Published:Updated:

அப்பாவிகள் முதல் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் வரை... அதிரவைக்கும் இணையவழிக் குற்றங்கள்!

இணையவழிக் குற்றங்கள்
பிரீமியம் ஸ்டோரி
இணையவழிக் குற்றங்கள்

சிவகங்கை ஆட்சியர் பெயரில் போலி ஐ.டியை உருவாக்கி நூதனமான முறையில் ஏமாற்றிய குற்றவாளிகள் பீகாரைச் சேர்ந்தவர்கள்

அப்பாவிகள் முதல் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் வரை... அதிரவைக்கும் இணையவழிக் குற்றங்கள்!

சிவகங்கை ஆட்சியர் பெயரில் போலி ஐ.டியை உருவாக்கி நூதனமான முறையில் ஏமாற்றிய குற்றவாளிகள் பீகாரைச் சேர்ந்தவர்கள்

Published:Updated:
இணையவழிக் குற்றங்கள்
பிரீமியம் ஸ்டோரி
இணையவழிக் குற்றங்கள்

‘வெளிநாட்டிலிருந்து சிறப்புப் பரிசு வந்திருக்கிறது, கடன் வாங்கித் தருகிறோம், உடனடியாக மின் கட்டணத்தை செலுத்துங்கள்...’ என்று டிஜிட்டல் வழியே டிசைன் டிசைனாக மோசடி செய்துவந்த சைபர் க்ரைம் குற்றவாளிகள், அண்மைக்காலமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயரிலும் போலி கணக்குகளை உருவாக்கி கைவரிசை காட்டத் தொடங்கியிருக்கின்றனர்!

‘கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர்களில் போலி கணக்குகளை உருவாக்கி, மிகப்பெரிய அளவில் பணத்தை கொள்ளையடித்திருக்கின்றன வட இந்தியாவைச் சேர்ந்த கும்பல்கள்’ என்று அதிரவைக்கின்றனர் சைபர் க்ரைம் போலீஸார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளராக (வேளாண்மைத்துறை) இருப்பவர் சர்மிளா. சில நாள்களுக்கு முன்பு, இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டியின் புகைப்படத்துடனான ஒரு வாட்ஸ்அப் எண்ணிலிருந்து மெசேஜ் வந்துள்ளது. அதில், ‘ரூ.10 ஆயிரம் அனுப்புமாறு’ ஆட்சியர் கேட்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. சர்மிளாவும் தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் அனுப்பியுள்ளார். தொடர்ந்தும் ‘பணம் அனுப்ப’ச்சொல்லி மெசேஜ் வரவே, 3 லட்சம் ரூபாய் வரையிலும் பணம் அனுப்பிய சர்மிளாவுக்கு, சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்தபோதுதான், அது ‘போலிக் கணக்கு’ என்பதே தெரியவந்துள்ளது.

அப்பாவிகள் முதல் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் வரை... அதிரவைக்கும் இணையவழிக் குற்றங்கள்!

இதே வரிசையில், கடந்த ஜூன் மாதம் மட்டும் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பெயர்களில் மோசடியை அரங்கேற்றியுள்ளனர் சைபர் குற்றவாளிகள். இதுதவிர காவல்துறை உயர் பொறுப்புகளில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர்களிலும் மோசடி அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பேசுகிற சைபர் க்ரைம் பிரிவின் உயரதிகாரிகள், “இதுபோன்ற டிஜிட்டல் மோசடிகளை இணையதளத்திலுள்ள ‘டார்க் வெப்’ வழியேதான் அரங்கேற்றுகின்றனர். இந்த டார்க் வெப் ஒவ்வொரு தடவையும் ஏதோவொரு நாட்டின் ஐ.பி அட்ரஸை காட்டுவதால், குற்றவாளிகளின் உண்மையான இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். அதே போல், மொபைலில் பேசும்போதும்கூட இன்டர்நெட்டை மட்டுமே இவர்கள் பயன்படுத்துவதால், இவர்களைப் பின்தொடர்வதும் சிரமம்.

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் இதுபோன்ற இணைய வழி குற்றங்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள். இதற்காகவே ஹைதராபாத், ராஜஸ்தான், உ.பி. போன்ற மாநிலங்களில், ‘டார்க் வெப்-பினை எப்படி பயன்படுத்துவது, எப்படியெல்லாம் ஹேக் செய்வது’ என்பது குறித்த கோர்ஸ்களை சிலர் ரகசியமாக நடத்துகிறார்கள். ஆனால், வெளிமாநிலங் களுக்குச் சென்று, பல்வேறு சிரமங்களையும் கடந்து காத்திருந்து குற்றவாளிகளைக் கைது செய்வதற்குத் தேவையான எண்ணிக்கையில் நம்மிடம் போலீஸார் இல்லை” என்றனர் ஆதங்கத்துடன்.

இதுகுறித்து சிவகங்கை எஸ்.பி செந்தில்குமாரிடம் பேசியபோது, ‘‘சிவகங்கை ஆட்சியர் பெயரில் போலி ஐ.டியை உருவாக்கி நூதனமான முறையில் ஏமாற்றிய குற்றவாளிகள் பீகாரைச் சேர்ந்தவர்கள். அவர்களின் ஐ.பி அட்ரஸை எடுத்துவிட்டோம். பீகார் போலீஸாரிடமும் தகவல் கொடுத்துள்ளோம். விரைவில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்” என்றார் உறுதியாக.

உஷாரய்யா... உஷாரு...!