Published:Updated:

நீலகிரி: சுற்றுலாத் தலங்கள் எதுவும் திறக்கப்படாது... இ-பாஸ் கட்டாயம்! - ஆட்சியர் அதிரடி

ஊட்டி பேருந்து நிலையம்
ஊட்டி பேருந்து நிலையம்

இந்த தளர்வுக்குப் பின்னர் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் முழு டிராவல் ஹிஸ்டரியைக் கண்டறிவது மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும். எனவே, தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலிலுள்ள நிலையில், தற்போது படிப்படியாக மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கோயில்னுள்...
கோயில்னுள்...

செப்டம்பர் முதல் தேதியான இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. அதேபோல் நூலகங்கள், வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தமிழகத்தில் இ- பாஸ் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களுக்குச் செல்ல இ- பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கிறது. மலை மாவட்டமான நீலகிரியில் தற்போது கடைப்பிடிக்கப்படவுள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

nilgiris collector innocent divya
nilgiris collector innocent divya

``நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள் எதுவும் இப்போதைக்கு திறக்கப்படாது. சுற்றுலா நோக்கத்தில் நீலகிரிக்குள் வரும் நபர்களை அனுமதிக்க முடியாது. அவசியமான அவசர பயணங்கள் மற்றும் தொழில்ரீதியாக மாவட்டத்துக்குள் வர இ- பாஸ் முறையில் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று பரவல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். நீலகிரியில் 50,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொற்றுப் பரிசோதனை மேற்கொண்டதில் தமிழகத்தில் நீலகிரி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து

இந்த தளர்வுக்குப் பிறகு தொற்று பாதிக்கப்பட்டவர்களின் முழு டிராவல் ஹிஸ்டரியைக் கண்டறிவது மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும். இனி, தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அரசு சார்பில் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்களும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு