Published:Updated:

ஒன் பை டூ: கொரோனாவைக் கட்டுப்படுத்த அபராதம் சரியா?

மா.சுப்பிரமணியன் - ஜி.பிரகாஷ்,
பிரீமியம் ஸ்டோரி
மா.சுப்பிரமணியன் - ஜி.பிரகாஷ்,

அன்றாடம் நூறோ இருநூறோ சம்பாதிக்கும் கூலித் தொழிலாளிகளும், சிறு, குறு வியாபாரிகளும் இதனால் பெரிதும் பாதிப்படைவார்கள்

ஒன் பை டூ: கொரோனாவைக் கட்டுப்படுத்த அபராதம் சரியா?

அன்றாடம் நூறோ இருநூறோ சம்பாதிக்கும் கூலித் தொழிலாளிகளும், சிறு, குறு வியாபாரிகளும் இதனால் பெரிதும் பாதிப்படைவார்கள்

Published:Updated:
மா.சுப்பிரமணியன் - ஜி.பிரகாஷ்,
பிரீமியம் ஸ்டோரி
மா.சுப்பிரமணியன் - ஜி.பிரகாஷ்,

மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் மேயர், சென்னை பெருநகர மாநகராட்சி

ஒன் பை டூ: கொரோனாவைக் கட்டுப்படுத்த அபராதம் சரியா?

தமிழக அரசு, மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறியதே கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதற்குக் காரணம். விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது, சம்பந்தப்பட்ட அத்தனை அரசுத்துறைகளின் கட்டாயக் கடமை. அதைவிடுத்து, கொரோனா பெருந்தொற்றுச் சூழலில் ஏதோ சொத்து வரி வசூலிப்பதுபோல இலக்கு நிர்ணயித்து வணிக நோக்கில் பணம் பிடுங்குவது அக்கிரமம். கொரோனா முதல் அலையில் பறிபோன மக்களின் வாழ்வாதாரம் இன்னும் முழுமையாகக் கைகூடவில்லை என்பதை மறந்துவிடக் கூடாது. பிரசாரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுகாதார நடவடிக்கைகளில் மேம்பாடு, பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் போர்க்கால நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்த வேண்டுமே தவிர, அபராதம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைப்பது தவறு; அது விழிப்புணர்வையும் ஏற்படுத்தாது. மிகவும் கண்டனத்துக்குரிய நடவடிக்கையும்கூட. அன்றாடம் நூறோ இருநூறோ சம்பாதிக்கும் கூலித் தொழிலாளிகளும், சிறு, குறு வியாபாரிகளும் இதனால் பெரிதும் பாதிப்படைவார்கள். எனவே, தமிழக அரசு இலக்கு நிர்ணயத்தைக் கைவிட வேண்டும்.

ஒன் பை டூ: கொரோனாவைக் கட்டுப்படுத்த அபராதம் சரியா?

ஜி.பிரகாஷ், ஐ.ஏ.எஸ்., ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி

சென்னை முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இதற்கு முன்பும் நடத்தினோம்; இப்போதும் நடத்திவருகிறோம். ஒவ்வொரு பகுதிகளிலும் இருக்கும் கடைகளில் விழிப்புணர்வு அறிவிப்புகளையும், விளம்பரங்களையும் ஒட்டியிருக்கிறோம். ஆனாலும், பெரும்பாலான மக்களும், கடை உரிமையாளர்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை, முகக் கவசம் அணிவதில்லை, சானிடைஸர் பயன்படுத்துவதில்லை. கடந்த ஆண்டைவிட நோய்த்தொற்று அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மக்களைக் காக்க வேண்டியது ஓர் அரசின் கடமை. மற்றபடி, மக்களிடம் அபராதம் வசூலிப்பது மாநகராட்சியின் நோக்கம் அல்ல. விதிமுறைகளைப் பின்பற்றவைத்து, நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே மாநகராட்சியின் நோக்கம். கட்டுக்கடங்காமல் அதிகரித்துவரும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இது போன்ற கடினமான முடிவுகளை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த நோய்ப் பரவலை நாம் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். இதை உணர்ந்துகொள்ளவும், தீவிரத்தை உணர்த்தவும்தான் அபராதமே தவிர, சம்பாதிக்கும் நோக்கில் அல்ல. இதை எல்லோருமே புரிந்துகொள்வது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism