கொரோனா ஊரடங்கால் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்கோ... ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கோ செல்ல முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

`அரசுப் பட்டியலிட்டுள்ள முக்கியக் காரணங்களுக்காகச் செல்பவர்கள் இ-பாஸ் பெற்றுச் செல்லலாம்’ என்று கூறப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்று, மருத்துவ அவசரம். ஆனால், `மருத்துவ அவசரத்துக்காக விண்ணப்பித்தாலும் உடனே நிராகரித்துவிடுகின்றனர்’ என்று குற்றம்சாட்டு கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.

கடந்த 1.7.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘இ-பாஸ் மோசடி... இ.சி.எஃப் நெட்வொர்க்... வலைவிரித்த ஜூ.வி... வளைத்துப் பிடித்த போலீஸ்’ என்ற தலைப்பில் இ-பாஸ் முறைகேடு களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினோம். புரோக்கர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர். அதன் பிறகும் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. டிராவல்ஸ் நிறுவனங்கள் மூலம் இ-பாஸ் மோசடிகள் தொடர்வதாகச் செய்திகள் வருகின்றன. அதேசமயம் மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட நியாயமான அவசரத் தேவை உள்ளவர்களுக்கும் இ-பாஸ் மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், நூர்சாகிபுபுரத்தைச் சேர்ந்த துள்ளுக்குட்டி நம்மிடம், “எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் புற்றுநோய்க்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் ஹீமோதெரபி சிகிச்சை பெற்றுவருகிறார். ஜூலை 9-ம் தேதி சிகிச்சைக்காக அவர் மதுரைக்குச் செல்ல வேண்டும். அதற்கான ஆவணங்களை இணைத்து இ-பாஸுக்கு விண்ணப்பித்தார். உடனே ரிஜெக்ட் ஆகிவிட்டது. தொடர்ந்து நான்கு முறை விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்கவில்லை. குறிப்பிட்ட தேதியில் வர வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ள நிலையில், பாஸ் கிடைக்காமல் எப்படிச் செல்வது என்று பதற்றம் ஏற்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் போன் மூலம் தகவல் தெரிவித்தோம். எதுவும் நடக்கவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று ஜூலை 13-ம் தேதி காலை மதுரைக்குக் கிளம்பிவிட்டோம். கிளம்பிய சிறிது நேரத்தில்தான் இ-பாஸ் கிடைத்து. சிகிச்சைக்குச் செல்வதற்குக்கூட இப்படிச் செய்கிறார்களே... இது நியாயமா?” என்றார் ஆற்றாமையுடன்.

சென்னை, பூந்தமல்லியில் வசிக்கும் ராமசாமி, “மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வடக்கம்பட்டிதான் என் சொந்த ஊர். பூந்தமல்லியில் ஹோட்டல் வைத்திருக்கிறேன். ஊரடங்கால் ஹோட்டலை மூடிவிட்டு வருமானமில்லாமல் தவிக்கிறோம். ஊரில் வயதான என் தந்தை உடல்நலமில்லாமல் தவிக்கிறார். நான் ஊருக்குப் போய்த்தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இ-பாஸ் அப்ளை செய்தால் ரிஜெக்ட் ஆகிறது. என்னைப் போல வயதான பெற்றோர்களை ஊரில் விட்டுவிட்டுப் பிழைப்புக்காக நகரங்களில் நிறைய பேர் சிக்கிக்கொண்டிருக் கிறார்கள். அவர்களைப் பற்றி இந்த அரசுக்கு அக்கறையே இல்லையா?” என்று கலங்கினார்.

“சிறப்புக் குழந்தையான என் மகனுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் செக்-அப் செய்து மருந்து வாங்கி வர வேண்டும். அதற்கு இ-பாஸ் தர மறுக்கின்றனர்” என்று சமூக ஊடகத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவு பலரையும் கலங்க வைத்துள்ளது. இப்படி நிறைய குமுறல்கள் ஒலிக்கின்றன.

மாநகரங்களுக்கு அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாநகர மருத்துவமனைகளில் பல்வேறு நோய்களுக்காகத் தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்களும் இ-பாஸ் கிடைக்காமல் தவித்துவருகிறார்கள். ‘மக்கள் கொரோனாவால் மட்டும் பாதிக்கப்படக் கூடாது; மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை என்று அரசு முடிவெடுத்துவிட்டதா?’ என்று கேட்கிறார்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர்.

மதுரை மாவட்டத்தில் நடக்கும் இ-பாஸ் குளறுபடிகள் பற்றி கலெக்டர் வினய்யிடம் கேட்டோம். “மருத்துவச் சிகிச்சைகளுக்குக் கண்டிப்பாக இ-பாஸ் வழங்கப்படும். ஆவணங்களைச் சரியாக இணைக்காமலிருந்தால் தாமதமாகலாம். இருப்பினும் உடனடியாக அதிகாரிகளிடம் பேசுகிறேன். இனி தாமத மில்லாமல் இ-பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

கொரோனா தடுப்புப் பணிகளைக் கண்காணித்து வரும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் இந்தப் பிரச்னை பற்றிக் கூறினோம். “கொரோனாவைப்போல் மற்ற நோய்களுக்கான சிகிச்சையும் முக்கியமானது. மருத்துவ அவசரத்துக்கு உடனே இ-பாஸ் வழங்கப்படும். அப்படி வழங்க தாமதமானால் என் கவனத்துக்குக் கொண்டுவாருங்கள். இதை நான் மாவட்ட அதிகாரிகளிடம் உடனே தெரிவித்து நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.