Published:Updated:

சுஷ்மாவும் நானே... சுதீஷும் நானே... பெண்களை வீழ்த்திய இணைய வேடதாரி!

பெண்களை வீழ்த்திய இணைய வேடதாரி!
பிரீமியம் ஸ்டோரி
பெண்களை வீழ்த்திய இணைய வேடதாரி!

நம்முடைய திருமணத்தால், உன் வீட்டிலும், என் வீட்டிலும் நிம்மதி போய் விடும். அதனால் நாம் பிரிந்துவிடுவோம்

சுஷ்மாவும் நானே... சுதீஷும் நானே... பெண்களை வீழ்த்திய இணைய வேடதாரி!

நம்முடைய திருமணத்தால், உன் வீட்டிலும், என் வீட்டிலும் நிம்மதி போய் விடும். அதனால் நாம் பிரிந்துவிடுவோம்

Published:Updated:
பெண்களை வீழ்த்திய இணைய வேடதாரி!
பிரீமியம் ஸ்டோரி
பெண்களை வீழ்த்திய இணைய வேடதாரி!

சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகஸ்ட் 26-ல் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு, ‘என்னால நிம்மதியா இருக்க முடியலை, இருக்கவும் முடியாது. என்னோட இந்த முடிவுக்கு சுஷ்மா காரணமில்லை. சுதீஷ்னு ஒரு பையனை நான் லவ் பண்ணினேன். அவன் என்னை ஏமாத்திட்டான். அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுங்க’ என்று கண்ணீர்க் கடிதம் எழுதிவைத்திருந்தார் செல்வி. காதல் தோல்வி என்பது கடிதத்தின் மூலம் புரிந்தாலும், ‘இதில் சுஷ்மா என்ற பெண்ணை ஏன் குறிப்பிட்டிருக்கிறார் அவர்?’ என்று குழம்பினர் போலீஸார்.

தற்கொலை செய்துகொண்ட செல்வி (20), அருகிலுள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி படித்துவந்தார். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் மூழ்கிக்கிடந்த செல்விக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ‘சுஷ்மா’ என்ற பெயரில் பெண் (!) ஒருவர் அறிமுகமானார். சுஷ்மா, தன்னைக் கல்லூரி மாணவி என்று செல்வியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு இருவரும் செல்போன் சாட்டிங்கிலும் போனிலும் பேசி நட்பாகப் பழகிவந்தனர். செல்வியின் குடும்பப் பின்னணி களைத் தெரிந்துகொண்ட சுஷ்மா, திடீரென ஒருநாள், ``நாம் நேரில் சந்திக்கலாம்’’ என்று அழைத்திருக்கிறார். நேரில் போனபோதுதான், ‘சுஷ்மா’ என்ற பெயரில்... பெண் குரலில்... தன்னிடம் பேசிப் பழகியது, ‘சுதீஷ்’ என்ற ஆண் என்பது செல்விக்குத் தெரிந்திருக்கிறது. அதிர்ச்சி யடைந்தாலும் சுதீஷின் அன்பு, அக்கறை காரணமாக நட்பைத் தொடர்ந்தார் செல்வி. அதன் பிறகு அந்த நட்பு காதலாகவும் மாறியுள்ளது.

சுஷ்மாவும் நானே... சுதீஷும் நானே... பெண்களை வீழ்த்திய இணைய வேடதாரி!

இதையடுத்து இந்த ஜோடி பீச், பார்க், தியேட்டர் என வீட்டுக்குத் தெரியாமல் ஊர் சுற்றத் தொடங்கியது. ``உன்னை நான் திருமணம் செய்துகொள்கிறேன்’’ என்று ஆசை வார்த்தைகளைக் கூறிய சுதீஷ், செல்வியுடன் சிலமுறை பாலியல் உறவும் வைத்திருக்கிறான். ‘வேலை’ முடிந்த பிறகு சுதீஷின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்திருக்கிறது. “ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?” என்று செல்வி கேட்டபோது, “உன்னைத் திருமணம் செய்துகொள்ள எனக்கு ஆசைதான்... ஆனால் உன்னோடு சந்தோஷமாக வாழ என்னிடம் பணமில்லை” என சென்டி மென்ட்டாகச் சொல்லியிருக்கிறான். அவனுக்கு ஆறுதல் கூறிய செல்வி, “நாம் இருவரும் வேலைக்குப் போய் சம்பாதிப்போம், சந்தோஷ மாக வாழலாம்” என்று சொல்லி நம்பிக்கை யூட்டியிருக்கிறார். இதை எதிர்பார்க்காத சுதீஷ், “என் வீட்டில் சாதி பார்ப்பார்கள்... இந்தச் சமூக மும் நம்மை ஏற்றுக்கொள்ளாது” என்று அவரைக் கழற்றிவிடுவதற்கான அடுத்த அஸ்திரத்தை வீசியிருக்கிறான். ஆனாலும், செல்வி விடுவதாக இல்லை.

