Published:Updated:

அத்துமீறுபவர்கள்? - இதோ அவர்களின் அடையாளங்கள்!

அத்துமீறுபவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அத்துமீறுபவர்கள்

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பாலியல் மருத்துவர் காமராஜ்

பாலியல் வன் கொடுமை களுக்கு ஆளான குழந்தைகளிடம் பல பெற்றோரும் கேட்கும் கேள்வி இது... ‘அவன் இவ்வளவு தூரம் உன்கிட்ட தப்பா நடந்துக்கிற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தே... ஆரம்பத்திலேயே எங்ககிட்ட சொல்லியிருக்கலாம்ல?’

 காமராஜ்
காமராஜ்

மேலோட்டமாகப் பார்த்தால் இது நியாயமான கேள்வியாகத் தெரியலாம். ஆனால், பாலியல் வன்முறையாளர்கள் அப்படியெல்லாம் முதல் சந்திப்பி லேயே தங்கள் உண்மை முகத்தை யாருக்கும் காட்டுவதில்லை. குறிவைக்கப்பட்ட குழந்தைகளிடம்தாம் நினைத்ததைச் செயல்படுத்தி முடிப்பதைப் பற்றிய இவர்களது ப்ளூ பிரின்ட் `வேற லெவ'லில் இருக்கும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. கயவர்களைக் கண்டுபிடிப்பதொன்றும் அவ்வளவு பெரிய விஷயமல்ல... கவனித்தால் மாட்டிக்கொள்வார்கள் என்பதை உணர்த்தவே இந்த அத்தியாயம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
‘குட் டச் பேட் டச்’ வித்தியாசத்தைச் சிறுவயதிலிருந்தே புரியவைக்க வேண்டும்.

குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுபவர்கள் ஒரே நாளில் அதற்குத் தயாராவதில்லை. அவர்களுக்குள் அந்த எண்ணம் மெள்ள மெள்ள வளர்ந்து வெடிக்கும். வீட்டுக்குள் அல்லது பள்ளிக்கூடம் போன்ற வெளியிடங்களில் இருக்கும் குழந்தைகளிடம் மெதுவாக நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள் இந்த நபர்கள். அந்த நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இவர்களுக்குச் சில நாள்கள் ஆகும். குழந்தைகள் அந்த நபர்களோடு பழக வேண்டும். அவருடன் இருப்பதை மனத்தளவில் ஏற்க வேண்டும். குழந்தை அதற்குத் தயாராக அவகாசம் கொடுப்பார்கள். மிக மோசமான அத்துமீறல் இது. ஆனாலும், மற்ற எல்லா உறவுகளையும் போல இந்த நெருக்கமும் வளர்வதற்குக் குறிப்பிட்ட காலம் எடுக்கும். குழந்தைகளிடம் அத்துமீற முயலும் அந்த நபர் முதலில் அந்தக் குழந்தைகளை மிகவும் ஸ்பெஷலானவர்களாக நடத்துவார்கள், குழந்தைகளையும் அப்படி உணரச்செய்வார்கள். குறிப்பிட்ட குழந்தையை மரியாதைக்குரிய நபராக நடத்துவார்கள். குழந்தைக்குத் தேவையான அனைத்தையும் செய்வதன் மூலம் நெருக்கத்தை வளர்ப்பார்கள். பெற்றோர் இதை உணர்ந்தால்தான் இந்த அரக்கர்களிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்து மீறுபவர்களைச் சில அடையாளங்களை வைத்துக் கண்டுபிடிக்கலாம்.

`பிரிடேட்டர்' எனப்படும் இந்த நபர் முதல் கட்டமாக யாரை சுலபமாக அணுக முடியும் என்பதை அறிய முயல்வார். பெற்றோரிடம் நல்ல உறவுமுறையில் இருக்கும், புத்திசாலியான குழந்தையை அணுகுவது இவர்களுக்குச் சிரமம். பெற்றோரால் ஒதுக்கப்படுகிற குழந்தைகள், பெற்றோரின் அன்புக்கு ஏங்கும் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆசிரியர்களால் ஒதுக்கப்படும் குழந்தைகள் போன்றோரை அணுகுவது சுலபம். ஏற்கெனவே அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கிக்கொண்டிருக்கும் இவர்களைப் போன்ற குழந்தைகள் இந்த அரக்கர்களிடம் எளிதில் ஒட்டிக்கொள்வார்கள்.

அத்துமீறுபவர்கள்
அத்துமீறுபவர்கள்

பள்ளிக்கூடத்திலும் வீட்டிலும் இருப்ப வர்கள், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் இருப்பவர்கள், வீட்டில் இருக்கும் பெரியவர்கள், மூத்த மாணவர்கள் என இவர்கள் யாராகவும் இருக்கலாம். இவர்களிடம் சில பொதுவான குணாதிசயங்களைப் பார்க்கலாம்.

1. நட்பும் இரக்கமும்

  • குழந்தைகளிடம் மிகவும் நட்பாக நடந்துகொள்வார்கள்.

  • குழந்தைகளின் குறைகளைக் கேட்டு இரக்கப்படுபவர்களாக இருப்பார்கள்.

  • மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இத்தகைய பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அதிலும் பெண் குழந்தைகளுக்கு இது இன்னும் அதிகம். அதைப்போல உடல்நலம் குன்றி, தன்னைக் கவனித்துக்கொள்ள இயலாத குழந்தைகளையும் எளிதில் நெருங்கி விடுவார்கள்.

  • `யாரேனும் தவறாக நெருங்கினாலோ தவறாகத் தொட முயன்றாலோ `நோ' சொல்ல வேண்டும்' எனக் குழந்தைகளுக்கு ஏற்கெனவே கற்றுக்கொடுத்திருந்தால், இத்தகைய சம்பவங்கள் நிகழும்போது குழந்தையிடம் மிகப்பெரிய மாற்றத்தைப் பார்க்க முடியும். இப்படி எதுவுமே கற்றுக்கொடுக்கப்படாத குழந்தைகள் பாலியல் வன்முறையாளர்களிடம் எளிதில் சிக்கிக்கொள்வார்கள்.

இந்த விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகளின் சிறுவயதிலிருந்தே இதை ஆரம்பிக்க வேண்டும். ‘குட் டச் பேட் டச்’ வித்தியாசத்தைச் சிறுவயதிலிருந்தே புரிய வைக்க வேண்டும். குழந்தைகள் யாருடன் இருக்கிறார்கள், என்ன விளையாடுகிறார்கள், அவர்களைப் பார்த்துக்கொள்ளும் `பேபி சிட்டர்ஸ்' எப்படி நடந்து கொள்கிறார்கள் என எல்லாவற்றையும் பெற்றோர் கவனிக்க வேண்டும்.

அத்துமீறுபவர்கள்
அத்துமீறுபவர்கள்

2. நெருங்குதல்

சம்பந்தப்பட்ட நபர் தன் இலக்கு யார் என்பதை முடிவுசெய்துவிட்டு அந்தக் குழந்தையை நெருங்குவார். அந்தக் குழந்தையைப் பலவிதங்களில் கவர முயற்சி செய்வார். குழந்தையிடம் ‘நீதான் என் பெஸ்ட் ஃபிரெண்டு’ என்று அடிக்கடி சொல்வார். குழந்தைகள் ஆசைப்படுகிற விஷயங்களை நிறைவேற்றுவார். குழந்தைகளுடன் விளையாடுவார். இதற்கு ஏராளமான நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும். தன்னைவிட வயதில் பெரியவர் தனக்காக இத்தனை விஷயங்களைச் செய்கிறாரே என்று அந்தக் குழந்தை சந்தோஷப்படும். பல நேரங்களில் பல பெற்றோர்கள் தம் குழந்தையை யாரோ ஒருவர் பத்திரமாகப் பார்த்துக்கொள்வதாக நினைத்து இதன் பின்னாலுள்ள பயங்கரத்தை கவனிக்கத் தவறிவிடுவார்கள். மற்ற குழந்தைகள் விளையாட்டுத் துணைக்காக இந்தக் குழந்தையைத் தேடுவார்கள். ஆனால், அந்தக் குழந்தை, வயதில் பெரிய ஒருவருடன் இருப்பதைப் பார்த்துவிட்டு அவர்களும் அந்தக் குழந்தையைத் தவிர்த்துவிட்டு விளையாட்டைத் தொடர ஆரம்பிப்பார்கள்.

குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கும். பெற்றோரிடம் சொல்லவும் பயமாக இருக்கும்.

3. ஆளுமைக்குள் கொண்டுவருதல்

குழந்தையை முற்றிலுமாக தன் ஆளுமைக் குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டு வருவது. அதாவது, அந்தக் குழந்தைக்கு யாருடைய உதவியும் கிடைக்காத அளவுக்குத் தனிமைப்படுத்தி, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள். அந்தக் குழந்தையிடம் தவறாக நடந்துகொள்ளும்போது அதற்கு யாருடைய உதவியும் கிடைக்காமல் இருக்க முன்கூட்டியே திட்டமிட்டு இதைச் செய்வார்கள்.

பெற்றோர்களிடமும் அந்தக் குழந்தையைத் தேடுபவர்களிடமும் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தி விடுவார்கள்.

4. தேவைகளை நிறைவேற்றுதல்

குழந்தைக்கு விலையுயர்ந்த அன்பளிப்பு களை வாங்கித் தருவது, ஸ்பெஷலான இடங்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு விஷயங்களைச் செய்வார்கள். இவையெல்லாம் அந்தக் குழந்தையிடம் உடல் மற்றும் மனரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமன்றி குழந்தை தன் தேவைகளுக்காக தொடர்ந்து தன்னைச் சார்ந்திருக்கும் நிலையையும் ஏற்படுத்துவார்கள்.

5. ரகசியம் காக்கப் பழக்குதல்

ரகசியத்தைப் பாதுகாக்க குழந்தைகளைப் பழகுவார்கள். நடப்பதைக் குழந்தை தன் பெற்றோரிடம் அப்படியே சொன்னால் பிரச்னையாகிவிடும் என்பதால், ‘நான் உனக்கு ஒரு கிஃப்ட் கொடுக்கிறேன். அதை யாரிடமும் சொல்லாதே’ என்ற மாதிரி சில விஷயங்களைச் செய்து, குழந்தையை டெஸ்ட் செய்வார்கள்; தயார்படுத்துவார்கள். குழந்தை தான் சொன்னபடி செய்கிறதா என்பதையும் டெஸ்ட் செய்வார்கள். இதெல்லாம் சரியாக நடந்தால் அடுத்தகட்டத்துக்கு நகர்வார்கள். இந்த நிலையில் குழந்தைகள் பெரும்பான்மை நேரத்தை இந்த நபர்களுடன் செலவழிப்பார்கள். அவர்கள் தவறாக நடந்துகொள்ளும்போது குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கும். பெற்றோரிடம் சொல்லவும் பயமாக இருக்கும். பெற்றோரோ, வேறு யாருமோ இதைப் பற்றியெல்லாம் முன்கூட்டியே சொல்லிக் கொடுக்காததால் அந்தக் குழந்தையும் பாலியல் வன்முறையாளர் சொல்வதையெல்லாம் கேட்க ஆரம்பித்துவிடும். அந்த நபர்கள் சில நேரங்களில் குழந்தைகளை மிரட்டவும் ஆரம்பிப்பார்கள்

‘இதை நீ வெளியில் சொன்னால் நீ இறந்து விடுவாய்... உன் பெற்றோர் இறந்து விடுவார்கள்... நான் இறந்து விடுவேன்’ என்றெல்லாம் மிரட்டுவார்கள். அதாவது, அந்தக் குழந்தைக்கு பயத்தை ஏற்படுத்தும் விஷயங்களை மிரட்டலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள். ஏற்கெனவே ரகசியத்தைக் காப்பாற்ற, குழந்தையைப் பழக்கியுள்ள நிலையில், மீறி வெளியில் சொன்னால் ஆபத்து ஏற்படும் என்று மிரட்டுவார்கள். குழந்தையுடனான தவறான உறவை நீண்டகாலத்துக்குத் தொடர இது அவர்களுக்கு உதவும். இதனால் அந்தக் குழந்தைகள் பல்வேறு பிரச்னைகளை எதிர் கொள்வார்கள்.

- எச்சரிக்கை தேவை!

எதெல்லாம் பாலியல் துன்புறுத்தலில் அடக்கம்?

  • ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை...

  • குழந்தையின் உறுப்புகளைத் தொடுவது. குழந்தையின் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவது.

  • அத்துமீறும் நபரின் உறுப்புகளைத் தொடச் சொல்லி குழந்தையை வற்புறுத்துவது.

  • குழந்தையின் பாலியல் உணர்வுகளைத் தூண்டுவது.

  • குழந்தையிடம் ஆபாசப் படங்களைக் காட்டுவது.

இவை எல்லாமே பாலியல் அத்துமீறல்கள்தாம். குழந்தைகளிடம் ஏதேனும் வித்தியாசமான மாற்றம் தெரிகிறதா எனப் பெற்றோர் கவனிக்க வேண்டும்.

குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைப் போதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களின் பிரைவசியை மதிப்பதும் முக்கியம். `தனி அறையில் உடை மாற்றுவது குழந்தையின் உரிமையே' என்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.