Published:Updated:

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் தேர்வு... கவனிக்க வேண்டிய 5 முக்கியமான அம்சங்கள்!

வரி சேமிப்பு முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
வரி சேமிப்பு முதலீடு

வரி சேமிப்பு முதலீடு

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் தேர்வு... கவனிக்க வேண்டிய 5 முக்கியமான அம்சங்கள்!

வரி சேமிப்பு முதலீடு

Published:Updated:
வரி சேமிப்பு முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
வரி சேமிப்பு முதலீடு
என்.விஜயகுமார் 
நிதி ஆலோசகர், 
https://www.vbuildwealth.com/
என்.விஜயகுமார் நிதி ஆலோசகர்,  https://www.vbuildwealth.com/

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் முதலீட்டை வரிச் சேமிப்பு கோணத்தில் மட்டும் பார்க்கத் தேவையில்லை. இது, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் ஈக்விட்டி டைவர்சிஃபைடு ஃபண்ட் என்பதால், நீண்ட காலத்தில் நல்ல ஆதாயத்தைத் தரவல்லது.

பழைய வருமான வரி முறையில் வரியை மிச்சப்படுத்த செய்ய வேண்டிய முதலீட்டில் முதல் இடத்தில் வரிச் சேமிப்பு ஃபண்டான இ.எல்.எஸ்.எஸ் உள்ளது. இது பங்குச் சந்தையுடன் இணைந்த சேமிப்புத் திட்டம் என்பதால், நிதி ஆண்டு ஆரம்பம் முதலே சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முறையில் முதலீடு செய்துவரும்பட்சத்தில் மட்டுமே பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தில் ரூபாய் அடக்க விலை சராசரி என்கிற ரூபி காஸ்ட் ஆவரேஜிங்படி சராசரியாக அதிக யூனிட்டுகள் கிடைக்க வாய்ப்புண்டு.

இந்த இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு ஒரு நிதி ஆண்டில் வருமான வரிப் பிரிவு 80சி பிரிவின்கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச்சலுகை கிடைக்கும். மத்திய அரசு அளிக்கும் வரிச் சலுகை முதலீடுகளில் மிகவும் குறைவான லாக்இன் கொண்ட முதலீட்டுத் திட்டம் இதுவாகும்.

மூன்று ஆண்டுகள் லாக்இன் கொண்ட இந்த முதலீட்டில்தான் பணவீக்க விகிதத்தைவிட அதிகமாக வருமானம் கிடைப்பதுடன், லாபத்துக்கு வரி அனுகூலமும் இருக்கிறது.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டை முதலீட்டுக்குத் தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான 5 அம்சங்களைப் பார்ப்போம்.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் தேர்வு... கவனிக்க வேண்டிய 5 முக்கியமான அம்சங்கள்!

1. தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு

வரிச் சேமிப்புக்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்யும்போது கடந்த ஓராண்டின் அதிக வருமானத்தின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யக் கூடாது. அந்த ஃபண்ட் கடந்த ஓராண்டு, மூன்று ஆண்டு, ஐந்து ஆண்டு, பத்து ஆண்டு மற்றும் ஆரம்பம் முதல் எவ்வளவு வருமானம் தந்திருக்கிறது என்பதைக் கவனிப்பது மிக முக்கியமாகும்.

மேலும், அந்த ஃபண்ட், அதன் வருமான ஒப்பிட்டுக்கான பெஞ்ச்மார்க்கைவிட மற்றும் ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானத்தைவிட அதிக வருமானம் தந்ததாக இருக்க வேண்டும்.

2022, மே 6-ம் தேதி நிலவரப்படி, இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளின் சராசரி வருமானம் ஓராண்டு, மூன்று ஆண்டு, ஐந்து ஆண்டு மற்றும் பத்து ஆண்டுகளில் முறையே 11.61%, 14.24%, 10.95% மற்றும் 14.94 சதவிகிதமாக உள்ளது. ஆனால், டாப் ஃபண்டுகளின் வருமானம் இதைவிட அதிகமாக இருக்கிறது. (பார்க்க அட்டவணை).

