Published:Updated:

’உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி வருவ!’ - போதை ஆசாமியால் பாம்புக்கு நேர்ந்த துயரம்

இளைஞர்
இளைஞர்

கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், குடிபோதையில் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரு மாதத்துக்கு மேலாக மதுக்கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. மத்திய அரசு அறிவித்த சில தளர்வுகளையடுத்து, பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து மதுக்கடைகளுக்குப் படையெடுத்தனர் மதுப் பிரியர்கள்.

Representation image
Representation image

மதுக்கடைக்கு முன்பு தேங்காய் சுற்றி திருஷ்டி கழித்த பெரியவர், மதுக்கடைக்கு முன் விழுந்து வணங்கிய இளம்பெண் என சில புகைப்படங்கள் இணையத்தை வட்டமடித்தன. இந்நிலையில், மதுபோதையில் இளைஞர் ஒருவர் செய்த செயல் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`ஒரே பில்லில் ரூ.95,000; 52,000 ரூபாய்க்கு மதுவிற்பனை!’ - ரூ.45 கோடி வசூல் செய்த கர்நாடகா

கர்நாடக மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மது அருந்திய போதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, சாலையில் பாம்பு ஒன்று குறுக்கே வந்துள்ளது. வாகனத்தை நிறுத்திய அந்த இளைஞர், பாம்பை கையில் பிடித்துக்கொண்டு மீண்டும் தனது வாகனத்தில் அமர்ந்துள்ளார்.

பாம்பு
பாம்பு

‘ உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் வழியில குறுக்க வருவ’ என்று கூறி சாலையில் சத்தம் போட்டுள்ளார். இவரது கூச்சலைக்கேட்டு பொதுமக்கள் திரண்டுள்ளனர். குடிபோதையில் ஏதோ செய்கிறார் என சிலர் விளையாட்டாகப் படம்பிடிக்க, அந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியில் வந்துள்ளது. இப்படி சாலையில் கத்திக்கொண்டே அந்த பாம்பைக் கடித்துக் கொன்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. அந்த நபர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த இளைஞர், கோலார் பகுதியைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு