Published:Updated:

4 மாதங்களில் 6 பேரைக் கொன்ற யானை! - வேடிக்கை பார்க்கிறதா வனத்துறை?

யானை
பிரீமியம் ஸ்டோரி
யானை

அகழிகளைச் சீரமைப்பது, வார்னிங் சிஸ்டத்தை மேம்படுத்துவது, சோலார் மின்வேலிகளை அமைப்பது என்று யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க அனைத்து நடவடிக்கை களையும் எடுத்துவருகிறோம்.

4 மாதங்களில் 6 பேரைக் கொன்ற யானை! - வேடிக்கை பார்க்கிறதா வனத்துறை?

அகழிகளைச் சீரமைப்பது, வார்னிங் சிஸ்டத்தை மேம்படுத்துவது, சோலார் மின்வேலிகளை அமைப்பது என்று யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க அனைத்து நடவடிக்கை களையும் எடுத்துவருகிறோம்.

Published:Updated:
யானை
பிரீமியம் ஸ்டோரி
யானை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் ஆறு பேர் யானை தாக்கி உயிரிழந்திருக்கிறார்கள்! சிறிய டீக்கடை நடத்திவந்த ஆனந்த், காபி தோட்டத்தில் வேலை செய்த நாதன், இரவில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த மும்தாஜ், தோட்ட வேலை முடிந்து வீடு திரும்பிய ராஜேஸ்வரி என ஓவேலி பகுதியில் மட்டும் நான்கு பேரைக் கொன்ற காட்டு யானைகள், நிறைய குடியிருப்புகளையும் சேதமாக்கியிருக்கின்றன.

இது குறித்து நம்மிடம் பேசிய தோட்டத் தொழிலாளி லட்சுமி, “முன்னெல்லாம் சீஸனுக்கு மட்டுமே யானைகள் வரும். சில வருஷங்களா எல்லா மாசமும் யானை நடமாட்டம் இருக்கு. பகல்லகூட வெளியில் நடமாட முடியலை. ராத்திரி யானைங்க வீட்டை இடிச்சிடுமோ என்கிற பயத்துடனேயே தூங்குறோம்” என்றார் அச்சத்துடன்.

4 மாதங்களில் 6 பேரைக் கொன்ற யானை! - வேடிக்கை பார்க்கிறதா வனத்துறை?

ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவரும், வி.சி.க மாவட்டச் செயலாளருமான சகாதேவன், “உணவு கிடைக்காமல்தான் யானைகள் காட்டை விட்டு வெளியேறி தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் உலவுகின்றன. இதைத் தடுக்க வனத்துறை அக்கறை காட்டுவ தில்லை. யானைகளைக் கண்காணிக்கும் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு முறையான சம்பளமோ, வாகன வசதியோ கிடையாது. கேரளாவில் வனவிலங்கு தாக்கி உயிரிழப்போரின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்குகிறார்கள். இங்கோ ரூ.5 லட்சத்தைக்கூட முழுதாகக் கொடுப்பதில்லை. மக்களை இப்படியே தவிக்கவிட்டு இங்கிருந்து அவர்களை வெளியேற்றும் மறைமுகத் திட்டத்தை செயல்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது” என்று படபடத்தார்.

சகாதேவன்
சகாதேவன்

வனத்துறை ஊழியர் ஒருவர் நம்மிடம், “யானைகள் வழித்தடத்தின் மையமான ஓவேலி பகுதியில் நிறைய ஆக்கிரமிப்புகள் இருக்கு. ஒவ்வொரு தனியார் எஸ்டேட் வசமும் 4 ஆயிரம் ஏக்கர் முதல் 6 ஆயிரம் ஏக்கர் வரை அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருக்கு. காடுகள் அழிக்கப் பட்டதாலதான் உணவுக்கு வழியில்லாம யானைங்க ஊருக்குள்ளாற வருதுங்க” என்றார்.

இந்த விவகாரம் பற்றி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திடம் கேட்டபோது, “அகழிகளைச் சீரமைப்பது, வார்னிங் சிஸ்டத்தை மேம்படுத்துவது, சோலார் மின்வேலிகளை அமைப்பது என்று யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க அனைத்து நடவடிக்கை களையும் எடுத்துவருகிறோம். வனத்துறையினருடன், புனேயிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்புக் குழுவினரும் களப்பணியில் இறங்கியிருக்கிறார்கள். விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.

அம்ரித்
அம்ரித்

இந்த விவகாரத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல முயன்றோம். “உடல்நலக் குறைவால் அமைச்சர் ஓய்வெடுக்கிறார். இப்போது பேச முடியாது” என்று தெரிவித்தனர்.

இந்த இதழைப் பார்த்த பிறகாவது நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?