Published:Updated:

தடைகளை மீறி ஜெயித்த டாக்டர் சுப்பையா வழக்கு!

டாக்டர் சுப்பையா
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் சுப்பையா

ஏழு பேருக்கு தூக்குத் தண்டனையும், இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்

தடைகளை மீறி ஜெயித்த டாக்டர் சுப்பையா வழக்கு!

ஏழு பேருக்கு தூக்குத் தண்டனையும், இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்

Published:Updated:
டாக்டர் சுப்பையா
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் சுப்பையா

தமிழகத்தையே உலுக்கிய டாக்டர் சுப்பையா கொலை வழக்கில், குற்றவாளிகள் ஏழு பேருக்கு தூக்குத் தண்டனையும், இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்திருக்கிறது சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம். நீண்டகாலம் கழித்து நீதி கிடைத்திருக்கும் இந்த வழக்கு சந்தித்த முட்டுக்கட்டைகள் கொஞ்சநஞ்சமல்ல!

தடைகளை மீறி ஜெயித்த டாக்டர் சுப்பையா வழக்கு!

கடந்த 2013, செப்டம்பர் 14-ம் தேதி சென்னை அண்ணாமலைபுரத்தில், பிரபல நரம்பியல் மருத்துவரான சுப்பையா கூலிப்படையினரால் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின் அடிப்படையில், அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சம்பவம் தொடர்பாக பொன்னுசாமி, மேரி புஷ்பம், பாசில், வில்லியம், போரிஸ், ஐயப்பன் உள்ளிட்ட 10 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஐயப்பன் அப்ரூவராக மாறி வாக்குமூலம் வழங்கியதுதான், வழக்கின் முக்கிய ஆதாரமாக மாறியது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் இருவர் வழக்கறிஞர்கள்; இருவர் ஆசிரியர்கள்; ஒருவர் அரசு மருத்துவர். ஒருவர் பொறியாளர். மற்றவர்கள் டிகிரி மற்றும் டிப்ளோமா படித்தவர்கள். வழக்கு தொடர்பாக 57 அரசு சாட்சிகள், 173 அரசு தரப்பு ஆவணங்கள், 42 அரசு தரப்பு சான்று பொருள்கள், மூன்று எதிர்த் தரப்பு சாட்சிகள், ஏழு ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. ஜூனியர் விகடனும் இந்த வழக்கு விசாரணை குறித்து தொடர்ச்சியாக எழுதிவந்தது.

410 நீதிமன்ற விசாரணை நாள்களைக் கடந்து, இந்த வழக்கில் ஆகஸ்ட் 4-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேருக்கு தூக்குத் தண்டனையும், இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி.

விஜயராஜ்
விஜயராஜ்

சவாலான இந்த வழக்கை நடத்தி, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறார் அரசு வழக்கறிஞர் விஜயராஜ். அவர் நம்மிடம், “உண்மையிலேயே இது சவாலான வழக்குதான். குற்றம்சாட்டப் பட்டவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் சுமார் 50 வழக்கறிஞர்கள் ஆஜராகி பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். வழக்கை தாமதப்படுத்த ஏராளமான முயற்சிகள் நடந்தன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால், கொரோனா காலத்திலும் இந்த ஒரு வழக்கு மட்டும் நேரடி விசாரணையாக தினமும் நடைபெற்றது. பல்வேறு தடைகளைத் தாண்டித்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism