Published:Updated:

ஆபத்தில் இந்தியாவின் சூழலியல் பாதுகாப்பு!

தனியார்மயம் 2.0
பிரீமியம் ஸ்டோரி
தனியார்மயம் 2.0

தனியார்மயம் 2.0

ஆபத்தில் இந்தியாவின் சூழலியல் பாதுகாப்பு!

தனியார்மயம் 2.0

Published:Updated:
தனியார்மயம் 2.0
பிரீமியம் ஸ்டோரி
தனியார்மயம் 2.0

சூழலியல் சீரழிவுகளின் விளைவாகவே உருவாகி, பரவியதாகக் கூறப்படுகிறது கொரோனா வைரஸ். ஆனால், `ஊரடங்கின் பொருளாதார இழப்புகளைச் சரிகட்டும் மத்திய அரசின் மறுநிர்மாணத் திட்டங்கள் மீண்டும் சுற்றுச்சூழலை அழிப்பதற்கே வழிவகுக்கின்றன’ என்று கவலை தெரிவிக்கிறார்கள் சூழலியாளர்கள்.

மே 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேசியபோது, ‘‘இந்தியாவைச் சுயசார்புடையதாக மாற்றக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இது. ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின்கீழ் பொருளாதாரம், கட்டுமானம், தொழில்நுட்பம், மக்கள்தொகை, சந்தைத் தேவை ஆகிய ஐந்து தூண்களை அடிப்படையாகவைத்து சுயச்சார்பை உருவாக்குவோம்” என்றார். ஆனால், நாட்டின் வளர்ச்சிக்குரிய தூண்களில் ஒன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதை பிரதமர் மறந்துவிட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்கள் ஆத்ம நிர்பார் அபியானில் இருக்கிறது’ என்கிறார்கள் சூழலியாளர்கள். குறிப்பாக, `இந்த முடக்கத்தைச் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, இந்த வாய்ப்பைத் தனியார் நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது’ என்பதுதான் அவர்கள் வைக்கும் பிரதான குற்றச்சாட்டு.

ஆபத்தில் இந்தியாவின் சூழலியல் பாதுகாப்பு!

பசுமைப்புரட்சி தொடங்கியபோது, நாட்டின் மொத்த விவசாய நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு நிலங்களுக்கு மட்டுமே நீர்ப்பாசனத் திட்டங்களின் பலன்கள் கிடைத்தன. 2017-18 ஆண்டின் பொருளாதார ஆய்வின்படி தற்போது 48 சதவிகித நிலப் பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கிறது. அதில் குறு, சிறு விவசாய நிலங்கள் மட்டுமே 86.08 சதவிகிதம். ஆந்திரா, பீகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்கள்தான் குறு, சிறு விவசாயத்தில் முக்கியப் பங்குவகிக்கின்றன.

ஆனால், தற்போது நடந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய உள்நாட்டு இடப்பெயர்வால் வெளிமாநிலங்களில் சம்பாதித்து, சொந்த ஊருக்கு பணம் அனுப்பிக்கொண்டிருந்த தொழிலாளர்களின் வருமானம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வருமானத்தில்தான் அவர்களின் குடும்பத்தினர் சொந்த ஊர்களில் விவசாயம் செய்துகொண்டிருந்தனர். அவர்களைக் காப்பாற்றக்கூடிய அம்சம் திட்டத்தில் பேசப்படவில்லை.

இதுகுறித்துப் பேசிய சூழலியாளர் அருண் நெடுஞ்செழியன், ‘‘கொரோனா காலகட்டத்தை முதலாளித்துவ நிறுவனங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறது மத்திய அரசு. `விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்குவோம்’ என்கிறார்கள். அப்படிச் செய்தால் கிராமப் பொருளாதாரம் அழிந்துவிடும். `காடுகளைத் தனியார்மயமாக்குவோம்’ என்கிறார்கள். காடுகளில் மனிதர்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்ததால் வன விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு அதிகரித்து புதிய நோய்த்தொற்றுகள் உருவாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் பரவிய எபோலா, ஜிகா தொடங்கி தற்போது பரவிக் கொண்டிருக்கும் கோவிட்-19 வரை அனைத்துத் தொற்றுகளும் இப்படியான சூழல் சீர்கேடுகளால் நடைபெற்றவைதான்.

ஆபத்தில் இந்தியாவின் சூழலியல் பாதுகாப்பு!

காடுகளை அழித்து புதிய சுரங்கங்கள் தொடங்குவது, நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியார் மயமாக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புகளில் அடங்கி யுள்ளன. 2015-ம் ஆண்டு காலநிலை உச்சி மாநாட்டில் இந்தியா தன்னுடைய கரிம வெளியீட்டு அளவைக் குறைப்பதாக உறுதி அளித்திருந்தது. ஆனால், கரிம வெளியீடு அதிகரிக்கக் காரணமாக இருக்கும் நிலக்கரிச் சுரங்கங்களை மூடுவதை விடுத்து, கூடுதலாக 50 நிலக்கரிச் சுரங்கங்கள் அமைக்க ஆத்ம நிர்பார் அபியான் திட்டம் வழி சொல்கிறது.

நிலக்கரி மற்றும் கனிமச்சுரங்கங்களில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பதால் 500 சுரங்கங்கள் தனியாருக்குச் செல்கின்றன. அலுமினிய உற்பத்தியை அதிகரிப்பதற்காக, நிலக்கரிச் சுரங்கங்களுடன் பாக்ஸைட் சுரங்கங்களும் கூட்டு ஏலத்தின் மூலம் தனியாருக்குத் திறந்துவிடப்படும். இந்தக் கனிமங்களும், நிலக்கரிப் படிமங்களும் காடுகளில்தான் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை எடுக்க வேண்டுமெனில் காடுகளை அழிக்க வேண்டும். எல்லாவற்றையும் கடந்து அணுசக்தித் துறையிலும் தனியார்மயத்தை ஊக்குவிப்பது நாட்டையே ஆபத்தில் தள்ளும். முன்பு ஒரு தொழிற்சாலைக்கு அனுமதி வழங்குவதற்கு சூழலியல் தாக்க மதிப்பீடு மிகவும் அவசியம். ஆனால், தற்போது சூழலியல் தாக்க மதிப்பீட்டையே கருத்தில்கொள்ளாமல் அனுமதி கொடுக்கும் விதமாகப் பல மாற்றங்களைச் செய்துள்ளனர்.

மோடி
மோடி

`ஒரேயொரு பொருளாதாரத் திட்டத் தொகுப்பின் மூலம் அனைத்துப் பிரச்னைகளையும் சரிசெய்துவிட முடியும்’ என்று நினைப்பது நடைமுறையில் சாத்தியமல்ல. மைக்ரோ அளவில் இறங்கி, ஒவ்வொரு திட்டத்தின் பின்விளைவுகளையும் கருத்தில்கொண்டு, சூழலியலாளர்களின் ஆலோசனையைக் கேட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.

கடந்த காலங்களில் இயற்கையை நாம் சீரழித்ததன் விளைவுதான் கொரோனா தொடங்கி பாலைவன வெட்டுக்கிளிப் படையெடுப்பு வரை மனிதகுலத்தைப் பேரிடரில் தள்ளியிருக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற பேரிடர்களும் பொருளாதாரப் பின்னடைவும் ஏற்படாமலிருக்க நம்முடைய மறு தொடக்கம் சுற்றுச்சூழல்மீது அக்கறைகொண்டதாக இருக்க வேண்டும்.