ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வீட்டிலேயே தயாரிக்கலாம்... டபுள் லேயர் மாஸ்க்!

டபுள் லேயர் மாஸ்க்!
பிரீமியம் ஸ்டோரி
News
டபுள் லேயர் மாஸ்க்!

துணிகள் பயன்படுத்தி மாஸ்க் தயாரிக்கிறீர்கள் என்றால் துணியை முதலில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து காயவைக்க வேண்டும்.

கொரோனாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் தவிர்க்கவே முடியாத ஒன்று. ஒவ்வொருவரும் வீட்டிலேயே எளிமையான முறையில் டபுள் லேயர் மாஸ்க் தயாரித்துக்கொள்ள கற்றுத்தருகிறார் இல்லத்தரசி காஞ்சனா.
வீட்டிலேயே தயாரிக்கலாம்... டபுள் லேயர் மாஸ்க்!
வீட்டிலேயே தயாரிக்கலாம்... டபுள் லேயர் மாஸ்க்!
வீட்டிலேயே தயாரிக்கலாம்... டபுள் லேயர் மாஸ்க்!
ராஜேஷ்
ராஜேஷ்

பழைய துணியில் மாஸ்க் தயாரிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து பொது மருத்துவர் ராஜேஷ் பகிர்ந்த தகவல்கள்...

``துணிகளில் தயாரிக்கப்படும் டபுள் லேயர் மாஸ்க்குகள் பாதுகாப்பானவையே. அதிக கூட்டம் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது டபுள் மாஸ்க் அணிய வேண்டும். வீட்டில் உள்ள பழைய துணிகள் பயன்படுத்தி மாஸ்க் தயாரிக்கிறீர்கள் என்றால் துணியை முதலில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து காயவைக்க வேண்டும். அதன் பின் வெந்நீர் இருக்கும் பாத்திரத்தின் மேல் பகுதியில் அந்தத் துணியைக் கட்டி, சிறிது நேரம் ஸ்டீமிங் செய்து பிறகு மாஸ்க் தயாரிக்கலாம்.

மாஸ்க் தயாரித்த பின்பும் ஒருமுறை கிருமி நாசினி கொண்டு அலசி வெயிலில் காயவைத்துப் பயன் படுத்துவது ஆரோக்கிய மானது.''