Published:Updated:

நெல்லை பள்ளிச்சுவர் விபத்து விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு; குடும்பத்தினருக்கு ஆறுதல்

பள்ளியில் ஆய்வுசெய்த அமைச்சர்
News
பள்ளியில் ஆய்வுசெய்த அமைச்சர்

நெல்லை சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதுமிருக்கும் பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை அளித்துவருகிறார்கள்.

நெல்லை டவுனில் உள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர். கடந்த 17-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் குறித்து ஆய்வு செய்வதற்காகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் வந்தார்.

விபத்து நடந்த பள்ளியில் ஆய்வு
விபத்து நடந்த பள்ளியில் ஆய்வு

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் வெளியே வரும்போது தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கியிருக்கிறார். உடனடியாக அவர் இங்கு ஓய்வாக அமரவைக்கப்பட்டதுடன், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடந்துள்ளது. குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டது தெரியவந்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மயங்கிய அமைச்சர் அன்பில் மகேஷின் உடல்நிலை சிறிது நேரத்திலேயே சரியானதைத் தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தார். பின்னர் காரில் நெல்லைக்குப் புறப்பட்டு வந்தார். அங்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் தலைமையிலான டாக்டர்கள் பரிசோதித்தனர். அவரின் உடல்நிலை நன்றாக இருப்பதாகத் தெரிவித்ததால், உடனடியாக மாணவர்கள் உயிரிழந்த சாஃப்டர் மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அங்கு சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்ட அவர், விபத்துக்குக் காரணம் என்ன என்பது பற்றி அதிகாரிகளிடம் விசாரித்து அறிந்து கொண்டார். அதன் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அவர் விசாரித்து அறிந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அங்கிருந்து பள்ளி விபத்தில் உயிரிழந்த சுதிஷ், அன்பழகன், விஜயரஞ்சன் ஆகியோரின் வீட்டுக்குச் சென்று பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

உயிரிழந்த மாணவன் சுதீஷ் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்
உயிரிழந்த மாணவன் சுதீஷ் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்

அதன் பின்னர் நெல்லை மாநகரிலுள்ள பள்ளிகளின் கட்டட உறுதித்தன்மை பற்றி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை பகுதியிலுள்ள மாநகராட்சிப் பள்ளியின் கட்டடம் உறுதியற்ற நிலையில் இருப்பதால் அதை இடிக்கும் பணி நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் அந்தப் பணிகளையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகளுடன் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்கிறார்.