Published:Updated:

“ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கணும்!”

ஆதவ் கந்தசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஆதவ் கந்தசாமி

அப்பறம்தான் ஏ.கே (இப்போதிருக்கும் குதிரையின் பெயர்) வாங்கினேன். என்னோட பேரைத்தான் சுருக்கி ஏ.கேன்னு வெச்சிருக்கோம்.

“ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கணும்!”

அப்பறம்தான் ஏ.கே (இப்போதிருக்கும் குதிரையின் பெயர்) வாங்கினேன். என்னோட பேரைத்தான் சுருக்கி ஏ.கேன்னு வெச்சிருக்கோம்.

Published:Updated:
ஆதவ் கந்தசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஆதவ் கந்தசாமி

நம்மில் பலரும் தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்துக் கடந்து செல்லும், குதிரையேற்றப் போட்டியில் சத்தமே இல்லாமல் சாதித்துக்கொண்டிருக்கிறான் கோவையைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன். 7-ம் வகுப்பு படிக்கும் ஆதவ் கந்தசாமி, சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற தேசிய இளையோர் குதிரையேற்றப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று கவனம் ஈர்த்திருக்கிறான்.

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் வைத்து ஆதவ் கந்தசாமியைச் சந்தித்துப் பேசினோம். “சின்ன வயசுல எனக்கு இதுல பெருசா ஆர்வம் இல்ல. இப்படி ஒரு விஷயம் இருக்கறதே தெரியாது. அப்பாவுக்கும், மாமாவுக்கும்தான் குதிரைப்போட்டினா பிடிக்கும். யூ.கே.ஜி படிக்கறப்ப டிரெய்னிங் ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல ஒரு மாதிரி இருந்தாலும் போகப் போக ரொம்ப ஆர்வம் வந்துடுச்சு. குதிரை மேல நிக்கறது, சைக்களிங் பண்றது, திரும்பறது, நடக்கறது மாதிரியான விஷயங்கள்தான் ஆரம்பத்துல சொல்லிக் கொடுத்தாங்க.

“ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கணும்!”
“ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கணும்!”

ஒரு வருஷம் கழிச்சு சென்னையில் நடந்த ஒரு போட்டியில கலந்துகிட்டேன். 2019-ல பெங்களூருல நடந்த ஜே.என்.இ.சி (Junior National Equestrian Competion) போட்டில கலந்துகிட்டேன். அப்புறம் 2020 டெல்லில நடந்த ஜே.என்.இ.சி, 2021 மும்பைல நடந்த ஜே.என்.இ.சி போட்டில கலந்துகிட்டேன். முதல்ல வெள்ளி, அப்புறம் வெண்கலம் ஜெயிச்சேன். கடைசியா மும்பைல நடந்த போட்டில தங்கம் ஜெயிச்சிருக்கேன்.

தினமும் காலைல 4.30 மணிக்கு எந்திருச்சு, 5.30 மணிக்கு இங்க வந்து டிரெய்னிங் ஆரம்பிப்பேன். 6.30 மணி வரை டிரெய்னிங் போகும். முன்னாடி ஒரு குதிரை இருந்துச்சு. அது திடீர்னு ஒருநாள் இறந்துடுச்சு. அந்தக் குதிரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால, அத நினைச்சு ரொம்ப கஷ்டமாகிடுச்சு.

அப்பறம்தான் ஏ.கே (இப்போதிருக்கும் குதிரையின் பெயர்) வாங்கினேன். என்னோட பேரைத்தான் சுருக்கி ஏ.கேன்னு வெச்சிருக்கோம். இந்தக் குதிரை ஆரம்பத்துல குதிக்கறப்ப எல்லாம் ரொம்ப குறும்பு பண்ணும். என் பழைய குதிரை மாதிரி நினைச்சுட்டுப் பழகினப்புறம் குறும்பு போயிடுச்சு. டிரெய்னிங்ல நிறைய தடவை கீழ விழுந்திருக்கேன். அப்படி விழுறப்ப தலைலதான் அடிபடும். படிப்பையும் பார்த்துட்டு இதுலயும் ஃபோகஸ் பண்றது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. இருந்தாலும் இதை விடறதா இல்ல. உலக அளவுல நடக்கற போட்டிக்கான இந்திய டீமுக்கு மொத்தமா 4 பேரதான் செலக்ட் பண்ணியிருக்காங்க. அதுல நானும் ஒருத்தன். ஒலிம்பிக்ல தங்கப்பதக்கம் வாங்கணும். அதுதான் என்னோட ஆசை” என்றார்.

ஆதவ் கந்தசாமியின் பயிற்சியாளர் சரவணன், “ரெய்டருக்கு சொந்தமா குதிரை இருக்கறது முக்கியம். அப்பதான் ரெய்டருக்கும் குதிரைக்கும் நல்ல பிணைப்பு இருக்கும். குதிரையோட குணாதிசயங்களைப் பத்தி ரெய்டர் நல்லா புரிஞ்சுக்கவும் முடியும். சில விளையாட்டுகள், சிலருக்கு இயற்கையா வரும். அப்படித்தான் இந்த விளையாட்டு ஆதவுக்கு இயற்கையா சிறப்பா பொருந்துச்சு. நல்ல அனுபவம் இருக்கற குதிரைகளைக் கையாள்றது எளிது. இந்தக் குதிரையை ஆதவுக்காகக் கொண்டு வந்தோம். இதுக்கு முன்னாடி இந்த விளையாட்டுல குதிரைக்கு அனுபவம் இல்ல. இந்த மாதிரியான குதிரைகளைக் கையாள்றது கஷ்டம். ஆதவ் குதிரைகளோட ஈஸியா கனெக்ட் ஆகிடறார். எந்தக் குதிரைய கொடுத்தாலும் சமாளிச்சுடுவார். மொத்தமா 44 பதக்கம் ஜெயிச்சிருக்கார். 2025 ஆசியப் போட்டிகள்ல கலந்துக்குற திட்டம் இருக்கு. அதுக்காக ஒரு ஸ்பெஷல் குதிரையை வெளிநாட்டுல இருந்து கொண்டு வந்து பயிற்சி எடுக்கப் போறோம்” என்றார்.

“ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கணும்!”
குடும்பத்துடன் ஆதவ்
குடும்பத்துடன் ஆதவ்

“ஆதவுக்கு ஜம்பிங் ரொம்பப் பிடிக்கும். 10 வயசுல இருந்து நேஷனல் போட்டில கலந்துகிட்டு வர்றான். சொந்தமா குதிரை வெச்சு டிரெய்னிங் எடுக்க, மாசத்துக்கு சராசரியா ரூ.50,000 வரை செலவாகும். குதிரை, கோச் எல்லாரும் செட் ஆகறதே பெரிய வேலை. குதிரைய நல்லா பராமரிச்சு, விளையாட்டுக்குள்ள கொண்டு வர்றது சாதாரண விஷயம் இல்ல. விளையாட்டுல சாதனை பண்ணுனா, ஸ்காலர்ஷிப் எல்லாம் கிடைக்கும்னுதான் நாங்களும் இதை ஊக்குவிச்சோம். ஆனா, இந்தப் போட்டில எவ்வளவு தூரம் ஜெயிச்சாலும் கவர்ன்மென்ட் எந்தச் சலுகையும், அங்கீகாரமும் கொடுக்காதுன்னு எங்களுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது.

இந்தப் போட்டி ஒலிம்பிக்லயே இருக்கு. 1968-க்கு அப்புறம், போன வருஷம் நடந்த ஒலிம்பிக் போட்டிலதான் இந்தியாவிலிருந்து ஒருத்தர் கலந்துகிட்டிருக்கார். இந்தப் போட்டிக்கு நாளுக்கு நாள் டிமாண்ட் அதிகமாகிட்டே இருக்கு. இப்பவே அரசாங்கம் இந்தப் போட்டிக்கு அங்கீகாரம் கொடுத்து உதவி பண்ணுனா இதுல நிறைய சாதிக்க முடியும்” என்கின்றனர் ஆதவின் பெற்றோர் சம்பத்குமார் - சுபத்ரா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism