கட்டுரைகள்
Published:Updated:

ஃப்ளர்ட்டிங்... தவறா..?!

ஃப்ளர்ட்டிங்... தவறா..?!
பிரீமியம் ஸ்டோரி
News
ஃப்ளர்ட்டிங்... தவறா..?!

நிஜத்தில் ஆண்கள் அதிகம் கடலை போடுகிறார்களா அல்லது பெண்கள் அதிகம் கடலை போடுகிறார்களா என்று ஆராய்ச்சி செய்வதற்கு பதில், இதைச் செய்யலாமா, கூடாதா என்பதை யோசிப்போம்

சமீபத்தில் வெளிவந்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில், ராஷி கன்னாவும் தனுஷும் பழகிக்கொண்டிருப்பார்கள். அதைக் காதல் என்று நம்பிக்கொண்டிருந்த தனுஷ் ஒருநாள் ‘ஐ லவ் யூ’ சொல்வார். ‘நான் ஜஸ்ட் ஃப்ளர்ட் (Flirt) பண்ணேன்’ என்று காதலுக்கு `நோ’ சொல்லிவிடுவார் ராஷி. தனுஷின் முகத்தில் ஏமாற்றத்தின் வலி பளிச்சென்று தெரியும்.

ஃப்ளர்ட்டை தமிழில், ‘கடலை போடுவது’ என்று சொல்லலாம். ‘சும்மா கடலை போட்டுக்கிட்டிருந்தேன்’ என்று 70’ஸ் கிட்ஸில் ஆரம்பித்து 90’ஸ் கிட்ஸ் வரை எல்லோரும் செய்துகொண்டிருந்த விஷயம்தான். 2கே கிட்ஸ் அதை ‘Flirt செஞ்சோம்’ என்று நாகரிகமான மொழியில் சொல்கிறார்கள். ‘ஜஸ்ட் லைக் தட்’ ஆகச் செய்யப்படுகிற கடலை போடுதல், விளையாட்டா அல்லது ஆபத்தான விளையாட்டா..? உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கரிடம் பேசினோம்.

சரஸ் பாஸ்கர்
சரஸ் பாஸ்கர்

‘‘அந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒரு பெண் ஃப்ளர்ட் செய்கிறார். நிஜத்தில் ஆண்கள் அதிகம் கடலை போடுகிறார்களா அல்லது பெண்கள் அதிகம் கடலை போடுகிறார்களா என்று ஆராய்ச்சி செய்வதற்கு பதில், இதைச் செய்யலாமா, கூடாதா என்பதை யோசிப்போம். ஃப்ளர்ட் பற்றி சரியாகச் சொல்வதென்றால், ஒருவருடைய வாழ்க்கையில் இன்னொருவர் விளையாடுவது. எதிர்ப்பாலினத்திடம் கடலை போடுவது எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது. தற்போது அதிகரித்திருக்கிறது அல்லது வெளிப்படையாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

கடலை போடுகிறவர்களுக்கு அந்த செயல் ஜாலியாகவும், டைம்பாஸ் ஆகவும் இருக்கும். ஆனால், மற்றொருவர் அதை நட்பாகவோ, காதலாகவோ எடுத்துக்கொண்டு சீரியஸாக நேரம் செலவிடும்போது... அவர்களுக்குக் கிடைக்கிற ஏமாற்றமும் வருத்தமும், ரிலேஷன்ஷிப் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி விடும்.

அதற்காக இதை ஒழுக்கமில்லாத செயல் என்று சொல்ல முடியாது. ஆனால், இது உணர்வுரீதியில் ஒருவரை பாதிக்கக்கூடிய செயல் என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஃப்ளர்ட்டிங்... தவறா..?!

இன்றைய இளைஞர்களில் பலரிடம் ஃப்ரீடம், ஃப்ரீடம் வித் நோ லிமிட்ஸ் இரண்டும் நிறைய இருக்கின்றன. இப்படிப்பட்டவர்கள், பொழுதைப்போக்க ஃபன் என நினைத்துக்கொண்டு தங்கள் நட்பையும் உறவுகளையும் சோதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘என்னால் எத்தனை பெண்களை அடக்க முடிகிறது’, ‘என்னால் எத்தனை ஆண்களை மடக்க முடிகிறது’ என்பதைத் தங்கள் நண்பர்களுக்குக் காட்டவும், கடலை போடுவதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் சிலர். ‘சமூக வலைதளங்களில் எத்தனை பேர் என்னை ஃபாலோ செய்கிறார்கள் பார்’ எனக் காட்டிக் கொள்வதற் காகவும் கடலை போடுவது நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தவறு எனச் சொல்லிவிட முடியாது. இளவயதுக்கே உரிய இயல்பான நடத்தைதான் இது. என்றாலும், கண்டிப்பாக இது ஆரோக்கியமான விஷயம் கிடையாது.

ஃப்ளர்ட் செய்வதில் பெரிய ரிஸ்க் ஒன்று இருக்கிறது. ஒருவர் ஃப்ளர்ட் செய்துவிட்டு ஜாலியாகச் சென்றுவிட, மற்றொருவர் அதை டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ளாமல், பழி வாங்குகிறேன் என்று சீரியஸாக இறங்கிவிட்டால், இருவரின் வாழ்க்கையும் சிக்கலாகிவிடும். மொத்தத்தில் ஒருவருடைய ஜாலிக்காக, மற்றொருவரின் உணர்வுடன் விளையாடுவது தவிர்க்கப்பட வேண்டியதுதான்’’ என முடித்தார் சரஸ் பாஸ்கர்.