2. மொத்த முதலீடு வேண்டாம்...

கூடியவரையில் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் மொத்த முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். நீங்கள் மொத்த முதலீடு செய்த பிறகு, சந்தை தொடர்ந்து இறங்கிவிட்டால், மீண்டும் மீண்டு வர அதிக காலம் பிடிக்கக்கூடும். எனவே, மொத்தத் தொகை கையிலிருந்தாலும் அதை லிக்விட் ஃபண்ட் போன்ற ரிஸ்க் இல்லாத ஃபண்டில் போட்டுவிட்டு, அதிலிருந்து சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (STP) முறையில் வரிச் சேமிப்பு ஃபண்டுக்கு முதலீட்டை மாற்றிக்கொள்ளலாம். இதன்மூலம் பங்குச் சந்தையின் ரிஸ்க்கைக் குறைப்பதுடன், அடக்க விலை சராசரி மூலம் சராசரியாகக் கூடுதல் யூனிட்டுகள் கிடைக்கும்.

இந்த ஃபண்டில் மொத்த முதலீடு மற்றும் மாத எஸ்.ஐ.பி முதலீட்டுக்கான தொகை ரூ.500 ஆக இருப்பதால், அனைவரும் முதலீடு செய்து வரிச்சலுகை பெற முடியும்.

எஸ்.ஐ.பி மற்றும் எஸ்.டி.பி முறையில் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்யும்போது ஒவ்வொரு தவணையும் மூன்று ஆண்டுகள் லாக்இன் கொண்டவை. உதாரணமாக, 2022 மே மாதம் 15-ம் தேதி ஒருவர் எஸ்.ஐ.பி / எஸ்.டி.பி முறையில் வரிச் சேமிப்பு ஃபண்ட் ஒன்றில் ரூ.5,000 முதலீடு செய்தால், அதன் லாக்இன் பீரியட் 2025 மே 15-ம் தேதி வரையாகும்.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் தேர்வு... கவனிக்க வேண்டிய 5 முக்கியமான அம்சங்கள்!

3.சந்தை சரிவில் கூடுதல் முதலீடு...

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் முதலீட்டை ஒருவர் வரி சேமிப்பு கோணத்தில் மட்டும் பார்க்கத் தேவையில்லை. இது பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் ஈக்விட்டி டைவர்சிஃபைடு ஃபண்ட் என்பதால், நீண்ட காலத்தில் நல்ல ஆதாயத்தைத் தரவல்லது. எனவே, சந்தை இறக்கத்தில் கூடுதல் முதலீடு செய்வது மூலம் அதிக யூனிட்டுகள் கிடைக்கும். இது பிற்காலத்தில் கணிசமான லாபமாக மாறும்.

4. முதலீட்டுப் பாணி...

செபி அமைப்பின் விதிமுறைப் படி, இந்த ஃபண்டில் திரட்டப் படும் நிதியில் நிறுவனப் பங்குகள் மற்றும் அது சார்ந்த ஆவணங் களில் குறைந்தபட்சம் 80% தொகை முதலீடு செய்ய வேண்டும். இந்த ஃபண்டில் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் நிதி அனைத்து பங்குச் சந்தை மதிப்பு (Market Capitalisation (M-Cap)) கொண்ட நிறுவனப் பங்குகளிலும் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. அதாவது, லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யப்படுகிறது.

லார்ஜ்கேப் பங்குகள் பாதுகாப்பானவை என்றாலும் மிதமான வருமானம்தான் அளிக்கும். மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் அதிக ரிஸ்க் என்றாலும், அதிக வருமானம் தரக்கூடியவையாக இருக்கின்றன.