திடீரென ஒருநாள், “நம்முடைய திருமணத்தால், உன் வீட்டிலும், என் வீட்டிலும் நிம்மதி போய் விடும். அதனால் நாம் பிரிந்துவிடுவோம்” எனச் சொல்லி, செல்வியிடமிருந்து முற்றாக விலகியிருக்கிறான் சுதீஷ். விரக்தியடைந்த செல்வி, கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். செல்வியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக சுதீஷை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத் துள்ளனர். சுதீஷின் பின்னணி குறித்து விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இதுகுறித்து பல்லாவரம் போலீஸாரிடம் பேசினோம்.

“தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு செல்வி எழுதிய கடிதத்தைவைத்தே சுதீஷைப் பிடிக்க முடிந்தது. அந்தக் கடிதத்தில் `நாங்க மூணு வருஷம் லவ் பண்ணினோம். சுதீஷ் என்னை ஏமாத்திட்டான். அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுங்க. என்னோட போன்ல சுதீஷ் தொடர் பான ரெக்கார்டு இருக்கு. அதையும் போலீஸ்கிட்ட கொடுங்க. என்னை மன்னிச்சிடுங்க’ என்று எழுதிவைத்திருந்தார். கூடவே போன் மூலம் தன் அண்ணனுக்கு ஆடியோ ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தார். அதிலும் சுதீஷ், சுஷ்மாவாகப் பேசிப் பழகி ஏமாற்றியதை தெளிவாகச் சொல்லியிருந்தார். அதனடிப்படையில் சுதீஷிடம் விசாரித்தபோது அவன் செல்வியை மட்டுமல்ல, மேலும் பல பெண்களை ஏமாற்றியிருக்கிறான் என்று தெரியவந்தது.

சுஷ்மாவும் நானே... சுதீஷும் நானே... பெண்களை வீழ்த்திய இணைய வேடதாரி!

சுதீஷ், ப்ளஸ் டூ முடித்துவிட்டு கேட்டரிங் தொழில் செய்துவருபவன். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் `சுஷ்மா’, `ரேஷ்மா’ என்று பல பெயர்களில் பெண்களிடம் பழகி ஒரு கட்டத்தில் அவர்களை ஏமாற்றுவதை வழக்கமாக வைத் திருந்திருக்கிறான். இவனைப் பெண் என்று நம்பிப் பழகிய பெண்களிடம் நெருக்கமான உறவை ஏற்படுத்திய பிறகே, தான் ஓர் ஆண் என்பதை வெளிப்படுத்தி அவர்களைக் காதல் வலையில் வீழ்த்துவான். பெண்ணாக நடிக்கும் போது பெண் குரலில் பேசி, பழகும் பெண்களின் அந்தரங்க விஷயங்களையும் அறிந்துகொள்வான். அவனோடு பழகும் பெண்களிடம் ‘உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறேன்’ என்று கூறி நேரில் சந்திக்கும்போது தன்னை வெளிப்படுத் திக்கொள்வான். சிலர் அதன் பிறகு விலகி விடுவார்கள். சிலர் இவ்வளவு விஷயத்தை ஷேர் செய்த பிறகு எப்படி விலகுவது என்று தயங்கியே அவன் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். இப்படி சுதீஷால் எத்தனை பெண்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சுதீஷின் செல்போன், அவனின் சமூக வலைதளப் பக்கங்களை ஆய்வு செய்துவருகிறோம்” என்றனர்.

இணையத்தில் பேசிப்பழகும் அறிமுகமற்ற நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை, செல்வியின் மரணம் மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறது!