Published:Updated:

தென்காசி: குண்டாறு தனியார் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்; கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

குண்டாறு தனியார் அருவி
குண்டாறு தனியார் அருவி

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் குண்டாறு தனியார் அருவிகள் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் அலைமோதியது. .

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். சில்லென்ற காற்றுடன் இதமான சாரல் மழை பெய்யும். அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சீசனை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.

குண்டாறு அணை செக்-போஸ்ட்
குண்டாறு அணை செக்-போஸ்ட்

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இடையில், ஒரு மாத காலத்துக்கு அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டபோதிலும் போதிய தண்ணீர் விழாததால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தின் தொடக்கத்திலேயே சீசன் களைகட்டத் தொடங்கிவிட்டது. தற்போது சாரல் பெய்வதுடன், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்வதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது. ஆனால் கொரானோ ஊரடங்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் போன்ற அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

ஆபத்தான ஜீப் பயணம்
ஆபத்தான ஜீப் பயணம்

இந்தச் சூழலைப் பயன்படுத்தி, குண்டாறு அணையின் மேலிருக்கும் தனியார் அருவிகளின் உரிமையாளர்கள் லாபம் சம்பாதிக்கத் தொடங்கினார்கள். குண்டாறு மற்றும் மேக்கரை பகுதிகளில் 10-க்கும் அதிகமான தனியார் அருவிகள் உள்ளன. அங்கு கட்டணம் வசூலித்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

குண்டாறு அணையின் மேற்பகுதியில் உள்ள மலையில் இருந்து வரும் ஓடைகளை மறித்து சட்டவிரோதமாக செயற்கை அருவிகளாக்கி அங்கு பயணிகள் குளிக்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தனியார் அருவிகளுக்கு ஜீப் மூலமாக மட்டுமே செல்ல முடியும். அங்குள்ள செங்குத்தான மலைப்பாதையில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு குளிக்க ஒரு நபருக்கு ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது.

மேக்கேதாட்டு அணை விவகாரம்; பாஜக தலைமைக்கு செக் வைக்க நினைக்கும் எடியூரப்பா!
தனியார் அருவிக்கு வந்தவர்களின் வாகனங்கள்
தனியார் அருவிக்கு வந்தவர்களின் வாகனங்கள்

குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படாத நிலையில், வசதியானவர்கள் மட்டும் தனியார் அருவிகளில் குளிப்பது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் கவனத்துக்குச் சென்றது. அதனால் அதிகாரிகளை அனுப்பி குண்டாறு பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகளை உடனடியாக வெளியேற உத்தரவிட்டதுடன், ஊரடங்கு நடைமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

குண்டாறு பகுதியில் தனியார் அருவிக்குச் செல்லும் பாதைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளளது.

அடுத்த கட்டுரைக்கு