Published:Updated:

ஊட்டி: `புதிய கட்சிகளின் வரவு எங்கள் வெற்றியை பாதிக்காது!’ - கனிமொழி

கனிமொழி
கனிமொழி

பாரம்பர்ய ஆடல் பாடல்களுடன் கனிமொழியை வரவேற்ற பழங்குடிகள், தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

`விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில், நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, தமிழகம் முழுவதும் பிரசார பயணத்தை மேற்கொண்டுவருகிறார்.

கனிமொழி
கனிமொழி

நீலகிரி மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்திருந்த கனிமொழி, எல்லநள்ளி பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் தோட்டத்துக்குள் இறங்கிய அவர், தொழிலாளர்களுடன் தேயிலையைப் பறித்தார்.

மேலும், அதே பகுதியிலுள்ள காளான் வளர்ப்பு பண்ணைக்கு சென்ற கனிமொழி, காளான் தொழிலிலுள்ள இடர்ப்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். ஊட்டியிலுள்ள தி.மு.க அலுவலகத்தில் இருக்கும் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கனிமொழி
கனிமொழி

ஊட்டியிலுள்ள ஒரு தனியார் உணவகத்தில் பழங்குடி மக்களைச் சந்தித்து கலந்துரையாட சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். தங்களின் பாரம்பர்ய ஆடல் பாடல்களுடன் கனிமொழியை வரவேற்ற பழங்குடிகள், தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். நிகழ்வுக்குப் பிறகு பழங்குடிகளுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.

ஊட்டி ஆனந்தகிரி அரங்கில் மாலை நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில், படுகர் இன மக்களின் பாரம்பர்ய உடையில் தோன்றிய கனிமொழி, தொண்டர்களின் குறைகளைக் கேட்டறிந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ``செல்லுகின்ற இடமெல்லாம் தி.மு.க-வுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது.

கனிமொழி
கனிமொழி

வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க-வின் வெற்றி உறுதியாகியிருக்கிறது. புதிய கட்சிகள் எங்களது வெற்றியை எந்த வகையிலும் பாதிக்காது. ஐந்து மாதங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்" என முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு