Published:Updated:

நன்று ரெண்டு: எத்தியோப்பியா கொண்டாடும் தமிழர்; நாட்டுக்கே வழிகாட்டும் கம்பூர்!

கண்ணன் அம்பலம்
கண்ணன் அம்பலம்

ஓர் அற்புதமான 'பயோபிக்' சினிமா போல விரியும் டாக்டர் கண்ணன் அம்பலத்தின் அனுபவங்கள் மற்றும் கம்பூர் ஊராட்சியில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள்...

டாக்டர் கண்ணன் அம்பலம் எத்தியோப்பிய நாட்டிலிருக்கும் வொல்லேகா பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகத்துறைப் பேராசிரியர். 48 பாலங்கள், 28 இடங்களில் நல்ல குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இவரை அந்நாட்டின் ஊடகங்கள் கொண்டாடி மகிழ்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் எத்தியோப்பியாவின் பென்னி குயிக் இவர்!

"மதுரை அலங்காநல்லூர் பக்கத்துல பொந்துகம்பட்டிதான் என்னோட கிராமம். கஷ்டப்பட்ட விவசாயக்குடும்பம். குடும்பமா களை எடுக்குறது நாத்து நடறதுன்னு இளம்பிராயம் பச்சைய வாசனையோடு கழிந்தது. படிக்க வைக்க முடியாத அளவுக்கு வறுமையான சூழல்ல பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளில விடுதியில தங்கிப் படிச்சேன். ப்ளஸ் டூல முதல் மாணவனா வந்தேன். வயல் வேலைக்குப் போன என்னை என் பள்ளித் தலைமை ஆசிரியர் வீட்டுல பேசி மேலே படிக்கச் சொன்னார். மதுரை தியாகராசர் கல்லூரியில பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி சேர்ந்தேன்...

...எத்தியோப்பியப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளருக்கான அறிவிப்பைப் பத்திரிகை விளம்பரத்தில் பார்த்தேன். உடனே அப்ளைசெய்தேன். வீட்டில் 'ஆப்பிரிக்கா வெல்லாம் போகணுமா?' எனக் கேட்டார்கள். அங்கிருந்த ஒரு பேராசிரியருக்குக் கடிதம் எழுதிக்கேட்டேன். "தயவு செய்து இங்கிட்டுலாம் வந்திடாதே... கஷ்டப்படுவே!" என்று பயமுறுத்தியிருந்தார். என் வயதின் வேகம் எனக்கு எத்தியோப்பியா போயே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது!

டாக்டர் கண்ணன் அம்பலம் உருவாக்கிய பாலம்
டாக்டர் கண்ணன் அம்பலம் உருவாக்கிய பாலம்

நான் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்த புதிதில் வொல்லேகா பல்கலைக்கழகத்தின் பிரசிடெண்ட் (அந்த ஊர் துணை வேந்தர்) எங்களிடம் பேசினார். 'பல்கலைக் கழகம் ஆரம்பித்து ரெண்டு வருஷம்தான் ஆகிறது. இது ஒரு குழந்தைபோல... அதை வளர்த்தெடுப்பது உங்கள் கையில்தான் இருக்கு' என அவர் சொன்னது நெகிழ வைத்துவிட்டது. கல்வியறிவுல பின்தங்கிய அந்தப் பகுதி மக்கள் பல வருஷமா அரசாங்கத்துக்கிட்ட போராடித்தான் அந்தப் பல்கலைக்கழகத்தைக் கொண்டு வந்திருக்காங்க. இதெல்லாம் சேர்ந்து இனி நாம இங்கேதான் இருக்கணும்னு முடிவெடித்தேன்!"

ஓர் அற்புதமான 'பயோபிக்' சினிமா போல விரியும் இவரது அனுபவங்களை உள்ளடக்கிய சிறப்புக் கட்டுரையை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > எத்தியோப்பியாவின் பென்னிகுயிக் தமிழர்! https://bit.ly/2Q6y5z1

நாட்டுக்கே வழிகாட்டும் கம்பூர் ஊராட்சி!

"எல்லா கிராமங்களிலும் இருக்கிற பிரச்னைகள்தான் சார்... ஆனா, ஆளாளுக்கு பிரச்னை, பிரச்னைன்னு பேசினா எல்லாம் சரியாகிடுமா? நாமளே தீர்வை நோக்கிப் போகணும்னு முடிவு செஞ்சோம். எல்லாத்துக்கும் அடிப்படை, ஊராட்சி நிர்வாகம்தான். நாடாளுமன்றத்துக்கு என்ன அதிகாரமோ அதே அளவுக்கு ஊராட்சிக்கும் அதிகாரமிருக்குன்னு சொல்வாங்க. உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் மக்களும் பக்கபலமா இருந்தாங்க. ஒரு கட்டத்துல எங்க கிராமத்துப் பேரைச் சொன்னா அதிகாரிகள் இயல்பாவே அவங்க வேலையைச் சரியா செஞ்சிடுற நிலை வந்திருச்சு...'' உற்சாகமாக நம்மை வரவேற்றபடி பேசுகிறார் செல்வராஜ். சென்னையில் கூட்டுறவுத்துறையில் பணி கிடைத்தும் சேராமல், இளைஞர் அமைப்பை ஒருங்கிணைத்து வழிநடத்துகிறார் இவர்.

வெற்று அரட்டைகள், வீண் விவாதங்கள் என சமூக ஊடகங்கள் நிரம்பிவழியும் காலமிது. அதே சமூக ஊடகங்களைப் பயன்படுத்தித் தங்கள் ஊராட்சியை முன்னுதாரண ஊராட்சியாக மாற்றிச் சாதித்திருக்கிறார்கள் கம்பூர் ஊராட்சி இளைஞர்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இயங்கும் ராஜீவ்காந்தி அறக்கட்டளை, முன்மாதிரி மக்கள் வாழும் ஊராட்சியாக இதை அங்கீகரித்துப் பாராட்டியுள்ளது.

கம்பூர்
கம்பூர்


ஊரில் அத்தனை குடும்பங்களையும் உள்ளடக்கி வாட்ஸப் குழுக்கள் இயங்குகின்றன. அதில் அரசு அறிவிப்புகள், திட்டங்கள், வேலை வாய்ப்புகள், கல்வி சார்ந்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். மக்கள் தங்கள் பிரச்னைகளையும் அதில் பேசுகிறார்கள். பிரச்னைகளை சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு சென்று உடனடியாகத் தீர்வையும் காண்கிறார்கள்.

மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில், கொட்டாம்பட்டியை ஒட்டியிருக்கிறது கம்பூர் ஊராட்சி. சுமார் பத்தாயிரம் பேர் வசிக்கும் இந்த ஊராட்சியில் ஒன்பது கிராமங்கள் அடக்கம். வேளாண்மைதான் முதன்மைத் தொழில். சிலர் குவாரி வேலை, கூலி வேலைகளுக்குச் செல்கிறார்கள். சில குடும்பங்கள் வெளிநாடுகளில் வேலைசெய்யும் பிள்ளைகளை நம்பி வாழ்கின்றன. பெரும்பாலானோர் முதல் தலைமுறையாக இப்போதுதான் பட்டப்படிப்பை எட்டிப் பிடித்திருக்கிறார்கள்.

அப்படியென்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது இந்த ஊராட்சியில்? - ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > அச்சம் இல்லை, லஞ்சம் இல்லை! - வழிகாட்டும் கம்பூர் https://bit.ly/32aPGLE
சிறப்புச் சலுகைகள்:
ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
அடுத்த கட்டுரைக்கு