Published:Updated:

முதலீடு: தீபாவளி... செலவுக்கு மட்டுமல்ல, சேமிப்புக்கும்தான்!

 தீபாவளி
பிரீமியம் ஸ்டோரி
News
தீபாவளி

லதா ரகுநாதன்

ண்டிகை என்றாலே செலவு என்பதில் மாற்றமில்லை. இந்தப் பேரிடர் நேரத்திலும் குடும்பத்துக்காகச் செலவு செய்துதான் ஆக வேண்டும். அதேநேரம், இந்தச் செலவோடு செலவாக சேமிப்புக்கும் சிறு இடம்கொடுத்தால், அது பெருவரவாக பின்னாளில் மாறி நின்று, இக்கட்டான சூழலில் நம்மைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.

சேமிப்பு என்றவுடன் நம்மில் பலருக்கும் சட்டென ஞாபகத்துக்கு வருவது தங்கம் வாங்குவதுதான். இப்போது உள்ள விலையில் தங்கம் வாங்குவது அத்தனை பேருக்கும் சாத்தியம்தானா என்கிற கேள்வி முதலில் எழுந்து நிற்கும்.

1960-களில் இருந்த தங்கத்தின் விலை, 1980-களில் அந்த அளவு அதிர்ச்சியைத் தரவில்லை. 10 கிராம் தங்கம் (24 கேரட்) 100 ரூபாயிலிருந்து 1980-ல் 1,300 ரூபாயாக உயர்ந்தது. இது ஏறக்குறைய பணவீக்கத்தின் தாக்கத்தால்தான் நிகழ்ந்தது. ஆனால், 1990-களில் ஏறத் தொடங்கிய விலை, 2012-ல் 31,000 ரூபாய் வரை சென்று சற்றே நின்றது. இதற்கு முக்கியமான காரணம், 2008-09-ல் ஏற்பட்ட நிதிக்குமிழி (Financial bubble). இதன்பின் தங்கத்தின் விலை சற்றே குறையத் தொடங்கியது. ஆனால், 2018-லிருந்து அதன் ஏறுமுகம் தொடங்கிவிட்டது. பங்குச்சந்தையைப் போல் தங்கத்துக்கும் ஏறுமுகம், இறங்குமுகம் என இரண்டு கட்டங்கள் உண்டு.

இப்போது தங்கம் ஏறுமுகத்தில் இருக்கிறது. பேங்க் ஆஃப் அமெரிக்காவின் கூற்றின்படி, 2021 முடிவில் தங்கத்தின் விலை 76 சதவிகிதம் அதிகரித்து இருக்கும் என்று தெரிகிறது. அதாவது, 10 கிராம் தங்கத்தின் (24 கேரட்) விலை 82,000 ரூபாயாக இருக்கும் என்கிறார்கள். இதைப்போன்ற ஏறுமுகம் ஏழு முதல் பத்து ஆண்டுகளுக்கு இருக்கும். அதை வைத்துப் பார்த்தால் தங்கத்தின் விலை இன்னும் ஏற வாய்ப்பு உண்டு. ஏற்கெனவே கோவிட் பாதிப்பு காரணமாக கைகளில் தேவையான பணம் இல்லாத சூழலில், தங்கத்தில் முதலீடு பற்றிய சிந்தனை தேவையா என்று யோசிக்க வேண்டாம். இன்றைய நிலை, நாளை இல்லாமல் போகும். ஆகவே, முடிந்தபோது நம்முடைய மாதச் சேமிப்பில் ஒரு சிறு பங்கானது, தங்கத்திலும் இருக்கட்டும்.

முதலீடு: தீபாவளி... செலவுக்கு மட்டுமல்ல, சேமிப்புக்கும்தான்!

