாளக் கவிஞரும் சுற்றுச்சூழல் போராளியுமான சுகதகுமாரியும் இறந்துட்டாங்க. இயற்கை எழில் கொட்டிக் கிடக்கற `சைலன்ட் வேலி’ல அரிய தாவரங்களும் விலங்குகளும் இருக்கு. அப்படிப்பட்ட இடத்துல அனல்மின் நிலையம் அமைக்கணும்னு முடிவு பண்ணுச்சு அரசாங்கம். அதை எதிர்த்துப் போராடினவங்கள்ல சுகதகுமாரி முக்கியமானவங்க. எழுத் தாளர்களையும் கலைஞர்களையும் ஒண்ணா சேர்த்து, அமைப்பை ஆரம்பிச்சுப் போராடினாங்க. நீண்ட போராட்டத்துக்குப் பின்னால, 1984-ல் அனல்மின் நிலையம் திட்டம் கைவிடப் பட்டுச்சு. சைலன்ட் வேலி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டுச்சு. வனப் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப் பட்டுச்சு. 2007-ம் வருஷம் சைலன்ட் வேலியும் நீலகிரியும் உலக மரபுச் சின்னங்களா யுனெஸ்கோவால் அங்கீ கரிக்கப்பட்டிருக்கு” என்று நீண்ட நேரம் பேசிய களைப்பில் தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்ந்தாள் விமல்.

“பெங்களூரில் வசிக்கிற அங்கிதா கௌருக்கு ஓட்டம்னா அல்வா சாப்பிடற மாதிரி. தினமும் அஞ்சாறு கிலோமீட்டர் தூரம் ஓடுவாங்களாம். ஒன்பது வருஷங்களா மாரத்தான் போட்டிகள்லயும் கலந்துகிட்டு வர்றாங்க. சமீபத்துல நடந்த போட்டியிலயும் மாரத்தான் முழு தூரத்தை நிறைவு செஞ்சிருக் காங்க. அதுவும், அஞ்சு மாசக் குழந்தையை வயித்துல சுமந்துகிட்டு. டாக்டர்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு, குழந்தைக்கு எதுவும் பிரச்னை வராதுனு தெரிஞ்ச பிறகுதான் ஓடிருக்காங்க அங்கிதா. கர்ப்பமா இருக்கும் போது என்னால எல்லா வேலைகளையும் செய்ய முடியுது. அதேபோலதான் இந்த ஓட்டமும்னு ஹேப்பியா சொல்றாங்க அங்கிதா.”

“அங்கிதாக்கள் ஒருபக்கம் பெருமையைத் தேடித்தந்தாலும், இந்த பெண் இனத்தோட பிரச்னைகளுக்கு தீர்வு மட்டும் வராது போலிருக்கு’’ என்று ஆதங்கம் பொங்கிய வித்யா...

``சவுதி அரேபியாவைச் சேர்ந்தவங்க லோஜைன் அல் ஹத்லோல்ங்கிற பெண் ணுரிமைப் போராளி. அந்த நாட்டுல பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமைக்காகப் போராடினவங்க. ஒரு தடவை, தடையை மீறி காரை ஓட்டி அந்த நாட்டையே அதிரவெச்சாங்க. இதுக்காக லோஜைனைப் பிடிச்சு ஜெயில்ல போட்டுட்டாங்க. அங்கே சித்ரவதையும் பாலியல் துன்புறுத்தலையும் அனுபவிச்சிட்டு இருக்காங்க. இதுக்கு நடுவுல, பெண்கள் வாகனம் ஓட்ட அந்த நாட்டுல அனுமதி கொடுத் துட்டாங்க. அதேநேரம், இதுக்காக போராடின லோஜைன் மாதிரியான பெண் போராளிகளை இன்னமும் சிறையில அடைச்சி வெச்சு வதைச்சிக் கிட்டே இருக்குது சவுதி அரசு” என்றாள் வேதனைக் குரலில்.

``இதே மாதிரிதான், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 22 வயசு மேஸ் அபு கோஷ்ங் கிற ஸ்டூடன்ட், ஒரு மாணவர் அமைப்புல இருந்திருக்காங்க. அதுதான் இவங்க மேல உள்ள குற்றச்சாட்டு. இஸ்ரேல் ஜெயில்ல இவங்க அனுபவிச்ச கொடுமைகளைக் கேட்டா, கண்ணீர் வந்துடும் வித்யாக்கா. மக்களுக்கானது தானே அரசாங்கம். அப்புறம் ஏன் மக்களையே இப்படி வதைக்குது?” என்று விரக்தி யுடன் கேட்டாள் வினு.

சற்று நேர கனத்த மௌனத்தைக் கலைத்து தொடர்ந்தாள் விமல், “கிரெட்டா துன்பர்கைப் பார்த்து, கனடாவைச் சேர்ந்த ஒன்பது வயசு நோவா சீமோன்ங்கிற குட்டிப் பையனும் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இளம் போராளியாக உருவாகியிருக்கான். டிரம்மைத் தட்டிக்கிட்டு நோவா பாடுறதைக் கேட்டா, சிலிர்த்துடுவோம். நோவாவின் பாட்டி கரோல் கூட சுற்றுச்சூழல் போராளி தான். நானும் நோவாவும் பூமிக்காகப் போராடுறோம். மரங்களுக்காகப் போராடு றோம். மக்களுக்காகப் போராடுறோம்னு சொல்றாங்க. பாட்டியும் பேரனும் உலக அளவுல கவனத்தை ஈர்த்துட்டு வர்றாங்க... சூப்பர்ல!”

