Published:Updated:

தீபாவளிக்குப் புதுசு... பட்டாசு சாக்லேட்டுக்கு மவுசு!

சாக்லேட்கள்ல செயற்கை நிறங்கள் எதையும் சேர்க்கிறதே யில்ல. அதனால வெள்ளை மில்க் சாக்லேட், சாக்கோ பிரவுன் சாக்லேட்னு ரெண்டு நிறங்கள்தாம்.

பிரீமியம் ஸ்டோரி

சாக்லேட்ல தீபாவளிக்கு என்ன ஸ்பெஷலா செய்ய லாம்னு யோசிச்சப்போ தோணின ஐடியாதான், இந்த பட்டாசு சாக்லேட். புஸ்வானம், ராக்கெட், அணுகுண்டு வடிவங்கள்ல சாக்லேட் செஞ்சு, பட்டாசு ரேப்பர் போலவே அதை பேக் செஞ்ச என்னோட ஐடியா இப்போ ஹிட்” - உற்சாகமாகச் சொல்கிறார், திண்டுக்கல் ஆர்.வி.நகரைச் சேர்ந்த புவனசுந்தரி.

சாஃப்ட்வேர் துறையிலிருந்து சாக்லேட் தொழில்முனைவோராகி இருப்பவர் புவன சுந்தரி. ‘`எம்.சி.ஏ முடிச்சிட்டு பெங்களூர்ல ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்துல வேலை பார்த்துட்டு இருந்தேன். திருமணத்துக்கு அப்புறம் வேலையைத் தொடர முடியல. என் குழந்தைங்க சாய்கஜ்வன், அமிர்தயாழினிக்காக வீட்டிலேயே சாக்லேட் செய்தேன். அது உறவினர்கள், நண்பர்கள் வட்டம்னு விரிஞ்சு, எல்லாருமே ‘சூப்பர்’னு சான்றிதழ் கொடுக்க, சரி இதையே தொழிலா செய்யலாம்னு முடிவெடுத்தேன்.

தீபாவளிக்குப் புதுசு... பட்டாசு சாக்லேட்டுக்கு மவுசு!
தீபாவளிக்குப் புதுசு... பட்டாசு சாக்லேட்டுக்கு மவுசு!
தீபாவளிக்குப் புதுசு... பட்டாசு சாக்லேட்டுக்கு மவுசு!

சாக்லேட் செய்ய பெங்களூர்ல ஒரு மாசம் பயிற்சி எடுத்துக்கிட்டதோடு, ஆன்லைனிலும் சர்டிஃபிகேட் கோர்ஸ்களை முடிச்சேன். 2018-ல் இருந்தே சாக்லேட்கள் செஞ்சாலும் கடந்த காதலர் தினத்திலிருந்துதான் பிசினஸ் பிக் அப் ஆச்சு. உணவுப் பாதுகாப்பு அமைப் பின் தரச் சான்றிதழ் வாங்கியிருக்கேன்’’ என்ப வருக்கு, அவர் கணவர் சிவகுருநாதன், வீட் டின் தரைத்தளத்தை மனைவியின் தொழிற் கூடத்துக்கான பரிசாக வழங்கியிருக்கிறார்.

‘`என் சாக்லேட்களை கடைகள்ல நான் விற்பனைக்குக் கொடுக்கிறதில்ல. திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஈரோடு, தர்மபுரி, பெங்களூர்னு வாடிக்கையாளர்களுக்கு நேரடியா அனுப்பிடுறேன். சாக்லேட்கள்ல செயற்கை நிறங்கள் எதையும் சேர்க்கிறதே யில்ல. அதனால வெள்ளை மில்க் சாக்லேட், சாக்கோ பிரவுன் சாக்லேட்னு ரெண்டு நிறங்கள்தாம். இதை சூரிய ஒளி நேரடியா படாதபடி ரூம் டெம்பரேச்சர்லேயே வெச் சிருக்கலாம், ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது. ஃபிரிட்ஜ்ல வைக்க வேண்டிய அவசியமில்லை’’ என்பவர், பட்டாசு சாக்லேட் ஐடியா பற்றி சொன்னார்.

தீபாவளிக்குப் புதுசு... பட்டாசு சாக்லேட்டுக்கு மவுசு!
தீபாவளிக்குப் புதுசு... பட்டாசு சாக்லேட்டுக்கு மவுசு!
தீபாவளிக்குப் புதுசு... பட்டாசு சாக்லேட்டுக்கு மவுசு!
தீபாவளிக்குப் புதுசு... பட்டாசு சாக்லேட்டுக்கு மவுசு!

‘`கிறிஸ்துமஸ் ட்ரீ சாக்லேட், சான்டா க்ளாஸ் சாக்லேட்னு குழந்தைகளுக்கு நெருக்க மான வடிவங்கள்ல சாக்லேட் செய்துட்டு இருந்தேன். இந்நிலையிலதான், தீபாவளிக்கு பட்டாசு வடிவிலான சாக்லேட்னு ஐடியா தோணுச்சு. அச்சு மோல்ட்களை அதுக்கேத்த மாதிரி ரெடி பண்ணி புஸ்வானம், சங்குச் சக்கரம், சரஸ்வதி வெடி, அணுகுண்டு, சரவெடி, ராக்கெட் வெடி வடிவங்கள்ல சாக்லேட்களை செஞ்சேன். அதுக்கெல்லாம் பட்டாசு ரேப்பர் போலவே ரேப்பர் ஒட்டி னேன். குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. பெற்றோர்களுக்கு, தங்களோட குழந்தைகள் முகத்துல அந்த சர்ப்ரைஸை பார்க்க ரொம்பப் பிடிச்சுப் போச்சு. விற்பனையும் பிக்அப் ஆச்சு. இந்த மாசம் மட்டும் 50 கிலோ ஆர்டர் இதுவரை கிடைச் சிருக்கு. திண்டுக்கல் மாதிரி ஒரு சிறு நகரத்துல பெண் தொழில்முனைவோரா இருக்குறது ரொம்ப தன்னம்பிக்கை தருது’’

- சரவெடி உற்சாகத்துடன் சொல்கிறார் புவனசுந்தரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு