Published:Updated:

‘சதுப்புநிலங்களை ஆக்கிரமிக்காதீர்கள்!’

சாம்பல் குட்டை எனச் சொல்லப்பட்ட சதுப்புநிலப் பகுதி
பிரீமியம் ஸ்டோரி
News
சாம்பல் குட்டை எனச் சொல்லப்பட்ட சதுப்புநிலப் பகுதி

தடைபோட்ட மத்திய வல்லுநர் குழு - அன்றே சொன்னது விகடன்

எண்ணூர் துறைமுகத்தில் அமையவிருந்த கடலோர வேலைவாய்ப்பு மண்டலத்துக்கான விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் வல்லுநர் குழு நிராகரித்துள்ளது, அந்தப் பகுதி மக்களை நிம்மதியடையவைத்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ‘கடலோர வேலை வாய்ப்பு மண்டலம்’ என்ற திட்டம் அறிவிக்கப் பட்டது. அதன்கீழ் 322 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பூங்கா முதலான பல்வேறு புதிய கட்டுமானங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப் பட்டது. இதையடுத்து, ‘இந்தத் திட்டத்துக்கான கட்டுமானங்கள் அனைத்தும் சதுப்புநிலப் பகுதிகளிலும் உப்பளங்களிலும் அமைக்கப் படவுள்ளன. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்புகள் உருவாகும்’ என்று அந்தப் பகுதி மக்கள் போர்க்கொடி தூக்கினர். சூழலியல் அனுமதி, காற்று மற்றும் நீர் பாதுகாப்புச் சட்டங்கள் என எந்தவிதமான சட்டத்தையும் விதிமுறைகளையும் பின்பற்றாமல் இந்தத் திட்டத்துக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில்தான், இந்தத் திட்டத்துக்கான அனுமதி கோரும் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது மத்திய சுற்றுச்சூழல் வல்லுநர் குழு.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் - சாம்பல் குட்டை எனச் சொல்லப்பட்ட சதுப்புநிலப் பகுதி
எண்ணூர் காமராஜர் துறைமுகம் - சாம்பல் குட்டை எனச் சொல்லப்பட்ட சதுப்புநிலப் பகுதி

‘விண்ணப்பம் அரைகுறையாக உள்ளது. அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்த சூழலியல் தாக்க மதிப்பீட்டைத் தயார்செய்து விண்ணப்பிக்க வேண்டும்’ என்று கூறியுள்ள வல்லுநர் குழு, விண்ணப்பம் ரத்துசெய்யப் படுவதற்கான காரணங்களாக நான்கு விஷயங்களைப் பட்டியலிட்டது. அவை...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

1. மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சூழலியலைக் கருத்தில்கொண்ட தொழிற்சாலை மண்டல நிலப்பட வழிகாட்டுதலின்படி, இந்தத் திட்டத்துக்கு நிலம் தேர்வுசெய்யப்படவில்லை.

2. காமராஜர் துறைமுகத்தில் விதிமீறல்கள் உள்ளன.

3. தூர்வாரிய கழிவுகளை சட்டவிரோதமாக நீர்நிலைகளில் கொட்டியதாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஏற்கெனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

4. முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தில், ஈரநிலங்களையும் அந்தப் பகுதியின் மீன் மற்றும் நிலவியல் வளங்களையும் அழிக்கக்கூடிய ரசாயனத் தொழிற்சாலைகளும் அடங்கியிருந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக, ‘எண்ணூர் துறைமுகத்தில் 322 ஏக்கர் பரப்பளவிலான ஈர நிலங்களை நவீன தொழிற்சாலைகளுக்கான மனைகளாக கடலோர வேலைவாய்ப்பு மண்டலத் திட்டம் மாற்றப்போகிறது’ என்று 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அதன் பிறகு, எண்ணூர் துறைமுக நிர்வாகத் தரப்பிலிருந்து திட்டம் வரவுள்ள பகுதிக்கு நம்மை அழைத்துச்சென்று, அவர்கள் தரப்பிலான வாதங்களை விளக்கமாகக் கூறினர். அதுமட்டு மல்லாது, திட்டம் வரவுள்ள பகுதிக்குள் இருந்த கொற்றலை ஆற்றின் வடிகால் நிலத்தின் ஒரு பகுதியை, ‘ஆற்றினுடைய பகுதியே கிடையாது’ என்று மறுத்த துறைமுக நிர்வாகிகள், அதை `அனல் மின்நிலையத்தின் சாம்பல் குட்டை’ என்று நம்மிடம் கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்கள் சொன்ன விளக்கங்களை ஆராய்ந்து அதிலிருந்த முரண்பாடுகளைப் பட்டியலிட்டு, ‘இந்தத் திட்டப்பணிகள் ஈர நிலங்களையும் உப்பளங்களையும் ஆக்கிரமித்துதான் நடக்கின்றன’ என்பதையும், ‘சாம்பல் குட்டை என்று சொல்லப் பட்ட பகுதி நீர்நிலைகள் தான்’ என்பதையும் ‘இதெல்லாம் நீர்நிலைகளே அல்ல! - கட்டுமானப் பணிகள் குறித்து காமராஜர் துறைமுகத்தின் பதில்’ என்ற தலைப்பில் 8.7.2019 அன்று விகடன் இணைய தளத்தில் வெளியான கட்டுரைமூலம் வெளிச்சத் துக்குக் கொண்டுவந்தோம்.

உண்மையான சாம்பல் குட்டை - திட்டப்பணிகள் நடைபெற்றபோது...
உண்மையான சாம்பல் குட்டை - திட்டப்பணிகள் நடைபெற்றபோது...

நாம் குறிப்பிட்ட அதே காரணங்களைச் சொல்லித் தான் இந்தத் திட்டத்துக்கான விண்ணப் பத்தை நிராகரித்துள்ளது மத்திய சுற்றுச்சூழல் வல்லுநர் குழு. ‘சாம்பல் குட்டை’ என்று துறைமுக நிர்வாகிகள் சொன்ன பகுதி நீர்நிலைதான் என்பதையும் மத்திய வல்லுநர் குழுவும் உறுதிசெய்துள்ளது. மேலும், நீர்நிலைகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்காகவும் ஆக்கிரமித்த ஈரநிலங்களை முறையாக மறுசீரமைப்பு செய்ய வில்லை என்றும் குற்றம்சாட்டி, காமராஜர் துறைமுகத்துக்கு 8.3 கோடி ரூபாய் அபராதம் விதித் துள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

இதுகுறித்து எண்ணூர் காட்டுக் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலரிடம் பேசியபோது, ‘‘ஈரநிலங்கள் நச்சுத்தன்மையுடைய தொழிற்சாலை அமைப்பதற்கான இடம் கிடையாது என்றும், காமராஜர் துறைமுகம் ஈரநிலங்களைக் கொஞ்சம் கொஞ்ச மாக ஆக்கிரமித்து வருகிறது என்றும் நாங்கள் தொடர்ந்து போராடி வந்தோம். எங்கள் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் வல்லுநர் குழு முடிவெடுத்திருப்பது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது’’ என்றனர் உற்சாகமாக.

இதுகுறித்து காமராஜர் துறைமுக நிர்வாகிகளிடம் பேசியபோது. ‘‘எங்களிடம் இருக்கும் ஒரே நிலப்பகுதி இதுமட்டும்தான். கடலோர வேலைவாய்ப்பு மண்டலத்தைக் கொண்டுவரும் எண்ணத்தை விட்டுவிட்டு, துறைமுக வேலைகளான சரக்கு மேலாண் மைக்கு மட்டும் அந்த நிலத்தைப் பயன்படுத்தலாமா என ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.

சதுப்பு நிலப்பகுதியின் சூழலியல் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு துறைமுக நிர்வாகம் செயல்பட வேண்டும்!