சிறு பங்கைக்கொண்டு எந்த நகை வாங்க முடியும் என்ற கேள்வி அடுத்து வரலாம். தங்கத்தில் சேமிப்பது என்பது தங்கத்தை கைகளில் வாங்கி வைத்துக்கொள்வது என்பதில்லை. இதில் பாதுகாப்பு, செய்கூலி தள்ளுபடி, சேதாரம், லாக்கர் செலவு என்று பல இன்னல்கள் உண்டு. தவிர, கிராம் கிராமாக வாங்கி வைப்பதும் சற்றே சிரமமாகத்தான் இருக்கும். இதற்கு மாற்று கோல்டு பாண்டு திட்டங்கள். ரிசர்வ் வங்கியால் சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சமாக ஒரு கிராம் தங்கம்கூட வாங்கலாம். இவை சாதாரணமாக எட்டு ஆண்டுகளுக்கு என்ற காலகட்டத்துடன் இருக்கும். அதாவது, இன்று வாங்கப்படும் பாண்டுகளை இந்தக் காலகட்டத்துக்குப் பிறகுதான் பணமாகப் பெற முடியும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
முதலீடு: தீபாவளி... செலவுக்கு மட்டுமல்ல, சேமிப்புக்கும்தான்!

பாண்டுகள் மூலம் ஓராண்டுக் காலத்துக்குள் நான்கு கிலோ எடை தங்கம் வரைதான் ஒருவர் வாங்க இயலும். இந்த பாண்டுகளை பங்குச் சந்தையிலும் வாங்கி விற்க இயலும். பங்குகளின் விலை ஏற்ற இறக்கம் போல், பாண்டுகளின் விலையிலும் மாற்றம் இருக்கும். இவற்றின் மீது வங்கிகளிடம் கடன் பெறும் வசதியும் உண்டு. ஐந்து ஆண்டுக்குள்ளாகவே அரசாங்கத்திடம் திருப்பிக்கொடுத்து அன்றைய தங்கத்தின் விலையில் பணத்தைப் பெறவும் இதில் வாய்ப்புகள் உண்டு.

இந்த முதலீட்டுக்கு 2.5 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நம் வங்கிக்கணக்கில் இந்த வட்டித் தொகை வரவு வைக்கப்படும். குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அரசாங்கத்திடம் பாண்டுகளை நாம் திருப்பிச் சமர்ப்பிக்கும்போது, தங்கத்தின் விலை ஏற்றம் கண்டிருந்தால் அந்த லாபத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்பது இதன் சிறப்பு. அதேநேரம், பங்குச் சந்தைகளில் விற்பனை செய்தால், லாபத்துக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். அரசாங்கம் அறிவிக்கும் தேதிகளில் இவற்றை நாம் ஆன்லைனில் வாங்கினால், இஷ்யூ ப்ரைஸைவிட 50 ரூபாய் குறைவான விலையிலேயே கிடைக்கும். மாதந்தோறும் சிறுசிறு சேமிப்புகளை இந்த பாண்டுகளில் போட்டு வந்தால், கணிசமான அளவில் பெருகும்போது தேவைக்கேற்ப நகையாக மாற்றிக்கொள்ளலாம்.

குழந்தைகள் கல்விக்கென ஒரு பங்கு, பெற்றோர்களுக்கென ஒரு பங்கு, வெளிநாட்டுப் பயணத்துக்கென ஒரு பங்கு என்று சேமிப்பில் சிறுசிறு தொகைகளைத் தனியாக எடுத்துவைப்பதும் பின்னாளில் பயன் தரக்கூடியதே. இவற்றைச் சாதாரண ரெக்கரிங் டெபாசிட்டுகளாக வங்கிகளில் போட்டால் போதுமானது. அவை கணிசமான தொகையாக வளர்ந்தபின், அதிக வருமானம் கொடுக்கக்கூடிய சேமிப்புகளில் மாற்றுவது பற்றி யோசிக்கலாம். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து, பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யத் தயார் என்று நினைக்கும் சிங்கப் பெண்கள் மியூச்சுவல் ஃபண்டில் பணத்தைப் போடுவதற்குப் பரிசீலிக்கலாம்.

இந்தத் தீபாவளியை சேமிப்பின் தொடக்க நாளாகவும் மாற்றிக்கொள்ளலாம் தானே!