நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வரியைச் சேமிக்க உதவும் இ.எல்.எஸ்.எஸ்!

elss
பிரீமியம் ஸ்டோரி
News
elss

டாப் ஃபண்டுகளின் வருமானம்

நாம் எல்லோரும் வருமான வரியை மிச்சப்படுத்தத்தான் விரும்புகிறோம். அதற்கு பிரிவு 80சி கைகொடுக்கிறது. இதில் ஒருவர் வருடத்துக்கு ரூ.1.50 லட்சம் வரை வரியைச் சேமிக்க முடியும்.

வரி சேமிப்பு ஃபண்ட், தேசிய சேமிப்பு பத்திரம் (என்.எஸ்.சி), பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எஃப்), செல்வமகள் திட்டம், ஐந்தாண்டு வங்கி வைப்பு நிதி, தபால் அலுவலக வைப்பு நிதி, யூலிப் (யூனிட் லிங்க் இன்ஷூரன்ஸ் பாலிசி), இதர ஆயுள் காப்பீடு பாலிசிக்கான பிரீமியம், குழந்தைகளின் கல்விக் கட்டணம், வீட்டுக் கடன் திரும்பச் செலுத்தும் அசல் ஆகியவற்றுக்கு வரிச் சலுகை உண்டு.

பா.பத்மநாபன் 
நிதி ஆலோசகர், fortuneplanners
பா.பத்மநாபன் நிதி ஆலோசகர், fortuneplanners

மேலே சொன்ன திட்டங்களில் குறைந்த லாக்கின் உள்ள திட்டம், அதே நேரத்தில் அதிக வருமானம் கிடைக்கக்கூடியது மியூச்சுவல் ஃபண்ட் (இ.எல்.எஸ்.எஸ்) என்றால் மிகையாகாது.

வரி சேமிப்பு
வரி சேமிப்பு

இ.எல்.எஸ்.எஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் வருமான வரிச் சட்டம் 1961-ன் பிரிவு 80சி மூலம் 1.5 லட்சம் ரூபாய் வரை வரியைச் சேமிக்க முடியும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. இ.எல்.எஸ்.எஸ் முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விற்க வேண்டிய அவசியம் இல்லை. நல்ல லாபம் கிடைக்கும்பட்சத்தில் அப்படியே தொடரலாம்.

Tax saving
Tax saving

அதிக முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையும் (ரூ.500) குறைவாக இருக்கிறது. இதில் அதிகபட்ச முதலீட்டுத் தொகை என்ற கட்டுப்பாடு கிடையாது என்பது இன்னொரு முக்கிய அம்சம். மூத்த குடிமக்களுக்கும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். நீண்டகாலத்துக்கு அதிக லாபத்தைப் பெற மற்ற முதலீடுகளைவிட இது சிறப்பானது.

வரியைச் சேமிக்க உதவும் இ.எல்.எஸ்.எஸ்!

மற்ற முதலீட்டுத் திட்டங்களில் குறைந்தது ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். குறைந்த லாக்இன் வசதி இருப்பதால் ஒருவர் முதல் மூன்று ஆண்டுகளுக்கு இ.எல்.எஸ்.எஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் போதும்; நான்காம் ஆண்டு முதலீட்டுக்கு முதலாம் ஆண்டின் முதிர்வுத்தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை அப்படியே தொடரலாம். சில நேரங்களில் உங்களுக்குக் குறைவான வருமானம் கிடைக்கலாம். கொஞ்சம் பொறுத்திருந்தால் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். இந்த ஃபண்ட் மூலமான வருமானம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது. மூன்று வருட லாக்இன் பீரியட் இருப்பதால் ஃபண்ட் மேனேஜர் நன்றாகச் செயல்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த முதலீட்டில், மாதச் சம்பளதாரர்கள் வருமான வரியைச் சேமிக்க மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவரலாம்.

நீண்டகாலத்தில் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளின் செயல்பாட்டைப் பார்க்கும்போது, இந்த முதலீடு சிறந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

5, 10, 15 மற்றும் 20 ஆண்டுகளில் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளின் செயல்பாட்டைப் பார்க்கும்போது, இந்த முதலீடு சிறந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தனிநபர்களும் ஹெச்.யூ.எஃப் எனப்படும் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் அடங்கிய இந்து கூட்டுக் குடும்பத்தினரும் வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.