``அடடா... பாட்டிக்கும் பேரனுக்கும் ஒரு ஸ்பெஷல் பாராட்டு. டிம்னிட் கெப்ரு என்ற லேடி கூகுளில் செயற்கை நுண்ணறிவுப் பொறியாளரா வேலை பார்த்துட்டிருந்தாங்க. அங்கே மனித முகங்களை அடையாளம் காட்டும் தொழில்நுட்ப சாஃப்ட்வேரில் நிறப் பாகுபாடு புகுத்தப்பட்டிருக்குனு கண்டுபி டிச்சாங்க. அதாவது வெள்ளை இனத்தவரின் முகங்களை சரியா அடையாளம் காணும் அந்த சாஃப்ட்வேர், கறுப்பினத்தவரின் முகங் கள்ல மூன்றில் ஒரு பங்கை தவறாவே காட்டுது. அது அவங்களை எந்த அளவுக்குக் காயப் படுத்தும்... இது தவறுன்னு சொன்னதால, கூகுள் இவங்களை வேலையைவிட்டு போக வெச்சுருச்சு. இப்போ கெப்ருவுக்காக 1,900 கூகுள் பணியாளர்கள் கையெழுத்து போட்டு, ஆதரவு தெரிவிச்சிருக்காங்க” என்றார் வித்யா.

“இப்படி இன, நிற, ஆண் பெண் பாகு பாட்டோடு சாஃப்ட்வேர் தயாரிக்கிறது தவறு. வேணும்னே இதைப் பண்ணிருக்காங்க. மைக்ரோசாஃப்ட், ஐபிஎம் மாதிரி பெரிய நிறுவனங்கள்லயும் இந்த மாதிரி பாகுபாடு இருக்கு. டென்னிஸ் ப்ளேயர் நவோமி ஒசாகா வும் பாகுபாடுகளை எதிர்த்துப் போராடிட்டு இருக்காங்க. `எந்த விளையாட்டுலயாவது அரசியல் இல்லாம இருக்கா... அப்ப ப்ளேயர்ஸ் மட்டும் அரசியல்ல இறங்கக்கூடாதுன்னு சொல்ல முடியாது. நாங்களும் நாட்டின் குடிமக்கள்தானே. அநியாயத்தைத் தட்டிக் கேட்காம இருக்க முடியாது. பாகுபாடுகளுக்கும் இன அச்சுறுத்தலுக்கும் எதிரா தொடர்ந்து குரல் கொடுத்துட்டுதான் இருப்போம்’னு சொல்லிருக்காங்க” என்றாள் வினு.

 நோவா சீமோன் - கரோல்
நோவா சீமோன் - கரோல்

“கிரேட்... படம், வெப் சீரிஸ் ஏதாவது பார்த்தியா விமல்?”

“கிரிமினல் ஜஸ்டிஸ் சீசன் 2 பார்த்தேன்க்கா. இந்திய நீதித்துறையில இருக்கிற குறைபாடுகளை வெச்சு, குற்றவாளிங்க தப்பிச்சிடறாங்க. நிரபராதிங்க மாட்டிக்கறாங்க. அப்படி மாட்டிக்கிட்ட நிரபராதிகளை வெளியே கொண்டுவர்றதுதான் கதை. பங்கஜ் திரிபாதி மாதிரி சில கேரக்டர்ஸ் ரெண்டு சீசன்ஸ்லயும் இருக்காங்க. மேரிடல் ரேப் பத்திப் பேசுது இந்த சீசன். பல வருஷங்களா கணவனால பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மனைவி ஒருநாள் பொறுக்க முடியாம கத்தியால் குத்திடறா. கணவன் செத்துப் போக, மனைவி ஜெயிலுக்குப் போறா. அவங்களுடைய 12 வயசு மகள் தவிக்கிறா. தண்டனை பெற்ற பெண்ணின் நியாயத்தைப் புரிஞ்சுகிட்டு வாதாடி, குறைவான தண்டனை வாங்கிக் கொடுக்கப் போராடுறாங்க பங்கஜ் திரிபாதியும் வக்கீல் அனுப்ரியா கோயங்காவும்” என்றாள் விமல்.

“நான் ‘பாவக்கதை’களில் ஒண்ணான `தங்கம்' பார்த்தேன். காளிதாஸ் ஜெயராம் பிரமாதமா நடிச்சிருக்கார். திருநங்கையா, சாந்தனுவைக் காதலிக்கிறார். சுதா கொங்கரா டைரக்ட் பண்ணிருக்காங்க. ரொம்ப டச்சிங்கா இருந்துச்சு” என்றார் வித்யா.

“விமல், வித்யாக்கா... பீச்சுக்கு வந்தா நேரம் போறதே தெரியாது. டைம் ஆச்சு. பனி வேற கொட்டுது. கிளம்பலாமா?” - வினு கேட்டதும், மூவரும் தங்கள் வண்டிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

(அரட்டை அடிப்போம்!)