பொதுவாக, இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் சராசரியாக சுமார் 70% தொகை லார்ஜ்கேப் பங்குகளிலும் சுமார் 20% மிட்கேப் ஃபண்டு களிலும் 8% ஸ்மால்கேப் பங்கு களிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. சில ஃபண்டுகளில் 50% தொகை லார்ஜ்கேப் பங்கு களிலும் மீதி மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன.

நீங்கள் முதலீடு செய்யப்படும் ஃபண்டில் திரட்டப்பட்ட பணம் எவ்விதம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது, அது உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதைக் கவனித் தும் முதலீடு செய்யலாம். இந்த விஷயத்தில் உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை எனில், நிதி ஆலோசகர்களின் உதவியை நாடுவதில் தவறில்லை.

5. மொத்த செலவு விகிதம்...

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட் டில் செலவு விகிதத்தை (Total Expense Ratio - TER). கவனிப்பது மிக முக்கியம். அது வரி சேமிப்பு ஃபண்டுக்கும் பொருந்தும். அதிக செலவு விகிதம் என்பது ஃபண்டின் வருமானத்தைக் குறைத்துவிடும். இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் ரெகுலர் பிளான்களின் செலவு விகிதம் 1.6% முதல் 2.5 சதவிகிதமாக இருக்கிறது.

குறிப்பிட்ட ஃபண்ட் தொடர்ந்து அதிக வருமானம் தந்துவரும்பட்சத்தில் அதிக செலவு விகிதம் இருந்தால், பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில், குறைவான வருமானம் தந்துகொண்டிருக்கும் ஃபண்டில் செலவு விகிதம் அதிகமாக இருந்தால், கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் லாக்இன் பீரியட் முடிந்ததும் வேறு ஃபண்டுக்கு முதலீட்டை மாற்றிக்கொள்ளலாம். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வந்தால், அதை நிறுத்திவிட்டு வேறு நல்ல ஃபண்டில் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்வது லாபகரமாக இருக்கும்.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் வரியை மட்டும் சேமிக்க வில்லை. கூடவே, நீண்ட காலத்தில் செல்வத்தையும் உருவாக்கித் தருகிறது. எனவே, லாக்இன் பீரியட் முடிந்ததும் அந்த ஃபண்டிலிருந்து வெளியேற வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

எப்போது பணம் தேவையோ, அப்போது அதை விற்றுப் பணமாக்கினால் போதும். மேலும், சூழ்நிலையை அனுசரித்து சந்தை ஏற்றத்திலிருக்கும் காலத்தில் யூனிட்டுகளை விற்றால் கூடுதல் லாபம் பார்க்கமுடியும்.

மூலதன ஆதாயத்துக்கு வரி அனுகூலம்..!

இந்த இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ஈக்விட்டி ஃபண்ட் பிரிவின் கீழ் வருவதால், இதன் மூலமான நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1 லட்சம் வரைக்கும் வரி இல்லை. அதற்கு மேற்பட்ட தொகைக்கு 10% வரி கட்டினால் போதும்.

இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். ஒருவர் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்கிறார். இந்தத் தொகை ஐந்தாண்டில் ரூ.4 லட்சமாக உயர்கிறது. இவருக்கான நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.2.5 லட்சம். இதில் ரூ.1 லட்சத்துக்கு வரி கிடையாது. மீதி ரூ.1.5 லட்சம் லாபத்துக்கு 10% அதாவது, ரூ.15,000 வரி கட்டினால் போதும். அதாவது, ரூ.2.5 லட்சம் லாபத்துக்கு ரூ.15,000தான் வரியாகும். ஏற்கெனவே ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யும்போது, 30% வருமான வரம்பு என்றால் அவருக்கு ரூ.45,000 வரி மிச்சமாகி இருக்கும். ஐந்து ஆண்டுக்கு பிரிவு ரூ.15,000 வரி கட்டினாலும் அவருக்கு நிகர வரி மிச்சம் ரூ.30,000 ஆகும்; கூடவே செல்வம் பெருக்கம் வேறு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism