Published:Updated:

இறந்தவருக்குத் திதி; ஆற்றைக் கடக்கையில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு!

காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரம்
காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரம்

மகாராஷ்டிரா ஆற்றில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்திலுள்ள காடேகாவ் என்ற கிராமத்திலுள்ள மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நீர்வீழ்ச்சி ஒன்றைப் பார்த்துவிட்டு ஹித்ரனா என்ற இடத்திலுள்ள கோயிலுக்குப் படகில் சென்றனர். அவர்கள் வார்தா ஆற்றங்கரையோரம் இறந்த ஒருவருக்குத் திதி கொடுப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் படகு நடு ஆற்றில் சென்றுகொண்டிருக்கும்போது தள்ளாட ஆரம்பித்தது. இதனால் படகில் இருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். சிறிது நேரத்தில் படகு எடை தாங்காமல் நடு ஆற்றில் கவிழ்ந்துவிட்டது.

`11 பேர் உயிரை இழந்தனர்'- ஆந்திராவை சோகத்தில் மூழ்கடித்த படகு விபத்து!
காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரம்
காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரம்

அனைவரும் நீரில் தத்தளித்தனர். நீச்சல் தெரிந்த இரண்டு பேர் மட்டும் நீந்திக் கரைக்குத் திரும்பிவிட்டனர். நான்கு பேர் ஆற்றில் மூழ்கிவிட்டனர். ஏழு பேரைக் காணவில்லை. இது குறித்துக் கேள்விப்பட்டதும் தீயணைப்புத்துறையினரும், மாவட்டப் பேரிடர் மேலாண்மைப் படையினரும் சேர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஒரு குழந்தை உட்பட நான்கு பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியவர்களைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்களும் படகுகளில் சென்று தேடிவருகின்றனர். சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் தேவேந்திரா சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியை நேரில் பார்வையிட்டார். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மழைக் காலம் என்பதால் ஆற்றில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருந்தது. இதனால் படகில் சென்றவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, கரையோர கிராமங்களில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு