Published:Updated:

பிரீமியம்... ஸ்கூல் ஃபீஸ்... செலுத்த சிரமமா? - ஒரு மாத்தியோசி வழிமுறை!

பிரீமியம்...
ஸ்கூல் ஃபீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரீமியம்... ஸ்கூல் ஃபீஸ்

மியூச்சுவல் ஃபண்டுகளில் ஆர்.டி-யைப் போன்று முதிர்வுக் காலம் என்ற வரம்பும் அபராதமும் கிடையாது என்பது சிறப்பு!

ன்ஷூரன்ஸ் பாலிசிக்கு ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தும் பிரீமியம் மற்றும் ஆண்டுக்கொருமுறை கட்டும் பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்ட நம்மில் பெரும்பாலோர் பெரும் சிரமப்படுகிறார்கள்.
பிரீமியம்... ஸ்கூல் ஃபீஸ்... செலுத்த சிரமமா? - ஒரு மாத்தியோசி வழிமுறை!

இந்தப் பணத்தைச் சேர்க்க ஓர் எளிதான வழி இருக்கிறது. ஒரு வருடத்துக்குச் செலுத்த வேண்டிய காப்பீட்டு பிரீமியம் அல்லது பள்ளிக் கட்டணம் எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு அதை 12 மாதங்களாகப் பிரித்து, மியூச்சுவல் ஃபண்டில் குறைந்த ரிஸ்க் கொண்ட திட்டமான லிக்விட் ஃபண்டில் மாத எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யத் தொடங்குங்கள்.

உங்களது பிரீமியம் செலுத்தும் காலம் அல்லது பள்ளிக் கல்விக் கட்டணம் கட்டு்வதற்கு ஒரு வாரத்துக்கு முன், மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் உள்ள தொகையை எடுத்து காப்பீட்டு பிரீமியம் அல்லது கல்விக் கட்டணத்தைச் செலுத்துங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அஞ்சலக மற்றும் வங்கி ஆர்.டி (Recurring Deposit) திட்டங்களையும் இதற்குப் பயன்படுத்தலாம். எனினும், மியூச்சுவல் ஃபண்டுகளில் ஆர்.டி-யைப் போன்று முதிர்வுக் காலம் என்ற வரம்பும் அபராதமும் கிடையாது. எனவே, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்து, உங்களுக்குத் தேவையான ஆண்டு பிரீமியத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்.

பிரீமியம்... ஸ்கூல் ஃபீஸ்... செலுத்த சிரமமா? - ஒரு மாத்தியோசி வழிமுறை!

வருட டேர்ம் பிளான், மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் வாகனக் காப்பீடு போன்றவற்றைச் செலுத்த சிரமப்படுபவர்கள் இதுபோன்ற மாதாந்தர எஸ்.ஐ.பி முறையைத் தேர்ந்தெடுத்து உங்கள் தேவைக்கேற்ப அதை மாற்றிக்கொள்ளலாம்.

இதை ஓர் உதாரணம் மூலம் நாம் பார்க்கலாம். ராஜன் தனது குடும்பத்தை நிதி சார்ந்த இழப்பு களிலிருந்து பாதுகாக்க ரூ.1 கோடிக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் (பிரீமியத் தொகை ஆண்டுக்கு ரூ.12,500), ரூ.5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு (பிரீமியம் ஆண்டுக்கு ரூ.15,400) மற்றும் ரூ.40 லட்சத்துக்கு விபத்துக் காப்பீடு (பிரீமியம் ஆண்டுக்கு ரூ.9,600) எடுத்துள்ளார்.

ராஜனுக்கு ஒவ்வோர் ஆண்டின் ஜூன் மாதத்தில் மட்டும் காப்பீட்டுக் கட்டணத்துக்குச் செலுத்த வேண்டிய தொகை ரூ.28,000. டேர்ம் இன்ஷூரன்ஸ் காப்பீட்டுக்கான பிரீமியம் பொதுவாக மாறாது. எனினும், மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் வயது அதிகரிக்கும் நிலையில் அதிகரிக்கும். ராஜனின் மாத வருவாய் ரூ.50,000 ஆக இருக்கும் நிலையில், ஜூன் மாதத்தில் வேறு ஏதேனும் எதிர்பாராத செலவுகள் ஏற்படுமாயின், அவர் சிரமப்பட நேரிடும். இதைத் தவிர்க்கும் பொருட்டு, அவர் மியூச்சுவல் ஃபண்ட் லிக்விட் திட்டத்தில் மாத எஸ்.ஐ.பி முறையில் ரூ.2.500-ஐ முதலீடு செய்துவருகிறார். இதைக்கொண்டு ஜூன் மாதத்துக்கான டேர்ம் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தைச் செலுத்திவிடுவார். இதுபோக, மற்றொரு ஃலிக்விட் ஃபண்டில் மாதம் 1,500 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறார். இந்தத் திட்டத்தில் கிடைக்கப்பெறும் தொகையைக் கொண்டு விபத்துக் காப்பீட்டு பிரீமியத்தைக் கட்டுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாதாந்தர எஸ்.ஐ.பி முறையில் 12 மாதங் களுக்கு ரூ.2,500 முதலீடு செய்யும் நிலையில், எதிர்பார்க்கும் வருமானம் 7% எனும்போது, ஒரு வருடத்தின் முடிவில் ரூ.31,150 கிடைக்கப் பெறும். காப்பீட்டுக்குக் கட்ட வேண்டிய தொகையோ ரூ.28,000 மட்டுமே. மீதமுள்ள தொகையை மற்ற செலவுகளுக்குப் பயன் படுத்திக்கொள்ளலாம்.

பிரீமியம்... ஸ்கூல் ஃபீஸ்... செலுத்த சிரமமா? - ஒரு மாத்தியோசி வழிமுறை!

மாதம்தோறும் 1,500 ரூபாய் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால், ஒரு வருடத்துக்குப் பிறகு (எதிர்பார்க்கும் வட்டி வருமானம் - 7%) ரூ.18,700-யைப் பெறலாம். ஆண்டு பிரீமியத் தேவைகளுக்கு எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது, பாலிசிக் காலம் முடியும் வரை முதலீட்டைத் தொடரும்படி வைத்துக் கொள்ளுங்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒருமுறை மட்டும் முதலீடு செய்பவர்கள் (Lumpsum Invest in Debt Funds) அல்லது வங்கி ஒரு வருட டெபாசிட் திட்டத்தில் (Fixed Deposit) சேமிப்பவர்கள், அவற்றிலிருந்து கிடைக்கப் பெறும் ஆண்டு வட்டி வருவாய் உடனடியாகத் தேவைப்படாத நிலையில், அதைக்கொண்டு உங்களது ஆண்டு பிரீமியத்தைச் செலுத்துவது கூடுதல் சிறப்பம்சமாக இருக்கும்.

இப்படிச் செய்வது காப்பீட்டுக்கு மட்டுமல்ல, தவிர்க்க முடியாத அனைத்துச் செலவு களுக்கான பணத்தையும் இப்படிச் சேமிக்கலாம்.