Published:Updated:

சேர்ந்து வாழ மாட்டேன் என்று சொல்லித்தான் திருமணம் செய்தேன்!

விவாகரத்து சர்ச்சையில் போலீஸ் கணவர்...
பிரீமியம் ஸ்டோரி
விவாகரத்து சர்ச்சையில் போலீஸ் கணவர்...

- விவாகரத்து சர்ச்சையில் போலீஸ் கணவர்... நீதி கேட்கும் மனைவி!

சேர்ந்து வாழ மாட்டேன் என்று சொல்லித்தான் திருமணம் செய்தேன்!

- விவாகரத்து சர்ச்சையில் போலீஸ் கணவர்... நீதி கேட்கும் மனைவி!

Published:Updated:
விவாகரத்து சர்ச்சையில் போலீஸ் கணவர்...
பிரீமியம் ஸ்டோரி
விவாகரத்து சர்ச்சையில் போலீஸ் கணவர்...

‘தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால், தனக்குத் தெரியாமலேயே தன்னை விவாகரத்து செய்திருப்பதாக’ இளம்பெண் ஒருவர், கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்திருக்கிறார்!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த அந்தப் பெண்ணிடம் பேசினோம். “என் பெயர் கவிதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). குறிஞ்சிப்பாடி வட்டம், குண்டியமல்லூரைச் சேர்ந்த என் உறவினரான ராம்குமாரும் நானும் 2013-ம் ஆண்டிலிருந்தே காதலித்துவந்தோம். நெருங்கிப் பழகியவர் என்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ள ஆரம்பித்தார். 2017-ல் அவர் காவலர் பணிக்குத் தேர்வாகி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணிக்குச் சேர்ந்தார். அப்போது அங்கு வேறொரு பெண் காவலருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதனால் என்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறினார்.

சேர்ந்து வாழ மாட்டேன் என்று சொல்லித்தான் திருமணம் செய்தேன்!

இது குறித்து 2019-ல் கடலூர் மாவட்ட எஸ்.பி-யிடமும், முதல்வர் தனிப் பிரிவுக்கும் புகார் கொடுத்தேன். என் குடும்பத்தினரும் இது விஷயமாக அழுத்தம் கொடுத்ததால், வேறு வழியின்றி என்னைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அதன் பிறகும்கூட வீட்டுக்குச் சரிவர வருவதில்லை. இது குறித்துக் கேட்டால், ‘உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கோ. உன்னுடன் வாழ முடியாது. இப்படில்லாம் பண்ணினா, காதலிக்கும்போது நீயும் நானும் உடலுறவு வெச்சுக்கிட்ட வீடியோவை வெளியே விட்டுடுவேன்’னு மிரட்டினார். அதற்குப் பிறகுதான் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அப்போதுதான் அங்கு வந்து எனக்கும் அவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று சர்ட்டிஃபிகேட்டைக் காட்டினார். நாங்கள் இருவருமே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், மயிலாடுதுறையில் நாங்கள் குடியிருந்ததாக போலிச் சான்றிதழ் கொடுத்து, அந்த நீதிமன்றத்தையே ஏமாற்றி விவாகரத்து வழக்கு போட்டிருக்கிறார். அதனால், அந்த வழக்கை மறுபடியும் விசாரிக்க வேண்டுமென்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறேன்” என்றார் கலங்கிய கண்களுடன்.

சேர்ந்து வாழ மாட்டேன் என்று சொல்லித்தான் திருமணம் செய்தேன்!

இது குறித்து விளக்கம் கேட்க ராம்குமாரைத் தொடர்புகொண்டோம். “காதலித்தால் உடலுறவு இருக்கும்தான். அவர்களின் சம்மதம் இல்லாமலா செய்தேன்... நான் வீடியோ எடுத்ததற்கான ஆதாரம் அவர்களிடம் இருக்கிறதா... இரண்டு வாரம் என்னை அவர்கள் வீட்டுச்சிறையில் வைத்திருந்தார்கள். அப்போது நான் தற்கொலைக்கு முயன்றேன். `இந்தத் திருமணம் நடந்தாலும், நான் சேர்ந்து வாழ மாட்டேன்’ என்று அப்போதே சொல்லித்தான் திருமணம் செய்தேன். `கர்ப்பமாக இருக்கிறேன்’ என்றும் கூறியிருந்தார். ஆனால், மூன்று மாதங்களுக்குப் பிறகு ‘குழந்தை எங்கே?’ என்று கேட்டபோது ‘அபார்ஷன் செய்துவிட்டேன்’ என்று சொல்கிறார். அதற்கு என்ன அர்த்தம்?” என்றார் கோபத்தோடு.

ராம்குமார்
ராம்குமார்

மீண்டும் நாம் கவிதாவைத் தொடர்புகொண்டபோது, “நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று எந்தப் புகாரிலும் கூறவில்லை. மேலும் அவரை நாங்கள் சிறை வைத்ததாகச் சொல்வதும் உண்மையில்லை. இரண்டு நாள்கள் மட்டும்தான் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார்” என்றார்.

காதல், திருமணம், கர்ப்பம், விவாகரத்தெல்லாம் எவ்வளவு விளையாட்டாகிவிட்டன?!