Published:Updated:

வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை... சரியா, தவறா?!

Avaludan
பிரீமியம் ஸ்டோரி
Avaludan

#Avaludan

வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை... சரியா, தவறா?!

#Avaludan

Published:Updated:
Avaludan
பிரீமியம் ஸ்டோரி
Avaludan

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், அரசு ஊழியர்களுக்கு, இனி வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை நாள்கள் என அறிவித்துள்ளார். ஊழியர்களின் செயல்திறனை இது அதிகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். அவள் விகடன் சமூகவலைப் பக்கங்களில், இதுபற்றிய கருத்துகளை வாசகர்களிடம் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் அவர்கள் பகிர்ந்துகொண்டவற்றில் சிறந்தவை இங்கே...

Geetha Kennedy

வரவேற்கப்பட வேண்டியது. ஐந்து நாள்கள் உற்சாகத் துடன் வேலைபார்க்கலாம்.

Aarthi Chandrasekaran

பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய தேவைகளுக்கு சனிக்கிழமைகளில்தான் செல்வார்கள். சத்தீஸ்கர் முதல்வரின் இந்த முடிவு, இனி தனியார் நிறுவன ஊழியர்கள் வாரநாள்களில் விடுமுறை எடுக்க நிர்பந்தப் படுத்தும். மேலும், தனியார் நிறுவன ஊழியர்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வரையெல்லாம் வேலைபார்த்து வரும் சூழலில், அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை என்ற இந்தத் திட்டம் நல்ல தாகப்படவில்லை.

Anbu Bala

இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், இதைச் செயல்படுத்துவதற்கு முன்பு, அரசு ஊழியர்களுக்கு ஐந்து வொர்க்கிங் டேஸ்களுக்கான பணித்திட்டங்கள் வரை யறுக்கப்பட்டு, அவை முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எந்தக் கோப்பும், யார் மேசையிலும் கைகளிலும் தங்காமல் நகர்ந்துகொண்டே இருக்குமாறு அவர்களை வேலைசெய்ய வைக்க வேண்டும்.

வாரத்தில்  ஐந்து  நாள்கள்  மட்டுமே  வேலை... சரியா, தவறா?!

Radhika Ravindrran

வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை என்பது, வெளிநாடுகளில் ஏற்கெனவே பின்பற்றப்படுகிறது. இதனால் ஊழியர்களுக்கு இரண்டு நாள்கள் முழுமையான ஓய்வு கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செல விடலாம்; சொந்த வேலைகளைக் கவனிக்கலாம். இவை யெல்லாம் ஊழியர்களைப் புத்துணர்வாக்கி, செயல்திறனை அதிகரிக்கும். சனிக்கிழமைகளில் அலுவலகம் செல்லும் போக்குவரத்துச் செலவு, அலைச்சல் குறையும். வார இறுதி நாள் விடுமுறைக்காக, வார நாள்களில் சிறிது நேரம் கூடுதலாக வேலை பார்க்கவும் தயாராக இருப்பார்கள்.

துடுப்பதி வெங்கண்ணா துடுப்பதி வெங்கண்ணா

வாரத்தில் ஐந்து நாள்களே வேலை என்ற சத்தீஸ்கர் முதல்வரின் முடிவு சரியா, தவறா என்பது பெரும் விவாதத்துக்குரியது. குறிப்பாக, அதனால் ஊழியர்களின் செயல்திறன் அதிகரிக்கும் என்பது நகைப்புக்குரியதாகவே படுகிறது.

Sarojini Sureshkumar

ஞாயிற்றுக்கிழமைகூட ஊழியர்களை வேலைபார்க்க வைத்து தங்கள் லாபத்தை அதிகரிக்க நினைக்கும் தனியார் நிறுவனங்களுக்கும், இதுபோல ஐந்து நாள்கள் மட்டுமே வேலை என்ற வரையறையைக் கொண்டு வரலாம். வாரத்தில் ஐந்து நாள்களும் மாங்கு மாங்கென்று வேலைக்குச் சென்று வருவது நிச்சயமாக எனர்ஜி குறைய வைக்கும். ஒரு நாள் கூடுதல் ஓய்வு கிடைப்பது வரவேற்க வேண்டியதே.

Sathia Moorthi

இது நல்ல அறிவிப்பு. கூடவே, ஐந்து வேலை நாள்களிலும் கூடுதலாக ஒரு மணி நேரம் பணி நேரத்தை அதிகப்படுத்தலாம்.

Usha Baskar

வரவேற்கிறேன். ஐந்து நாள்களே வேலைசெய்வதால் மிகுந்த உற்சாகத்துடன் பணிகளை முடிப்பார்கள். அவசர வேலைகள் தவிர, மாதாந்தர ஹெல்த் செக் அப் உள்ளிட்ட, ஊழியர்கள் தங்களது பிற வழக்கமான வேலைகளுக்கு, கடைமைகளுக்கு லீவு போட வேண்டாம். வார இறுதி நாள்களில் தெருக்களில் டிராஃபிக் குறையும், மாசு குறையும். மின்சாரம் அதிக அளவில் கம்பெனிகளுக்கு சேமிப்பாகும். அதனால் அரசாங்கத்துக்கும் மின்சார சேமிப்பே.

Sarasvathi Swaminathan

ஐந்து நாள்கள் வேலை, இரண்டு நாள்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சிப் பொழுது என்பது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. வாழத்தான் சம்பாதிக்கிறோம். ஆனால், இப்போதோ சம்பாதிப்பதற்காக வாழ்வதுபோல ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த இயந்திரத்தனமான காலகட்டத்தில், சத்தீஸ்கர் முதல்வரின் இந்த அறிவிப்பு, ஊழியர்களின் தனிநபர் நலன் மற்றும் குடும்ப நலனை நிச்சயம் மீட்டெடுக்கும்.

Wewin Ibu

ஏற்கெனவே, அரசு அலுவலகங்கள் பற்றியும், அரசு ஊழியர்களின் பணி பற்றியும் அறிவோம். இதில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை என்பது, அரசு சேவைகளை இன்னும் மந்தமாக்கவே செய்யும். மாதம் 20 நாள்கள் வேலைக்கு முழு சம்பளம், மக்களின் வரிப்பணத்தில் கொடுக்க வேண்டும்.

Janaki Paranthaman

‘ஊழியர்களின் செயல் திறனை அதிகப்படுத்தும்’ என நினைத்து சத்தீஸ்கர் முதல்வர் இதை அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒட்டுற மண்தான் ஒட்டும் என்பார்கள். அப்படித்தான் அரசு ஊழியர்களும், பார்க்கும் வேலையைத்தான் பார்ப்பார்கள். முதல்வருக்கு வேண்டுமானால் அரசு ஊழியர்களின், அவர்கள் குடும்பங்களின் வாக்கு வங்கி உயரலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism