Published:Updated:

புதிய பகுதி! - 1: சமையல் சந்தேகங்களுக்கு செஃப் தாமு தரும் தீர்வுகள்

செஃப் தாமு
பிரீமியம் ஸ்டோரி
News
செஃப் தாமு

கெட்டுப்போகாத தேங்காய் சட்னி... மணக்கும் ஃபில்டர் காபி... பூசணம் பிடிக்காத ஊறுகாய்...

#Utility

படங்கள்: சந்தோஷ் ராஜ்

புதிய பகுதி! - 1: சமையல் சந்தேகங்களுக்கு செஃப் தாமு தரும் தீர்வுகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இட்லி மிருதுவாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

இட்லி மிருதுவாக வருவதற்கு 4 ஆழாக்கு இட்லி அரிசிக்கு ஓர் ஆழாக்கு உளுந்து மற்றும் 2 டீஸ்பூன் வெந்தயம் என்ற அளவில் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். அரிசி 8 மணி நேரமும் உளுந்து, வெந்தயம் நான்கு மணி நேரமும் கண்டிப்பாக ஊற வேண்டும். அரிசியைக் கரகரப்பாக ஆட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். உளுத்தம்பருப்பை நன்றாகப் பஞ்சுபோல் ஆட்டி எடுக்க வேண்டும். அதற்காக நிறைய தண்ணீரை ஊற்றக் கூடாது. அரிசி, உளுந்தை காலை 10 மணி அளவில் ஊறவைத்தால், மாலை 6 மணிக்குள் ஆட்டி எடுத்து விட வேண்டும். இதில் கல் உப்பைச் சேர்த்து நன்றாகக் கரைத்து வைக்க வேண்டும். அவரவர் கைகளின் சூட்டுக்கு ஏற்ப மாவு புளிப்புச் சுவையை அடையும். உப்பை கரண்டியில் போட்டு கிளறி வைக்கக் கூடாது.

புதிய பகுதி! - 1: சமையல் சந்தேகங்களுக்கு செஃப் தாமு தரும் தீர்வுகள்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காய்கறிகளை பொடியாக நறுக்கி பொரியல் செய்கிறார்கள் இப்படிச் செய்வது உடலுக்கு சத்து சேர்க்குமா?

காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கி, தண்ணீரில் கழுவிச் சாப்பிடுவதற்கு அவற்றைச் சாப்பிடாமலேயே இருக்கலாம். காய்கறிகளை நறுக்குவதற்கு முன்பாகவே கழுவிவிட வேண்டும். காய்கறிகளை பெரிய துண்டுகளாகப் போட்டு நன்றாகச் சமைத்த பிறகு, அவற்றை மென்று சாப்பிடும்போதுதான் அவற்றின் சத்துகள் நம் உடலில் சேரும்.

புதிய பகுதி! - 1: சமையல் சந்தேகங்களுக்கு செஃப் தாமு தரும் தீர்வுகள்

வெட்டி வைத்து விற்கப்படும் காய்கறிகளை கடைகளில் விற்கிறார்கள். இவற்றைப் பயன்படுத்தினால் எதுவும் பாதிப்பு ஏற்படுமா?

அவசர உலகில் சிலர் ரயில்வே ஸ்டேஷன்களில், பஸ் ஸ்டாண்டுகளில், கடைகளில் காய்கறிகளை வெட்டி பாலிதீன் பைகளில் போட்டு விற்கிறார்கள். அவற்றை வாங்கிப் பயன்படுத்துவது நல்லதல்ல. ஏனென்றால், அவர்கள் எந்த வகையில் சுத்தப்படுத்தி இருப்பார்கள் என்பதும் காய்கறிகள் கெடாமல் இருப்பதற்கு எப்படிப் பதப்படுத்துகிறார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. காய்கறிகளை முழுதாக வாங்கிப் பயன்படுத்துவதுதான் ஆரோக்கியமானது. காய்கறிகளை வாரத்துக்கு ஒருமுறை பை நிறைய வாங்கி வந்து, ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவதைவிட இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ஃப்ரெஷ்ஷாக வாங்கிப் பயன்படுத்துவதுதான் சிறந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிய பகுதி! - 1: சமையல் சந்தேகங்களுக்கு செஃப் தாமு தரும் தீர்வுகள்

ஆப்பம் மிருதுவாக வர என்ன செய்ய வேண்டும்?

ஆப்பத்துக்கு மாவு தயாரிக்கும்போது ஒரு டம்ளர் பச்சரிசி, ஒரு கைப்பிடி உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் இவற்றை 4 மணிநேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கைப்பிடி தேங்காய்த் துருவலையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் ஆப்பம் மிருதுவாக இருக்கும்; கடாயிலும் ஒட்டாது. அரைத்த பிறகு, இதில் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து, கரைத்து வைக்க வேண்டும். மறுநாள் காலை, அடுப்பைப் பற்றவைத்து, ஆப்பம் சுடும் கடாயை வைக்க வேண்டும். வெட்டிய அரை வெங்காயத்தை லேசாக எண்ணெயில் தோய்த்து கடாயில் தடவி, மாவை வார்த்தால் ஆப்பம் மிருது வாகவும் சுவையாகவும் இருக்கும்.

புதிய பகுதி! - 1: சமையல் சந்தேகங்களுக்கு செஃப் தாமு தரும் தீர்வுகள்

பீங்கான் தட்டு, கப், பாத்திரங்கள் போன்றவற்றை ஒரு சிலர் வீடுகளில் பயன்படுத்துகிறார்கள். பீங்கான் பொருள்களைப் பயன்படுத்தும்போது உணவின் சுவை கூடுமா?

சிலரின் வீடுகளில் பீங்கான் தட்டுகளில் உணவு வகைகளைப் பரிமாறுவார்கள். அவற்றைச் சுத்தப்படுத்தி வைப்பது எளிதானது என்பதால், அவ்வாறு பரிமாறுவார்கள். தேநீர் போன்றவற்றை பீங்கான் பாத்திரங்களில், கப்புகளில் பரிமாறுவது வழக்கம். தரமான பீங்கான் பாத்திரங்கள், தட்டுகள் போன்றவை உணவுப் பொருள்களின் சுவை கெடாமல் அப்படியே பத்திரப்படுத்தி நமக்குத் தரும். தரமற்ற பீங்கானில் தயாரிக்கப்பட்ட உணவின் சுவை குறைவதை நம்மால் உணர முடியும். தேநீர் போன்றவற்றின் சுவை மாறுபடும்.

புதிய பகுதி! - 1: சமையல் சந்தேகங்களுக்கு செஃப் தாமு தரும் தீர்வுகள்

ஊறுகாய் போடும்போது, பூசணம் பிடித்துக் கெட்டுப்போய்விடுகிறது... இதற்கு என்னதான் தீர்வு?

மாவடு, நாரத்தை, எலுமிச்சை ஊறுகாய்களை பிளாஸ்டிக் பொருள்களில் போடக் கூடாது. கண்ணாடி பாத்திரத்திலோ, பீங்கான் பாத்திரத்திலோதான் சேர்க்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அவை கெட்டுப் போகாமல் இருக்கும். தனித்தனியாக வறுத்துப் பொடி செய்த கடுகு, வெந்தயத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை நறுக்கிவைத்த ஆவக்காயுடன் சேர்த்து, கல் உப்பைப் போட்டுக் குலுக்கி வைக்கவும். இதில் நல்லெண்ணெய் ஊற்றிக் குலுக்கி விடவும். ஜாடியின் மேலே துணியால் மூடி கட்டி வைத்துவிட்டால் ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். கழுவி சுத்தமாகத் துடைத்த மரக்கரண்டியைப் பயன்படுத்தி தேவைப்படும்போது எடுத்து, சிறிய ஜாடிக்கு மாற்றிப் பயன்படுத்தலாம்.

புதிய பகுதி! - 1: சமையல் சந்தேகங்களுக்கு செஃப் தாமு தரும் தீர்வுகள்

திடீரென வரும் விருந்தினர்களுக்கு ஃபில்டர் காபி கொடுக்கும்போது சில நேரங்களில் சுவை குறைவாக இருக்கிறது. மணமுள்ள ஃபில்டர் காபி தயாரிப்பது எப்படி?

ஃபில்டரில் 4 டீஸ்பூன் காபித்தூளுக்கு, அரை டம்ளர் கொதிக்கும் தண்ணீர் சேர்க்க வேண்டும். காபி போடும்போது கால்பங்கு டிகாக்‌ஷ னுடன், மூன்று பங்கு கொதிக்கும் பால் கலந்து சர்க்கரையை அவரவர் தேவைக்கேற்ப சேர்த்துக்கொண்டால் ஃபில்டர் காபி மிகவும் சுவையாக இருக்கும். டிகாக்‌ஷன் காலை 5 மணிக்குத் தயாரித்தால் அதைக் காலை 8.30 மணிக்குள் பயன்படுத்திவிட வேண்டும். காபியின் மணம் மாறாது. சுவையாகவும் இருக்கும். அதே காபி டிகாக்‌ஷனை நீண்ட நேரம் வைத்துப் பயன்படுத்தினால் சுவை குறைவாகத்தான் இருக்கும். இரண்டாவது முறை காபி போடும்போது பால் நல்ல சூட்டில் இருக்க வேண்டும். பாலில் ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்க வேண்டும். தேநீருக்கு ஒன்றுக்கு மூன்று என்ற அளவில்கூட எடை கட்டலாம். காபியில் அதிகம் தண்ணீர் கலந்தால் சுவையில்லாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

புதிய பகுதி! - 1: சமையல் சந்தேகங்களுக்கு செஃப் தாமு தரும் தீர்வுகள்

சாதம் குழையாமலும், விதைவிதையாக இல்லாமலும் சாப்பிடும் பதத்தில் பதமாக வடிப்பதற்கு தண்ணீர், அரிசி எந்த அளவு வைக்க வேண்டும்?

சாதம் வடிக்கும் பாத்திரத்தின் கழுத்துவரை தண்ணீர் வைத்துக் கொதிக்க விட வேண்டும். ஆழாக்கு அரிசிக்கு 5 ஆழாக்கு தண்ணீர் வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்த பிறகு, அரிசியைத் தண்ணீரில் போட வேண்டும். அதற்கு முன்பாக, அரிசியை 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைப்பது நல்லது. பச்சரிசி என்றால் 15 நிமிடங்களில் வெந்துவிடும். புழுங்கலரிசி வேக இரண்டு மூன்று நிமிடங்கள் கூடுதலாக ஆகலாம். கொதி வரும்போது அரிசியைச் சேர்த்து ஒரு முறை அல்லது இரண்டு முறை கிளறினால் போதும். அடிக்கடி கிளறிக்கொண்டிருக்க வேண்டாம்.

புதிய பகுதி! - 1: சமையல் சந்தேகங்களுக்கு செஃப் தாமு தரும் தீர்வுகள்

தேங்காய் சட்னி அரைக்கும்போது பொட்டுக்கடலை, தேங்காய், மிளகாய் ஆகியவற்றை எந்த அளவில் சேர்க்க வேண்டும்? நீண்ட நேரத்துக்கு தேங்காய் சட்னி கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

100 கிராம் தேங்காய்த் துருவலுக்கு 50 கிராம் பொட்டுக்கடலை 2 பச்சை மிளகாய் வைத்து அரைத்தால் சுவையாக இருக்கும். இரண்டு பற்கள் பூண்டு அல்லது சிறிதளவு இஞ்சித் துண்டைச் சேர்த்தால், மேலும் சுவை கூடும். பொட்டுக்கடலை அதிகமானால், தேங்காய் சட்னி சுவையாக இருக்காது. தேங்காய் சட்னி கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்றால், ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பயன்படுத்த வேண்டும். சட்னியைப் பயன்படுத்தும்போது கண்டிப்பாக ஸ்பூன் அல்லது கரண்டியைத்தான் பயன்படுத்த வேண்டும். ஸ்பூனைக் கழுவிவிட்டு மெல்லிய துணியால் துடைத்த பிறகே, பயன்படுத்த வேண்டும். விரலில் அல்லது ஸ்பூனில் ஈரம் பட்டால் சட்னி கெட்டுப் போய்விடும்.

பூஜையின்போது செம்புப் பாத்திரத்தில் இருக்கும் தேங்காய் தண்ணீரைக் குடிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். உண்மையா?

செம்புப் பாத்திரங்களில் தண்ணீர், துளசித் தீர்த்தம் தவிர, மற்றவற்றை வைக்கக் கூடாது. செம்புப் பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் செம்புப் பாத்திரத்துக்கு ஈயம் பூசுதல் என்றொரு வழக்கம் உண்டு. அப்படி ஈயம் பூசிய பிறகுதான், செம்புப் பாத்திரங்களை சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். ஈயம் பூசுதல் இப்போது பழக்கத்தில் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. அதனால் அலுமினியம், இண்டேலியம், எவர் சில்வர் போன்ற பாத்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். செம்புப் பாத்திரங்களில் தண்ணீர் வைத்து அருந்துவதைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது.